20,000,000,000,000,000 – நம் பூமியில் இத்தனை எறும்புகளா?

நியூயார்க்: நாம் வாழும் பூமியில் மொத்தம் 20 குவாட்ரில்லியன் எறும்புகள் (20,000,000,000,000,000) இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற உயிரியலாளர் எட்வர்ட் ஓ.வில்சன், “பூச்சிகள் மற்றும் பிற முதுகெலும்பில்லாத உயிரினங்கள்தான் இந்த உலகத்தை ஆள்கின்றன” என்று தெரிவித்தார். வில்சன் கூறியது முற்றிலும் சரி என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வினை உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். ஆய்வு குறித்து ஜெர்மனியில் உள்ள வூர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் பூச்சி சூழலியலாளர் நூட்டன் கூறும்போது, … Read more

அமினி உயிரிழந்ததை கண்டித்து போராடிய இளைஞனின் இறுதி சடங்கு : தலைமுடியை வெட்டி சவப்பெட்டி மீது வைத்து சகோதரி அஞ்சலி..!

ஈரானில் போலீஸ் காவலில் இளம்பெண் மஹ்சஸா அமினி உயிரிழந்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேர் உயிரிழந்து 700 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டத்தின் போது இறந்த ஒருவரான ஜவத் ஹெய்தாரியின் இறுதி சடங்கில் அவரது சகோதரி தலைமுடியை வெட்டி சவப்பெட்டியின் மேல் வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. Source link

பாகிஸ்தானில் பரபரப்பு; கோடிகளில் ஏலம் விடப்படும் பிரதமரின் கசிந்த ‘ஆடியோ’!

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் 100 மணி நேர உரையாடல்கள் அடங்கிய ஆடியோ கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆடியோக்கள் டார்க் வெப்பில் 3.5 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.28 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு ஏஜென்சிகள் “மிக முக்கியமான” விஷயத்தை பாதுகாக்காமல் விட்டு விட்டதாகவும் பிடிஐ தலைவர் ஃபவாத் சவுத்ரி கூறியுள்ளார். அரசாங்க அதிகாரிகளின் கசிந்த ஆடியோ கிளிப்புகள் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்திய அவர், “அணு ஆயுதம்  வைத்திருக்கும் நாட்டின் பிரதமரின் அலுவலகம் … Read more

மருமகனுக்கு உதவி கேட்ட பிரதமர் பாக்., அரசியலில் பெரும் பரபரப்பு| Dinamalar

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர், தன் உறவினருக்கு விதிமுறையை மீறி உதவும்படி அதிகாரிக்கு உத்தரவிடும் ‘ஆடியோ’ வெளியாகி, அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ– இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி, சமூக வலைதளத்தில் ஒரு ஆடியோ பதிவிட்டுள்ளார்.அதில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அரசின் உயர் அதிகாரியிடம் பேசுகிறார். இந்தியாவில் இருந்து மின் உலைக்கான இயந்திர இறக்குமதிக்கு, தன் மருமகனான … Read more

பாரீசின் மிகப்பெரிய உணவுப் பொருட்கள் வழங்கும் மார்க்கெட்டில் உள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து.!

பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மிகப்பெரிய உணவுப் பொருட்கள் வழங்கும் ருங்கிஸ் மார்க்கெட்டில் உள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பாரீஸ் முழுவதும் கரும்புகை சூழந்து காணப்பட்டது. விபத்துப் பகுதிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுதிய பின் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். காயம், உயிர் இழப்புகள் குறித்து உடனடியாக தகவல் இல்லை. இந்த மார்க்கெட்டில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பிரான்ஸ் மற்றும் உலகின் … Read more

ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு | சகோதரனின் நினைவிடத்தில் தனது கூந்தலை வெட்டி எறிந்து அரசை எதிர்த்த சகோதரி

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் கலாசார காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட தனது சகோதரனின் உடலின் மீது தனது கூந்தலை வெட்டி எறிந்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இளம் பெண் ஒருவர். ஜாவத் ஹேதரி என்ற அந்த இளம் பெண்ணின் சகோதரர் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவரது நினைவிடத்தில் ஜாவேத் ஹேதரி மற்றும் சில பெண்கள் திரண்டனர். அப்போது பெண்கள் அனைவரும் நினைவிடத்தில் ரோஜாப்பூக்களை வீசி ஒப்பாரிவைத்து துக்கத்தை வெளிப்படுத்தினர். ஜாவேத் மட்டும் ஒரு … Read more

வங்கதேசத்தில் படகு கவிழ்ந்து 8 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி| Dinamalar

டாக்கா : வங்கதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில், கோவிலுக்கு சென்று கொண்டிருந்த எட்டு குழந்தைகள், 12 பெண்கள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். ஆற்றில் மூழ்கிய பலரை தேடும் பணி நடந்து வருகிறது.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பஞ்சகரா மாவட்டத்தில் வசிப்போர் நேற்று மகாளய அமாவாசை விரதம் முடித்து, போடேஸ்வரி கோவிலுக்கு படகில் சென்றனர். கொரோட்டா ஆற்றில் சென்ற அந்த படகில் குழந்தைகள், பெண்கள் உட்பட 70 பேர் பயணித்தனர். நடு ஆற்றில் சென்ற போது படகு … Read more

அண்டை நாடுகளுக்கு ஓடும் ரஷ்ய இளைஞர்கள்

மாஸ்கோ: ரஷ்யாவில் கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்து விடுவர் என்ற பயத்தில், இளைஞர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யா தாக்குதலை துவக்கியது. ஏழு மாதங்கள் ஆகியும் போர் நீடித்து வருகிறது. உக்ரைனும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யா கைப்பற்றிய பல பகுதிகளை மீட்டுள்ளது. இதனால், உக்ரைனை முழுமையாக கைப்பற்ற திட்டமிட்ட ரஷ்யாவின் கனவு நனவாவதில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. உக்ரைனை கைப்பற்றும் வரை போர் … Read more

சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டு பணிகள் தொடக்கம்

பீஜிங், சீனாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராகவும், அதிபராகவும் ஜின்பிங் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஒருவர் 10 ஆண்டுகள் மட்டுமே தலைவராக (அதிபர்) இருக்கும் வகையில் கட்சி விதிகள் உள்ளன. அந்தவகையில் ஜின்பிங்கின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைய உள்ளது. எனவே புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேசிய மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந்தேதி நடைபெறுகிறது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் 3-வது முறையாக … Read more

தென் கொரியாவில் அமெரிக்க போர் கப்பல்; வட கொரியா ஏவுகணை சோதனையால் பதற்றம்| Dinamalar

சியோல் : ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக கிழக்காசிய நாடான தென் கொரியாவுக்கு அமெரிக்க போர் கப்பல் வந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வட கொரியா நேற்று ஏவுகணை சோதனை நடத்தியதால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே கடுமையான போர் பகை நிலவி வருகிறது. வட கொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. இதனால், அந்நாடு தென்கொரியா மற்றும் அமெரிக்காவை எதிரி நாடுகளாக கருதுகிறது. ஐ.நா., சபையின் தடை மற்றும் உலக … Read more