நேபாள அதிபர் மருத்துவமனையில் அனுமதி| Dinamalar

காத்மண்டு: உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து நேபாளம் நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேபாளம் அதிபராக இருப்பவர் பித்யா தேவி பண்டாரி (வயது 61). நேற்று திடீரென கடும் காய்ச்சல், ஏற்பட்டது. இதையடுத்து காத்மண்டுவில் உள்ள மகராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்த திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்த்து வருகின்றனர். காத்மண்டு: உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து நேபாளம் நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி மருத்துவமனையில் … Read more

இஸ்ரேலில் இந்திய இளைஞர் கத்தியால் குத்திக் கொலை – 8 சிறார்கள் கைது..

இஸ்ரேலில் இந்திய இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு இந்தியாவில் வாழும் யூத இனத்தை சேர்ந்த 18 வயதான இயோல் லெகின்ஹல்  கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது குடும்பத்துடன் இஸ்ரேலில் குடிபெயர்ந்தார். நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பியபோது நேரிட்ட சண்டையில் அவர் குத்தி கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 13 முதல் 15 வயது வரையிலான சிறார்கள் 8 பேரை இஸ்ரேல் போலீஸ் கைது செய்திருப்பதாக டைம்ஸ் ஆப் இஸ்ரேல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. … Read more

மாஷா அமினி உடல்நல பாதிப்பால் இறந்தார்: ஈரான் அரசு விளக்கம்

தெஹ்ரான்: “மாஷா அமினி உடல் நலக்குறைவால்தான் உயிரிழந்தார்” என்று ஈரான் அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ஈரான் அரசு வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், “மாஷா அமினியின் மரணம், அவரது தலை மற்றும் முக்கிய உறுப்புகளில் அடிப்பட்டதால் ஏற்படவில்லை. எட்டு வயதில் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மாஷாவின் மரணம் ஏற்பட்டுள்ளது. இதற்கான ஆதாரம் சிடி ஸ்கேன்களில் தெளிவாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஈரான் அரசின் இந்த விளக்கத்தை போராட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. … Read more

அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராகி வருகிறது: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

கீவ்: “எங்கள் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராகி வருகிறது” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசி நேர்காணலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “எங்கள் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராகி வருகிறது. அவர்கள் இது தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவார்களா என்றால், அது எனக்கு தெரியாது. எனினும், இது ஆபத்தானது. என்னை பொறுத்தவரை அணு ஆயுதங்களை பற்றி பேசுவதே ஆபத்தானது. ரஷ்யாவின் அணு … Read more

Video: காரில் பர்கர் சாப்பட்டது குத்தமா… துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்த போலீஸ் – வேலை காலி…

அமெரிக்காவின் சான் அன்டோனியோ நகரில், மெக்டோனால்டு (McDonald’s) உணவகத்தின் கார் பார்க்கிங்கில் எரிக் கன்டூ என்ற 17 வயது இளைஞர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது  காரில் அமர்ந்து பர்கர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஜேம்ஸ் பெர்ன்னாட் என்ற காலவர், எரிக்கிடம் விசராணை நடத்தியுள்ள்ளார்.  விசாரணையின் போது, அந்த இளைஞர் காவலரை தாக்கிவிட்டு தனது காரில் தப்பிச்சென்றதாக முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அப்போது, அந்த இளைஞர் தாக்க முற்பட்டபோது, அந்த காவலர் தனது துப்பாக்கியை … Read more

ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்யா – கிரிமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் ஒரு பகுதி தகர்ந்தது!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் முடிவு செய்ததை எதிர்த்து, ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. தற்போது வரை நீடிக்கும் இந்த போரில், உக்ரைனின் பல பகுதிகள்  ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளன. அதே நேரத்தில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கி உக்ரைனுக்கு உதவி செய்து வரும் நிலையில், உக்ரைன் இழந்த சில பகுதிகளை மீட்டு வருகின்றது. கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது … Read more

அமெரிக்க வான்வழித் தாக்குதல்: சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் இரு தலைவர்கள் பலி

டமாஸ்கஸ்: சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர்கள் இருவர் அமெரிக்க பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐஎஸ் துணைத் தலைவர் அபு அல் உமாவி மற்றும் மற்றொரு முக்கிய தலைவர் கொல்லப்பட்டனர். இதில் ஐஎஸ்ஸின் ஆயுதங்களும் தாக்கி அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் அமெரிக்க தரப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.” என்று செய்தி வெளியிடப்பட்டது. ஐஎஸ்ஸை இந்த பிராந்தியத்திலிருந்து தங்களது நட்பு … Read more

கைதாகிறார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்?

பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் தெஹ்ரிக் இ-இன் சாப் கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் பிரதமரானார். இதனிடையே, பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றன. இதையடுத்து, பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் … Read more

இந்தியா விரும்பும் நாட்டில் இருந்து எண்ணெய்யை வாங்கும்: அமெரிக்காவில் மத்திய மந்திரி பேச்சு

வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி அந்நாட்டின் பெட்ரோலிய துறை மந்திரி ஜென்னிபர் கிரான்ஹோம் மற்றும் பைடன் நிர்வாகத்தில் உள்ள பிற உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, வாஷிங்டன் நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம், எரிபொருள் வாங்குவதில் ரஷியாவை சார்ந்து இருப்பதற்கு எதிராக இந்தியாவுக்கு அழுத்தம் அளிக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு புரி நேரடியான முறையில் அளித்த பதிலில், ரஷியாவிடம் … Read more

கொரோனாவை கண்டுபிடிக்கும் செல்போன் 'செயலி' இலங்கை பேராசிரியர் உருவாக்கினார்

கொழும்பு, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை இணை பேராசிரியராக பணிபுரிபவர் இலங்கையைச் சேர்ந்த உடாந்த அபேவர்த்தனே. இவர் தனது குழுவினருடன் இணைந்து, கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலிக்கான (ஆப்) தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார். அதன் அடிப்படையில் ‘ரெஸ்ஆப்’ என்ற செயலியை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியானது, கொரோனாவை மட்டுமின்றி ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற சுவாச வியாதிகளையும் கண்டுபிடித்துவிடும். இருமல், மூக்கில் நீர் … Read more