துபாயில் பார்வையாளர்களுக்கு வழிகாட்டவும், பல மொழியில் பேசவும் வடிவமைக்கப்பட்ட ரோபோ…

துபாயில் உள்ள புயூட்சர் அருங்காட்சியகத்தில், மிகவும் மேம்படுத்தப்பட்ட மனித உருவ ரோபோவை, ஊழியராக பணியமர்த்தியுள்ளனர். பல மொழிகளில் பேசும் திறனுடைய Ameca எனப்பெயரிடப்பட்ட இந்த ரோபோ, பார்வையாளர்களுக்கு வழிகாட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த ரோபோ பெண் ஊழியருடன் கலந்துரையாடும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.  Source link

வெள்ளை மாளிகை வன்முறை – டொனால்டு ட்ரம்ப் ஆஜராக சம்மன்!

அமெரிக்க வெள்ளை மாளிகை வன்முறை விவகாரத்தில், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். அதிபர் தேர்தல் தோல்வியை தாங்காத முடியாத டாெனால்டு ட்ரம்ப், தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு வன்முறையை ஏற்படுத்தினார். அமெரிக்க … Read more

Video: பெண்ணின் கண்ணில் 23 லென்ஸ் – வரிசையாக வெளியே எடுத்த மருத்துவர்கள் – அது எப்படி…?

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி, இன்ஸ்டாகிராமில் கேடரினா குர்தீவா என்ற அமெரிக்க கண் மருத்துவர், வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். ஒரு மாதத்திற்கு முன் போட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அந்த வீடியோவில், தன்னிடம் சிகிச்சை பெற வந்த பெண்ணின் கண்ணில் இருந்து, வரிசையாக 23 காண்டாக்ட் லென்ஸ்களை கேடரீனா வெளியே எடுப்பது பதிவாகியுள்ளது.  மேலும் படிக்க | உல்லாசத்தால் உச்சம் தொட்ட மோசடி ராணி… பொறியில் சிக்கிய அரசியல் எலிகள் – யார் … Read more

வெடிகுண்டு தாக்குதல் 18 சிரிய வீரர்கள் பலி| Dinamalar

பெய்ரூட் : டமாஸ்கஸ் புறநகரில் பஸ்சில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிரிய ராணுவ வீரர்கள் 18 பேர் உயிர்இழந்தனர். காயம் அடைந்த 27 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்காசிய நாடான சிரியாவின் டமாஸ்கஸ்நகரம் அருகே ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த பஸ் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 18 வீரர்கள் அதே இடத்தில் உயிர்இழந்தனர். காயம் அடைந்த 27 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பெய்ரூட் : … Read more

அமெரிக்கா வந்த பாக்., நிதியமைச்சருக்கு எதிராக திருடன், திருடன் என கோஷம்| Dinamalar

வாஷிங்டன்: அமெரிக்கா வந்த பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர்ரை பார்த்து, ” திருடன்” மற்றும் ” பொய்யர்” என அடையாளம் தெரியாத சிலர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியால் தவித்து வருகிறது. இதனையடுத்து சர்வதேச அமைப்புகளின் உதவியை அந்நாடு நாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து பேச அந்நாட்டு நிதியமைச்சர் இஷாக் தர், அமெரிக்கா வந்தார். வாஷிங்டன் விமான நிலையத்திற்கு, உதவியாளர்களுடன் … Read more

ஆப்கனில் கல்லூரி நுழைவுத்தேர்வு எழுத பெண்களுக்கு தாலிபன்கள் அனுமதி..!

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதன்முறையாக, பல்கலைக்கழக நுழைவு தேர்வில் பங்கேற்க, பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆப்கனில் பெண்கள் கல்வி கற்பதற்கு, தாலிபன்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில், காபூல் பல்கலைக்கழகத்தில் நுழைவு தேர்வு எழுதுவதற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் நேற்று முதன்முறையாக அனுமதிக்கப்பட்டனர். தலைநகர் காபூலில் கடந்த மாதம் பயிற்சி மையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 53 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது. Source link

உலக அளவில் வீழ்ச்சியடையும் வனவிலங்குகளின் எண்ணிக்கை: ஆய்வில் அதிர்ச்சி

லண்டன்: 1970-ஆம் ஆண்டு முதல் உலக அளவில் வனவிலங்குகளின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது என்று உலக வன உயிரின நிதியம் (WWF) தெரிவித்துள்ளது. உலகில் 56,441 வனவிலங்குகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஐ.நா. சபையின் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உலக வன உயிரின நிதியம் வெளியிட்ட அறிக்கையில், “2018-ஆம் ஆண்டின் தரவுகளின் … Read more

கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 2020-ல் இந்தியாவில் 5.6 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர் – உலக வங்கி அறிக்கை

ஜெனீவா, உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- சர்வதேச அளவில் கரோனா பாதிப்பால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொழிலக நடவடிக்கைகள் ஸ்தம்பித்து உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்தது. கரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த 2020-ல் மட்டும் உலகளவில் 7.1 கோடி பேர் மிக வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டனர். இதில், 79 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, கரோனா பேரிடரால் மட்டும் இந்தியாவில் 5.6 கோடி பேர் கடுமையான வறுமை நிலைக்கு ஆளாகினர். சர்வதேச தீவிர வறுமை … Read more

சொந்தக்கட்சி எம்.பி.க்களிடம் இருந்து இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடி வரிகுறைப்பு திட்டங்கள் மறுபரிசீலனையா?

லண்டன், இங்கிலாந்தின் புதிய பிரதமராகி உள்ள பெண் தலைவர் லிஸ் டிரஸ், கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் தகவல்களை வெளியிட்டார். கடந்த 23-ந்தேதி வெளியான மினி பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்டு (சுமார் ரூ.4.5 லட்சம் கோடி) வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன்வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது நிதிச்சந்தைகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரதமர் லிஸ் டிரஸ், இந்த வரிகுறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவரது … Read more

அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஷாங்காயில் மீண்டும் முழு ஊரடங்கு?

சீனாவின் ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், பொழுதுபோக்கு அரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், நகருக்குள் வருபவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களை அச்சமடையச் செய்துள்ளது.  Source link