குடியிருப்பு கட்டிடத்தின் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்த பேராசிரியை கைது..!
நொய்டாவில் குடியிருப்பு கட்டிடத்தின் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்த பெண் கைது செய்யப்பட்டார். கோட்வாலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நுழைந்த பேராசிரியை சுதபா தாஸ், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஒருவரிடம் வாக்குவாதம் செய்ததோடு திடீரென அந்த காவலரின் கன்னத்தில் பலமுறை அறைந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி வெளியான நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட பேராசிரியை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். Source link