வெனிசுலாவில் நிலச்சரிவு: 22 பேர் பலி; 50 பேர் மாயம்

சான்டோஸ் மிச்செலினா, வெனிசுலா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சான்டோஸ் மிச்செலினா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் லாஸ் தெஜேரியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அவற்றின் 5 கால்வாய்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், அரகுவா என்ற மத்திய மாகாணத்தின் வடக்கே கனமழையால் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்கி கொண்டனர். அவர்களில் 22 பேர் பலியானார்கள். 50 பேரை காணவில்லை. இதனை தொடர்ந்து, … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.62 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 66 லட்சத்து 25 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

NRI Rights: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கேட்டு கையெழுத்து இயக்கம்

NRI Voting Rights: வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்க வலியுறுத்தி உலகம் முழுவதும் உள்ள சுமார் 10 லட்சம் இந்தியர்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கியிருக்கிறது. இலங்கையின் தொண்டியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம் சார்பில் வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்க வலியுறுத்தி உலகம் முழுவதும் உள்ள சுமார் 10 லட்சம் இந்திரலிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதி இடம் வழங்கும் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளனர். … Read more

கிரிமீயா பாலத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பிற்கு உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் குற்றச்சாட்டு!

ரஷ்யா-கிரிமீயாவை இணைக்கும் கெர்ச் பாலத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பிற்கு உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் இது “பயங்கரவாத செயல்” என்று கூறியுள்ளார். உக்ரைனின் உளவுப் படைகள் ரஷ்யாவின் சிவில் உள்கட்டமைப்பில் முக்கியமான பகுதியை அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ரஷ்யாவை கிரிமீயாவுடன் இணைக்கும் 19 கிலோமீட்டர் நீள கெர்ச் பாலத்தில் எரிபொருள் டேங்கர் சரக்கு ரயிலில் வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், பாலம் பலத்த சேதமடைந்தது. Source link

Duvalius Dokovici: சிட்டாய் பறக்கும் பூச்சிக்கு நோவக் ஜோகோவிச் என பெயர்: செர்பியா

Novak Djokovic Beetle: செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்சின் பெயரை, அந்நாட்டு விஞ்ஞானிகள் ஒரு வண்டுக்கு சூட்டியுள்ளனர். இந்தப் பூச்சியானது தரை வண்டுகளின் டுவாலியஸ் வகையைச் சேர்ந்தது. ஏன் வண்டுக்கு பிரபல டென்னிஸ் நட்சத்திரத்தின் பெயர் சூட்டப்பட்டது என்று அனைவருக்கும் கேள்வி எழுகிறது. அதற்கான விளக்கத்தையும் விஞ்ஞானிகள் தந்துள்ளனர். பூச்சியின் சுறுசுறுப்பு மற்றும் உறுதியான தன்மைக்காக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. டுவாலியஸ் டோகோவிசி (Duvalius Dokovici) என்று பெயரிட்டுள்ள விஞ்ஞானிகள், டென்னிஸ் நட்சத்திரம் சுறுசுறுப்பு மற்றும் உறுதியான தன்மைக்காக அறியப்படுபவர் … Read more

கிரீமியா பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்: உக்ரைனுக்கு எதிராக போரிட புதிய தளபதியை நியமித்தது ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைனின் கிரீமியா தீப கற்ப பகுதியை 2014-ம் ஆண்டில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதன்பின் 2018-ம் ஆண்டில் ரஷ்யாவையும் கிரீமியாவையும் இணைக்க கெர்ச் ஜலசந்தியில் 19 கி.மீ. தொலைவுக்கு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் வாகனங்கள் செல்ல 4 வழிச் சாலையும், இரட்டை ரயில் பாதையும் உள்ளன. நடுவில் கப்பல்கள் கடந்து செல்ல தூக்கு பாலம் வசதியும் உள்ளது. கடந்த 8-ம் தேதி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி பாலத்தில் வெடித்துச் சிதறியது. இதில் 3 … Read more

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து: ஜெர்மனிக்கு இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: பொறாமை மற்றும் பாகிஸ்தான் தூண்டுதலின் பேரிலேயே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலவல் புட்டோ ஜர்தாரி கடந்த 7-ம் தேதி 2 நாள் பயணமாக ஜெர்மனி சென்றிருந்தார். அங்கு ஜர்தாரியும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அன்னலினா பார்பாக்கும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது ஜர்தாரி கூறும்போது, “காஷ்மீரில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெறுவது கவலை அளிக்கிறது. இது … Read more

22 பேர் பலி; 50 பேர் மாயம்| Dinamalar

லாஸ் டெஜீரியாஸ்: மத்திய வெனிசுலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 22 பேர் வரை பலியாகி உள்ளதாகவும் 50 பேர் வரை மாயமானதாகவும் துணை அதிபர் டெல்சிரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: வெனிசுலாவின் அரகுவா மாநிலத்தில் உள்ள லாஸ் டெஜெரியாஸ் என்ற இடத்தில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 22 பேர் வரை பலியாகி உள்ளனர். 50 பேர் வரை மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த … Read more

உக்ரைனில் 17 பேர் பலி| Dinamalar

கீவ்-உக்ரைனின் ஸபோரிஸ்சியா பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில், பல அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்தன; 17 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துஉள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளான, உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்து வரும் போரில், உக்ரைனின் முக்கிய பகுதியான ஸபோரிஸ்சியா மீது, ரஷ்ய படையினர் கடந்த சில நாட்களாக தாக்குதலை அதிகரித்து வருகின்றனர். நாட்டின் மிக முக்கிய அணு உலை இந்த பகுதியில் இருப்பதால், இது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. ஸபோரிஸ்சியா … Read more

ரஷ்யா வீசிய கொடூர ஆயுதம்; கண்ணீரில் மிதக்கும் உக்ரைன்!

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கிய ரஷ்யா 8 மாதங்களாக அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்யா படைகளின் தாக்குதலில் உக்ரைன் பொதுமக்களில் பலர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் தெற்கு உக்ரைனை சேர்ந்த ஜபோரி ஜியா நகரில் ரஷ்ய படைகள் திடீரென 7 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதிகாலையில் வீசப்பட்ட இந்த ஏவுகணைகள் நகர மையப் பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது. இந்த ஏவுகனை தாக்குதலில் 1 குழந்தை உள்பட 17 பேர் பலியானதாக … Read more