இலங்கைக்கு இந்த ஆண்டில் மட்டும் 380 கோடி டாலர் உதவி – இந்தியா தகவல்

புதுடெல்லி: இலங்கையில் உள்ள தமிழ் சிறுபான்மையினர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுகளை ஏற்படுத்துவதில் அந்நாட்டு அரசு அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாகவும், குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றம் எதுவும்இல்லை என்றும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் (யுஎன்ஹெச்ஆர்சி) இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. அந்த வகையில், இலங்கை அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துதல், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குதல், இனப்பிரச்சினை தீர்வுக்கான அர்ப்பணிப்பு … Read more

ரஷ்யா, சீனா இடையிலான உறவு வலுவடைகிறது

பெய்ஜிங்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால் சர்வதேச அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து உள்ளன. இதுகுறித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செயல்படும் சீன திட்டம் அமைப்பின் இயக்குநர் யூன் சன் கூறும்போது, “அமெரிக்கா, சீனா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா உடனான பொருளாதார உறவை துண்டித்துள்ளன. உலக நாடுகள் பல்வேறு அணிகளாக பிரிந்து செயல்படுகின்றன. உக்ரைன் போரின் எதிர்விளைவாக ரஷ்யா, … Read more

கத்தாரில் பள்ளி பேருந்து உள்ளே கேரள சிறுமி மூச்சு திணறி பலி| Dinamalar

தோஹா, கத்தாரில், ஆரம்ப பள்ளியில் படித்து வந்த கேரளாவை சேர்ந்த 4 வயது சிறுமியை பள்ளி பேருந்துக்குள் வைத்து தவறுதலாக பூட்டியதை அடுத்து சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்தார்.கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செங்கனசேரியை சேர்ந்த அபிலாஷ் சாக்கோ, சவும்யா தம்பதியினர், மேற்காசிய நாடான கத்தாரில் பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு, 4 வயதில் மின்ஸா மரியம் ஜேகப் என்ற மகள் இருந்தார்.கத்தாரின் அல் வாக்ராவில் உள்ள ஆரம்ப பள்ளியில் படித்து வந்த இவர், 11ம் தேதி காலை பேருந்தில் பள்ளிக்குச் … Read more

ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள்கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

லண்டன், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல், ஓக் மரத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் உயிர்பிரிந்த பால்மோரல் கோட்டையில் இருந்து கடந்த 11-ந்தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. முதலில் உடல் அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. அங்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு மரியாதை செலுத்தினர். … Read more

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் பின்வாங்குகிறதா.. உண்மை என்ன?

கீவ்: உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷ்ய ராணுவம் பின்வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை மறுத்துள்ள ரஷ்ய பாதுகாப்பு வட்டாரங்கள், “இது போர் தந்திரம்” என்று தெரிவித்துள்ளன. சோவியத் யூனியனில் இருந்து கடந்த 1991-ம் ஆண்டில் உக்ரைன் தனியாகப் பிரிந்தது. அதன்பிறகும் ரஷ்யாவுடன் அந்த நாடு நட்பு பாராட்டி வந்தது. கடந்த 2014-ம் ஆண்டில் அப்போதைய உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக புரட்சி வெடித்து, அவரது ஆட்சி அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து உக்ரைனின் கிரிமியா … Read more

பயங்கரவாதத்துக்கு நிதியுதவிபாக்., செயல்பாடு மிக மோசம்| Dinamalar

இஸ்லாமாபாத்:பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பது மற்றும் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக ஆசியா பசிபிக் குழு நடத்திய ஆய்வில் பாகிஸ்தான் 11 இலக்குகளில் 10ல் மிக மோசமான நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பது மற்றும் பணப் பரிமாற்ற மோசடியைக் கண்காணிக்க எப்.ஏ.டி.எப். எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பதில் நாடுகளின் செயல்பாடுகள் குறித்து இந்த அமைப்பு பட்டியலிடுகிறது. இதன் அடிப்படையில் தான் … Read more

சிங்கப்பூரில் குளிர்பான பாட்டில் திருடிய இந்தியருக்கு சிறை

சிங்கப்பூர், சிங்கப்பூரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள புக்கிட் மேரா நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 61 வயது முதியவர் ஜெஸ்விந்தர் சிங் தில்பரா சிங். கடந்த மாதம் 26-ந்தேதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஜெஸ்விந்தர் சிங், அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே இருந்த குளிர்சாதன பெட்டியின் கதவை உடைத்து, 3 சிங்கப்பூர் டாலர் (சுமார் ரூ.170) மதிப்புடைய 3 குளிர்பான பாட்டில்களை திருடி சென்றார். இது … Read more

பிரெஞ்சு சினிமா இயக்குநர் கோடார்ட் காலமானார்| Dinamalar

பாரிஸ் : பிரெஞ்ச் – சுவிஸ் திரைப்படத் துறையின் பழம்பெரும் இயக்குநரான ழான் லுக் கோடார்ட், 91, முதுமை காரணமாக நேற்று காலமானார் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 1930ல் பிறந்த கோடார்ட் பட்டப்படிப்பை முடித்ததும், திரைத்துறை பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.இவரது முதல் திரைப்படமான, ஆல் பாய்ஸ் ஆர் கால்டு பேட்ரிக் 1959ல் வெளியானது. பழமை பாணியை நிராகரித்து, 1960ல் கோடார்ட் இயக்கிய பிரெத்லெஸ் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, இவரை புகழின் உச்சிக்கு … Read more

சீனாவில் புதிதாக 1,048 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,094 பேருக்கு … Read more

பாகிஸ்தான் செயல்பாடு மிக மோசம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத் : பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பது மற்றும் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக, ஆசியா, பசிபிக் குழு நடத்திய ஆய்வில், பாகிஸ்தான், 11 இலக்குகளில், 10ல் மிக மோசமான நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. சர்வதேச அளவில், பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பது மற்றும் பணப் பரிமாற்ற மோசடியைக் கண்காணிக்க, எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி நடவடிக்கை பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பட்டியல்: பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பதில், … Read more