ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடியாது: ஆஸ்திரேலியா

கான்பரா: ஜெர்சலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடியாது என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா அறிவித்தது. இந்த நிலையில், இம்முடிவை ஆஸ்திரேலியா மாற்றியுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங் பேசும்போது, “ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த முன்னாள் அரசின் முடிவை நாங்கள் திரும்பப் பெறுகிறோம். ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடியாது இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே சமாதானப் பேச்சுக்கள் மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும். … Read more

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 21 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை… மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியிடை நீக்கம்

அந்தமானில் 21 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜிதேந்திர நரேன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நிதிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்த இவர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு … Read more

பொருளாதார நடவடிக்கைகளின் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்ட பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ்

லண்டன்: தனது தலைமையிலான அரசு செய்த பொருளாதார நடவடிக்கைகளில் செய்த தவறுகளுக்கு பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். பிரிட்டனின் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற லிஸ் ட்ரஸ் பிரிட்டனின் மந்தமான பொருளாதாரத்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், லிஸ் ட்ரஸின் இந்த முடிவு பிரிட்டன் பொருளாதாரத்தை உயர்த்த உதவவில்லை. இதனால், … Read more

பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பாதுகாக்கும் – பல்டி அடித்த அமெரிக்கா

வாஷிங்டன், எந்த வித ஒற்றுமையும் இன்றி அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான் தான் உலகின் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். ஜோ பைடனின் பேச்சுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. மேலும், அமெரிக்க தூதரரை நேரில் அழைத்து பாகிஸ்தான் தனது அதிருப்தியை தெரிவித்தது. பாகிஸ்தான் ‘ஆபத்தான நாடு’ கருத்தில் இருந்து அமெரிக்கா தற்போது பல்டி அடித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க வெள்ளைமாளிகை துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் படேல் … Read more

மினி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிகுறைப்பு திட்டங்களை திரும்பப் பெறுவதாக இங்கிலாந்து அரசு அறிவிப்பு!

லண்டன், இங்கிலாந்து அரசு சமீபத்தில் கொண்டுவந்த வரிகுறைப்பு திட்டங்களை முழுமையாக திரும்பப் பெறுவதாக அந்நாட்டின் புதிய நிதி மந்திரி ஜெர்மி ஹன்ட் அறிவித்தார். இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். கடந்த மாதம் கொண்டுவந்த சர்ச்சைக்குரிய ‘மினி பட்ஜெட்டில்’, நிறுவனங்களுக்கான வரி உயர்வு, அதிக வருவாய் உள்ளவர்களுக்கு 45 சதவீத வரிஉயர்வு போன்றவற்றை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மினி பட்ஜெட்டில் … Read more

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த முடிவை திரும்பப் பெறப் போவதில்லை – ஆஸ்திரேலியா

சிட்னி, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இருநாடுகளும் ஜெருசலேமை தங்கள் தலைநகராகக் கூறுகின்றனர்.1967ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரில், ஜோர்டானிடம் இருந்து கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. அதன்பின் தங்கள் நாட்டின் ஒரு நிரந்தர பகுதியாக அப்பகுதியை அறிவித்தது. இதனை சர்வதேச சமூகம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், ஜெருசலேம் விவகாரம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் கடைசியாக நடந்த … Read more

ஸ்டார்லிங்க் இன்டர்நெட் செலவு தொடர்பான கோரிக்கையை திரும்ப பெற்றுவிட்டோம்: எலோன் மஸ்க்

வாஷிங்டன்: உக்ரைனில் ஸ்டார்லிங்க் இன்டர்நெட் வசதிகளுக்கு செலவாகும் தொகையை நிதியுதவியாக வழங்க வேண்டும் என்ற நிதிக் கோரிக்கையை ஸ்பேஸ்எக்ஸ் திரும்பப் பெறுவதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் உள்ள எலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வலையமைப்பிற்கு பணம் செலுத்துவது தொடர்பாக பென்டகன் பரிசீலிப்பது பற்றி இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, பிரபல செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் உக்ரைனுக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்டார்லிங் செயல்பாட்டிற்கு ஆகும் செலவை ஸ்பேஸ்எக்ஸ் … Read more

இலங்கையில் மீண்டும் பெட்ரோல் விலை குறைப்பு: லிட்டருக்கு ரூ.40 குறைத்து அரசு உத்தரவு!

கொழும்பு, கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பொருளாதாரம் முன்னோடியில்லாத வகையில் இந்த ஆண்டு 9.2 சதவீதம் சுருங்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. இலங்கையின் வருடாந்திர பணவீக்க விகிதம் 70 சதவீதத்தை நெருங்கியுள்ளது. எனினும், எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இலங்கை அரசு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை மீண்டும் குறைத்துள்ளது. அவ்வப்போது விலைவாசி உயர்வால் மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இலங்கையில் பெட்ரோல் … Read more

ட்ரோன் மூலமாக உக்ரைனில் தாக்குதல் நடத்திய ரஷ்யா

உக்ரைனின் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா, ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.  உக்ரைன் தலைநகர் கீவ்விலும், சுமியின் கிழக்குப் பகுதியிலும் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் ஈரானில் தயாரிக்கப்பட்டவை என கூறப்படுகிறது. ஆளில்லா விமானத் தாக்குதல்களில் 6 பேரும், ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 பேரும் கொல்லப்பட்டனர். குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொதுமக்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.  Source link

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு புக்கர் பரிசு!

லண்டன், இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசை புனைகதைக்கான பிரிவில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக வென்றுள்ளார். எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவம் மிக்க விருதாக ‘சர்வதேச புக்கர் பரிசு’ கருதப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு ஆண்டுதோறும் இந்த புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு, உலகம் முழுவதிலும் இருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இலங்கை எழுத்தாளர் … Read more