கடலின் நடுவே கரும் மேகக்கூட்டங்களுக்கு மத்தியில் விண்ணை நோக்கி தூக்கி அடித்த சூறாவளிக் காற்று..!

துருக்கியின் ஏஜியன் கடற்கரையில் நீண்ட சூறாவளி காற்று, கடலின் நடுவே சுழன்றடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. தென்மேற்கு முகலா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான டட்காவில், கடலில்  சூறாவளி  காற்று வீசியது. இந்த காட்சியை உள்ளூர் வாசிகள் தத்ரூபமாக படம்பிடித்துள்ளனர்.  Source link

பாகிஸ்தானில் சீனர்களுக்கு புல்லட் புரூப் கார்கள்| Dinamalar

இஸ்லாமாபாத் : நம் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் நெருங்கிய நட்புடன் உள்ளன. பல நாடுகளை இணைக்கும் சாலை திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சீனாவின் ஜின்ஜியாங்க் மாகாணத்தின் உய்குரில் இருந்து, பாகிஸ்தானின் கவாடர் துறைமுகத்தை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்படுகிறது. சீனா – பாகிஸ்தான் பொருளாதார பெருவழிப் பாதை என்ற பெயரில் இந்த திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் சீனாவைச் சேர்ந்தவர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் … Read more

பிரிட்டன் இளவரசர் பட்டத்தை பறிக்கும் முடிவில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் III?

லண்டன்: இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ், தனது மகனும், நாட்டின் இளவரசருமான ஹாரியின் இளவரசப் பட்டத்தையும் அவரது மனைவி மேகன் மார்க்கலின் மற்றும் குழந்தைகளுக்கான அரச பட்டங்களை பறிக்கலாம் என்ற செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. இளவரசர் சார்லஸ், வெளியிடவிருக்கும் ‘ஸ்பேர்’ புத்தகம் மற்றும் நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியால் அரச குடும்பத்திற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அவர்களின் அரச பட்டங்கள் பறிக்கப்படலாம் என்று எழுத்தாளர் டாம் போவர் கூறினார். “அவர் (பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்லஸ்) மேகன் மற்றும் இளவரசர் … Read more

பாகிஸ்தானில் பொருளாதார காரிடார் திட்டத்தில் பணிபுரியும் சீனர்களுக்கு குண்டு துளைக்காத கார்

இஸ்லாமாபாத்: உலக நாடுகளுடன் நேரடி வர்த்தகத்தை சாத்தியப்படுத்தும் நோக்கில் சீனா சார்பில் பெல்ட் அண்ட்ரோடு இனிஷியேட்டிவ் என்ற பெயரில் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை, பாகிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் ரயில்வே, சாலை,துறைமுகம், சுரங்கம், எரிசக்தி உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் சீனா பெரும்முதலீடு செய்துள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் குவாடர் துறைமுகத்தையும் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைக்கும் சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டங்கள் (சிபிஇசி) … Read more

ஐ.நா. பொது சபையில் ரஷ்ய தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

நியூயார்க்: ஐ.நா. பொதுச் சபையில் நாஜி கொள்கைக்கு எதிராக ரஷ்யா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்தது. 106 நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யாவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐ.நா. சபையில் சர்வதேச பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக, கலாச்சார, மனித உரிமைகள், அரசியல், நிர்வாகம், நீதி என 6 குழுக்கள் உள்ளன. இதில் சமூக – கலாச்சார – மனித உரிமைகள் குழுவின் கூட்டம் ஒவ்வோர் ஆண்டும் நவம்பரில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், உறுப்பு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்கள் … Read more

லாஸ் வேகஸ் நகரில், 40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பார்முலா ஒன்..!

40 ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் மீண்டும் பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெற உள்ளது. அதனை அறிவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட கலை நிகழ்ச்சி விருந்தில் நட்சத்திர வீரர்கள் லீவிஸ் ஹாமில்டன், செர்ஜியோ பெரஸ் ஆகியோர பங்கேற்றனர். லாஸ் வேகாஸ் நகரின் முக்கிய அடையாளங்களாக கருதப்படும்  சூதாட்ட விடுதிகள், ரிசார்டுகள் அருகே கார்கள் சீறிப்பாயும் வகையில் 6 கிலோமீட்டர் தூர ரேஸ் டிராக் வடிவமைக்கப்பட்டுள்ளது. Source link

ஏரிக்குள் விழுந்தது விமானம் தான்சானியாவில் 19 பேர் பலி| Dinamalar

நைரோபி : கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில், ஒரு சிறிய பயணியர் விமானம் நேற்று விபத்துக்குள்ளாகி, ஏரிக்குள் விழுந்ததில், 19 பேர் உயிரிழந்தனர். தான்சானியாவின் பிரிசிசன் விமானம், தார் ஏ சலாம் கடற்கரை நகரில் இருந்து ௪5 பயணியர் மற்றும் ஊழியர்களுடன், புகோபா நகரை நோக்கி நேற்று காலை புறப்பட்டது. விமானம் புகோபாவுக்கு அருகே 328 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது, விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. மேலும், மோசமான வானிலை மற்றும் மழை பெய்து கொண்டிருந்ததால், விமானம் … Read more

தற்கொலைப் படை தாக்குதல் சோமாலியாவில் 15 பேர் பலி| Dinamalar

மொகாதிசு : கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகரான மொகாதிசுவில், ஜெனரல் தகபதன் ராணுவ பயிற்சி முகாம் உள்ளது. இங்கு, நேற்று முன் தினம் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில், ௧௫ அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர். இந்த ஆண்டு, மே மாதம் அதிபர் ஹசன் ஷேக் மொகமுத் தலைமையில், அல் குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் அமைப்பை எதிர்கொள்வது குறித்து, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதையடுத்து, கடந்த வாரம், மொகாதிசுவில் நடத்தப்பட்ட … Read more

சுட்ட இடத்துக்கு வரும் இம்ரான் கான்; பாகிஸ்தான் அரசு பரபரப்பு உத்தரவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த 3ம் தேதி பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்று இருந்தார். அப்போது அவரை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டார். நாட்டு மக்களை தவறாக வழிநடத்தியதால் இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டதாக, கைதான நபர் போலீசாரிடம் வாக்குமூலம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தார். இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இம்ரான் கான் லாகூரில் உள்ள அவருக்கு சொந்தமான … Read more

சித்திரவதை செய்து உயிரைக் குடிக்கும் Gympie-Gympie செடியை ஆசையாய் வளர்க்கும் நபர்!

வாழ்க்கையில், போர் அடிப்பதாக இருந்தாலோ, அல்லது அலுப்பாக இருந்தாலோ, பெரும்பாலானோர் மனதிற்கு பிடித்த காரியங்களை செய்வார்கள். ஆனால், பிரிட்டனை சேர்ந்த ஒரு அதிசய நபர், தனக்கு வாழ்க்கை ரொம்ப போராக இருப்பதால், மிகவும் ஆபத்தான செடி ஒன்றை வளர்த்து வருகிறார். ரிஸ்க் என்பது இவருக்கு ரஸ்க் சாப்பிடுவதைப் போல உள்ளதாக தெரிகிறது. பல ஆபத்தான மற்றும் கொடிய தாவரங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் Gympie-Gympie என்ற தாவரமானது உலகிலேயே மிகவும் ஆபத்தான தாவரமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், … Read more