பணவீக்கத்தால் வாழ்க்கை செலவு அதிகரிப்பு | பிரிட்டனில் ஒரு நாள் உணவை தவிர்க்கும் லட்சக்கணக்கான மக்கள்

லண்டன்: உலகில் உள்ள வளர்ந்த நாடுகளில் ஒன்றாக பிரிட்டன் உள்ளது. ஆனால், பணவீக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக அங்கு நிலைமை சரியில்லை என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஃபுட் ஃபவுண்டேஷன் சாரிட்டி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிட்டனின் உணவுப் பாதுகாப்பின்மை காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் ஒரு நாள் முழுவதும் உணவைத் தவிர்ப்பதாக தெரிய வந்துள்ளது. பிரிட்டனில் கடந்த சில மாதங்களாக நிலைமை ஏற்கெனவே மோசமடைந்து வருகிறது. நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால் … Read more

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக சுவெல்லா அறிவிப்பு..!

இந்திய வம்சாவளியினத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர்  சுவெல்லா பிரேவ்மான இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அரசு சார்ந்த கோப்புகளையும் ஆவணங்களையும் அவர் நாடாளுமன்ற செயலருக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்த தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள சுவெல்லா தவறே செய்யவில்லை என்பது போல் நடிப்பது, யாரும் அதை அறியவில்லை என்பது போலும் நாம் அதைச் செய்யவே இல்லை என்பது போலும் இருப்பது. ஏதோ மாயாஜாலம் போல எல்லாம் நல்லபடியாக நடந்து விடும் என்று கருதுவதெல்லாம் … Read more

சீன ராணுவத்தில் பிரிட்டன் வீரர்கள்| Dinamalar

பீஜிங் : சீன வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பிரிட்டனின் முன்னாள் விமானப்படை வீரர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். உலக அளவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகளை சீனா எடுத்து வருகிறது. தைவானை தன்னுடன் இணைக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரிட்டன் விமானப்படையின் ஓய்வு பெற்ற விமானிகளை பெரும் சம்பளம் கொடுத்து தங்கள் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க சீனா ஏற்பாடு செய்துள்ளது.இவ்வாறு 30 விமானிகள் சீனா சென்றுள்ளதாக பிரிட்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகளின் … Read more

ஸ்வீடனில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக 26 வயது இளம் பெண் நியமனம்!

ஸ்வீடனில் 26 வயது இளம் பெண் ரோமினா பூர்மோக்தாரி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்ஸன் தலைமையிலான அமைச்சரவையில் ஈரான் வம்சாவளியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான ரோமினா பூர்மோக்தாரி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் ஸ்வீடனின் 27 வயது இளம் அமைச்சர் என்ற இதற்கு முந்தைய அமைச்சர் ஒருவரின் சாதனையை முறியடித்துள்ளார். Source link

எகிப்து – இரும்புக் கழிவுகளை பயன்படுத்தி சிலைகளை வடிவமைத்த சிற்பக் கலைஞர் ..!

எகிப்தைச் சேர்ந்த 29 வயதான சிற்பக் கலைஞர் ஒருவர், இரும்புக் கழிவுகளை பயன்படுத்தி பல்வேறு சிலைகளை வடிவமைத்துள்ளார். அந்நாட்டின் தலைநகர் கெய்ரோவின் மையப்பகுதியில் “கஸ்ர் எல் நில் லயன்ஸ்” என்றழைக்கப்படும் இரண்டு சிங்கங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போன்று, சுமார் 3 அடி உயரத்தில் 300 கிலோ எடையில் பெரிய சிங்க சிலைகளை வடிவமைத்த இப்ராஹிம் சாலா, அவற்றை கண்காட்சியில் காட்சிப்படுத்தினார். சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத வண்ணம், இரும்புக் கழிவுகளை பயன்படுத்தி சிலைகளை வடிவமைத்ததாக அவர் … Read more

பாக்., பயங்கரவாதிக்கு தடை சீனா மீண்டும் முட்டுக்கட்டை| Dinamalar

நியூயார்க், :பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதி ஷாஹித் மகமூதை, சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் முயற்சிக்கு, சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து, தடை விதிக்கப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது தொடர்பாக, கடந்த நான்கு மாதங்களில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தாக்கல் செய்த மூன்று மனுக்களுக்கு, நம் … Read more

கோத்தபய ராஜபக்சே நேரில் ஆஜராக இலங்கை சுப்ரீம் கோர்ட் உத்தரவு| Dinamalar

கொழும்பு :யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு மனித உரிமை ஆர்வலர்கள் 2011ல் மாயமான வழக்கில், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நேரில் ஆஜராக, ‘நோட்டீஸ்’ அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமான போர் 2009ல் முடிவுக்கு வந்தபோது, அந்தநாட்டு அதிபராக மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்தார். அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே ராணுவச் செயலராக இருந்தார். இலங்கை போர் முடிவுக்கு வந்த பின், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் அடுத்தடுத்து மாயமாகினர்; … Read more

”கிளைம்பிங் சாம்பியன்ஷிப்”பில் ஹிஜாப் அணியாததால் சர்ச்சையில் சிக்கிய ஈரான் வீராங்கனை..!

தென் கொரியாவில் நடைபெற்ற ”கிளைம்பிங் சாம்பியன்ஷிப்”பில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றுவிட்டு தாயகம் திரும்பிய ஈரான் வீராங்கனை ”எல்னாஸ் ரெகாபி”க்கு டெஹ்ரான் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்மையில், ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் கோமா நிலையில் உயிரிழந்ததை கண்டித்து உலகளவில் போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், 33 வயதான எல்னாஸ் ரெகாபி பர்தா அணியாமல் போட்டியில் பங்கேற்றது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Source link

மீண்டும் முழு ஊரடங்கு: அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றில் … Read more

சார்லஸ் – டயானா திருமண கேக் ஏலத்தில் விற்பனை – 41 ஆண்டுகளாக கேக்கை பதப்படுத்தி வைத்த முதியவர்.!

40 ஆண்டுகளுக்கு முன், சார்லஸ் – டயானா திருமணத்தின்போது பரிமாறப்பட்ட கேக் துண்டு ஒன்று ஏலத்தில் விடப்படுகிறது. 1981ம் ஆண்டு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த அரச குடும்ப திருமணத்தில் பங்கேற்ற 3,000 விருந்தினர்களுள் ஒருவரான நிகெல் ரிக்கெட்ஸ்,  தனக்கு பரிமாறப்பட்ட திருமண கேக்கை, 41 ஆண்டுகளாக பதப்படுத்தி வைத்துள்ளார். கடந்தாண்டு அவர் உயிரிழந்த நிலையில், தற்போது இந்த கேக் ஏலத்தில் விற்கப்பட உள்ளது. இதற்கு முன் கடந்த 2014ம் ஆண்டு, அதே திருமணத்தில் பரிமாறப்பட்ட கேக் … Read more