கனடா சுவாமிநாராயண் கோவிலில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களால் பெரும் பரபரப்பு!

கனடா சுவாமிநாராயண் கோயில்: கனடாவின் டொராண்டோவில் உள்ள  சுவாமிநாராயண் கோயிலில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் மற்றும் நாசவேலைகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கனடா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. அந்த ட்வீட்டில், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. சுவாமிநாராயண் கோவிலின் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்திய உயர் தூதரகத்தின் ட்வீட்டிற்கு முன்னதாகவே, பல கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்துக்கள் சுவாமிநாராயண் … Read more

தெற்காசியாவின் உயரமான இலங்கை லோட்டஸ் கோபுரம் மக்களுக்காக இன்று திறக்கப்பட்டது!

தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகிறது. தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் கொழும்பு மத்திய பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன. சுமார் 7 வருடங்களில் இது தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முதல் நாட்டு மக்கள் அனைவரும் தாமரை கோபுரத்தினை நேரில் சென்று பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அதன்படி மக்கள் கோபுரத்தின் தரை … Read more

மலேசிய இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சாமிவேலு காலமானார்: நாளை இறுதி ஊர்வலம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோலாலம்பூர்: மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சாமிவேலு தனது 86வது வயதில் இன்று (செப்.,15) அதிகாலை காலமானார். மலேசியாவில் இருக்கும் தமிழ் அரசியல் தலைவர்களில் முக்கியமான சாமி வேலு. மலேசியாவின் இபோ நகரில் 1936ம் ஆண்டு பிறந்த இவர், 1959ம் ஆண்டு மலேசிய அரசியிலில் கால்பதித்தார். பல்வேறு முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார். மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று … Read more

சர்வதேச ஜனநாயக தினம் | எங்கேயும், எப்போதும், எல்லோராலும்…!

ஜனநாயகம் என்பது ஒரு வழிமுறை. அது ஒரு இலக்கும் கூட. சர்வதேச சமூகத்தின் முழு பங்களிப்பு மற்றும் ஆதரவுடன் எட்டப்பட வேண்டிய இலக்கு. தனிநபர்கள், பொதுச் சமூகம், அரசாங்கம் என அனைத்திற்கும் இதில் பங்கு இருக்கிறது. எங்கேயும், எப்போதும், எல்லோராலும் அனுபவிக்ககூடியதே ஜனநாயம் – இப்படித்தான் ஜனநாயகம் குறித்து ஐ.நா. தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் விளக்கம் கொடுத்துள்ளது. யோசித்துப் பாருங்களேன்.. நாம் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எந்த மொழியைப் பேச வேண்டும், … Read more

ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்திய வம்சாவளியினர்… வெள்ளை மாளிகை தகவல்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்திய வம்சாவளியினர் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இருந்த அதிபர்களைவிட, ஜோ பைடன் இந்திய வம்சாவளியினருக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்படுகிறது. மேயர்கள் உள்பட அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 4 பேர் உள்ளதுடன், 20-க்கும் மேற்பட்டவர்கள் முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு அலுவலகங்களுக்கு 40-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். Source link

தனது பணத்தையே கொள்ளையடித்த வினோத பெண்| Dinamalar

பெய்ரூட்: லெபனானில் தனது வங்கி சேமிப்புத் தொகை 13,000 டாலரை (சுமார் ரூ.10.33 லட்சம்) திருப்பித் தர அதிகாரிகள் கெடுபிடி செய்ததால், பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி சலி ஹபீஸ் என்ற பெண் அதனை ‘கொள்ளையடித்த’ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. லெபனான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் அங்குள்ள வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அவசரகாலத்திற்கு சிக்கலில் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் சலி ஹபீஸ் … Read more

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியது| Dinamalar

கார்கிவ்: உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். கடந்த 6 மாத காலமாக ரஷ்ய படையினர் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரஷ்யா பல்வேறு நகரங்களை கைப்பற்றியது. இதில் கார்கிவில் உள்ள இஷீயும் நகரை மீட்ட ராணுவ படையினரை சந்தித்து வீடு திரும்புகையில் எதிரே வந்த கார் இவர் கார் மீது மோதியது. இதில் செலன்ஸ்கி கார் , பாதுகாப்பு வாகனமும் சேதமுற்றது. விபத்து குறித்து விசாரிக்கப்பட்டு … Read more

கோவிட் 19 முடிவுக்கு வருவது கண்ணில் தெரிகிறது-உலக சுகாதார அமைப்பு

கோவிட் 19 முடிவுக்கு வரும் நாள் கண்ணில் தெரிகிறது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. வைரஸை ஒழித்துக் கட்டுவதில் அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. இந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 60 லட்சம் பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்து விட்டனர். இதுவரை இல்லாத வகையில் உலகம் இப்போது முன்னேற்ற நிலையை அடைந்துள்ளது என்றும், இன்னும் கொரோனா முற்றிலும் முடிவடையாவிட்டாலும், முடிவு கண்ணுக்குத் தெரிகிறது என்றும் உலக சுகாதார … Read more

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட அவசர நிலை.. லேசான காயங்களுடன் உயிர்தப்பிய 141 பயணிகள்!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மஸ்கட்டில் இருந்து புறப்பட்ட போது அவசர நிலை ஏற்பட்டதில் விமானம் திரும்ப வரவழைக்கப்பட்டது. இதில் இருந்த 141 பயணிகள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மஸ்கட்டில் இருந்து கொச்சி வரை செல்லும் இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் இறக்கையில் புகை வருவதை மற்றொரு விமானத்தில் உள்ள விமானி கவனித்து தகவல் அளித்ததையடுத்து அவசர நிலையால் விமானம் தரையிறக்கப்பட்டது. காக்பிட் பகுதியில் … Read more

தாய்லாந்தில் ராணுவ கல்லூரியில் துப்பாக்கிச்சூடு; 2 வீரர்கள் உயிரிழப்பு

பாங்காக், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் ராணுவ கல்லூரி ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த கல்லூரி வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது கல்லூரியில் பணியில் இருந்த 59 வயதான ராணுவ வீரர் ஒருவர் திடீரென சக வீரர்களை துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவ வீரர் சுட்டதில் 3 வீரர்களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து அந்த ராணுவ வீரர் அங்கிருந்து … Read more