“எங்களுக்கு விடுதலை கிடைத்து 43 ஆண்டுகள் ஆகிவிட்டன” – பைடனுக்கு ஈரான் பதிலடி

தெஹ்ரான்: “43 வருடங்களுக்கு முன்னரே எங்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பதிலடி கொடுத்துள்ளார். ஜனநாயகக் கட்சி தொடர்பான பேரணி ஒன்றில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் அவரது ஆதரவாளர்கள் ஈரானில் நடக்கும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பைடன் பதிலளிக்கும்போது, “கவலை வேண்டாம். நாம் ஈரானை விடுவிப்போம். ஆனால், விரைவில் அவர்களே அவர்களை விடுவித்துக் கொள்வார்கள்” என்று தெரிவித்தார். பைடனின் இந்தக் கருத்துக்கு … Read more

உலக அழகி போட்டியில் மோசடி! பிரியங்கா சோப்ரா பட்டம் வென்றது குறித்து சக போட்டியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!

வாஷிங்டன், இந்தியாவை சேர்ந்த பிரியங்கா சோப்ரா 2000ம் ஆண்டில் நடந்த உலக அழகி போட்டியில், உலக அழகியாக தேர்வாகி பட்டம் சூடினார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. உலக அழகி போட்டியில் மோசடி நடந்ததாக ‘மிஸ் பார்படாஸ்’ அழகி போட்டியில் பட்டம் வென்ற லீலானி மெக்கோனி திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.உலக அழகி போட்டியில் ‘தில்லுமுல்லு’ நடைபெற்றதால் தான் பிரியங்கா சோப்ராவால் வெற்றி பெற முந்ததாக லீலானி மெக்கோனி … Read more

மொபைல் போனை நீண்டநேரம் பயன்படுத்தாதீர்கள்…! ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிர்ச்சி தகவல்கள்

சென்னை, நாம் அனைவரும் டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாகிவிட்டோம். நாம், நாள் முழுவதும் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு கணினி திரையை நோக்கிக்கொண்டு, விசைப்பலகைக்கு மேல் குனிந்து அதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் அல்லது தொடர்ந்து, நீண்டநேரம் நம் கைகளில் உள்ள ஸ்மார்ட்போன்களை பார்க்கிறோம். இந்நிலையில், டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாகிவிட்ட மனிதர்கள், தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு எதிர்காலத்தில் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாவார்கள் என்பதை கண்டறிய டோல்ப்ரீபார்வர்டிங்.காம் என்ற நிறுவனம் ஆராய்ச்சி நடத்தியது. அதன் முடிவில், ஆராய்ச்சியாளர்கள் 3டி(முப்பரிமாண) முறையில், மனிதனை … Read more

ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: இதுவரை 277 பேர் பலி; 14,000 பேர் கைது: ஐ.நா தகவல்

தெஹ்ரான்: ஈரானில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தையொட்டி இதுவரை 277 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஈரானில் மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. குழுவைச் சேர்ந்த ஜாவத் ரஹ்மான் கூறும்போது, “கடந்த 6 வாரங்களாக ஈரானில் நடக்கும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், சட்ட மாணவர்கள் என இதுவரை 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானின் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் … Read more

உக்ரைன் பூங்காவில் உள்ள கங்காரு, ஒட்டகம் விலங்குகளை கொன்று சாப்பிட்டு உயிர் பிழைத்த ரஷிய வீரர்கள்

கீவ், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 254-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போரில் கைப்பற்றிய உக்ரைனின் சில நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இதனை தொடர்ந்து போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு … Read more

இம்ரான்கானை சுட்டவரின் வாக்குமூலம் வெளியான விவகாரம்: போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

லாகூர், பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான்கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகிறார். மேலும், பாகிஸ்தானின் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என கூறி வருகிறார். ஷபாஸ் … Read more

வட கொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி: தென் கொரியா தகவல்

சியோல்: வட கொரியா நேற்று நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது. வட கொரியத் தலைநகர் பியோங்கியாங்கின் சுனான் பகுதியிலிருந்து நேற்று (வியாழக்கிழமை) காலை 7.40 மணியளவில் கிழக்கு கடல் பகுதியிலிருந்து நீண்ட தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தி வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. அதன்பிறகு, குறுகிய கால இடைவெளியில் அந்த நாடு குறுகிய இலக்குகளை சென்று தாக்கும் 2 ஏவுகணைகளையும் சோதனை செய்துள்ளது. இந்த இரு ஏவுகணைகளையும் தெற்கு பியோங்கன் … Read more

துப்பாக்கிச்சூட்டிற்கு பாக்., பிரதமர் உள்ளிட்ட 3 பேர் காரணம்: இம்ரான்கான் குற்றச்சாட்டு| Dinamalar

இஸ்லாமாபாத்: தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், உள்துறை அமைச்சர், ஐஎஸ்ஐ தலைவர் ஆகியோரே காரணம் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளதாக, அவரது கட்சி தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் பார்லிமென்டிற்கு முன்னதாக தேர்தல் நடத்த வலியுறுத்தி இம்ரான் கான் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப்(பிடிஐ) சார்பில் பேரணி நடத்தப்படுகிறது. இதன்படி, பஞ்சாப் மாகாணத்தில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்தை செல்லும் இந்த பேரணி பஞ்சாப் மாகாணத்தின் வாசிராபாதை நேற்று அடைந்தது. அப்போது, ‘கன்டெய்னர்’ பொருத்தப்பட்ட … Read more

இம்ரான் கானை கொல்லவே சுட்டேன் கைதான நபர் வாக்குமூலம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இம்ரான் அடுத்த 3 வாரங்களுக்கு நடக்க முடியாது என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு … Read more

எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஆட்டம் கண்ட ட்விட்டர்… முழு விவரம்!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில், ட்விட்டரை வாங்கிவிட்ட பின், அதை சுற்றி பல்வேறு செய்திகள் தொடர்ந்து வட்டமிட்டு வந்தன. ட்விட்டர் ஊழியர்களின் நிலை, தலைமை பொறுப்பாளர்களின் நீக்கம், ப்ளூ டிக் பயனர்களுக்கு கட்டணம் என தினமும் எலான் மஸ்க் ஒரு குண்டை போட்டுக்கொண்டேதான் இருந்தார். இந்நிலையில், இன்று காலை முதல் இந்தியாவில் ட்விட்டர் பலருக்கும் பிரச்சனையாக உள்ளது என வேறு சில சமூக வலைதளங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ட்விட்டர் முகப்பு பக்கத்தை திறக்க … Read more