இஸ்ரேல் படையால் பாலஸ்தீனர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

ஜெருசலேம், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பகைமை நிலவுகிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்த போராளிகள் பலர் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் பாலஸ்தீன பயங்கரவாதிகளை களையெடுப்பதாக கூறி மேற்குகரை பகுதியில் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி அதிரடி தேடுதல் வேட்டையை நடத்துகின்றனர். இதுபோன்ற தேடுதல் வேட்டைகளின்போது அப்பாவி பாலஸ்தீன மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை … Read more

பத்து நாட்களில் ஐந்தாவது ஏவுகணை பரிசோதனை: அமெரிக்காவுக்கு சவால் விடும் வட கொரியா

பத்து நாட்களுக்குள் வடகொரியா ஐந்து ஏவுகணை பரிசோதனைகள் நடத்தியுள்ளது. இன்று மீண்டும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வட கொரியா பரிசோதித்துள்ளது, கொரிய தீபகற்பத்தில் பதற்றங்களை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் சியோலுக்கு ராஜாங்கரீதியிலான பயணத்தை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மேற்கொள்வதற்கு முன்னதாகவும் வடகொரிய ஒரு ஏவுகணையை சுட்டு பரிசோதித்தது. தென் கொரியாவுக்கு வருகை தந்த அமெரிக்க துணை அதிபர், வடகொரியாவுடனான மோதலில் தென் கொரியாவுக்கு ஆதரவளிப்பதாக உறுதி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.   தென் கொரியாவும் அமெரிக்காவும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, … Read more

ஈராக்கில் துருக்கி ராணுவம் வான்தாக்குதல்: குர்திஸ் பயங்கரவாதிகள் 23 பேர் பலி

பாக்தாத், ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பல்வேறு நகரங்கள் குர்திஸ்தான் பிராந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பிராந்தியத்தை ஆட்சி செய்து வரும் பிகேகே எனப்படும் குா்திஸ்தான் தொழிலாளா் கட்சியை அண்டை நாடான துருக்கி பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அவர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள குர்திஸ் பிராந்தியமான அசோஸ் பிராந்தியத்துக்குள் துருக்கி போர் விமானங்கள் நுழைந்து வான்தாக்குதல் நடத்தின. இதுபற்றி துருக்கி ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more

உணவு நெருக்கடியை சமாளிக்க 20 நாடுகளுக்கு அவசர உதவி தேவைப்படலாம்- சர்வதேச நாணய நிதியம்

ரியாத், 48 நாடுகள் உலகளாவிய உணவு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த மாநாட்டில் பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் ஜார்ஜீவா, உலகளாவிய உணவு நெருக்கடியைச் சமாளிக்க 20 நாடுகளுக்கு அவசர உதவி தேவைப்படலாம் என தெரிவித்துள்ளார். அரபு நாடுகளில் சுமார் 14 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்பின்மைக்கு ஆளாகியுள்ளதாகவும் ஜார்ஜீவா கூறினார். இந்த நிலைமைகளை எளிதாக்கும் வகையில் உணவு வர்த்தக கட்டுப்பாடுகளை எதிர்த்து … Read more

சிங்கப்பூர் கிராண்ட் பிரி கார் பந்தயம் – ‘ரெட்புல்’ அணியின் ‘செர்ஜியோ பெரஸ்’ முதலிடம்..!

சிங்கப்பூர் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் ரெட்புல் அணியின் செர்ஜியோ பெரஸ் முதலிடம் பிடித்தார். அவரை விட இரண்டரை வினாடிகள் தாமதமாக வந்த பெராரி அணியின் லீகிளெர்க்  இரண்டாவது இடத்தையும், அதே அணியின் கார்லஸ் செயின்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பன் ஏழாவதாக வந்து ஏமாற்றமளித்தார். Source link

பகவத் கீதை பூங்கா சேதமா?கனடா நகர மேயர் விளக்கம்!| Dinamalar

டொரன்டோ-கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள பகவத் கீதை பூங்கா சேதப்படுத்தப்பட்டதாக எழுந்த புகாருக்கு, அந்த நகர நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.வட அமெரிக்க நாடான கனடாவில், சமீபகாலமாக இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகம் நடந்து வருகின்றன. இதையடுத்து அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்தியத் துாதரகம் அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில், கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில், பிராம்ப்டன் நகரில் உள்ள பூங்காவுக்கு, செப்., 28ல் ஸ்ரீ பகவத் கீதை பூங்கா என்று பெயரிடப்பட்டது. இதற்கிடையே பூங்காவின் பெயர் பலகை எவ்வித எழுத்துக்களும் … Read more

ஸ்வீடன் விஞ்ஞானிக்குமருத்துவத்துக்கான நோபல்| Dinamalar

ஸ்டாக்ஹோம்-மனித குலத்தின் பரிணாம வளர்ச்சி தொடர்பாக ஆய்வு செய்துள்ள ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோ, 2022ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாக கருதப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு நோபல் … Read more

1000 டிரோன்களால் வடிவமைக்கப்பட்ட ராட்சத டிராகன்

ஆயிரம் டிரோன்களைக் கொண்டு இரவு வானில் ராட்சத டிராகன் உருவத்தை அமைத்துக் காட்டிய வீடியோ காட்சி இணைய வெளிகளில் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது. வாயைப் பிளந்தபடி அந்த ராட்சத டிராகன் வானில் பறந்து செல்வது போல இந்த வீடியோவில் டிரோன்கள் காட்சியளிக்கின்றன. Source link

காபூல் குண்டுவெடிப்பில் 53 பேர் பலி… பெண்கள், குழந்தைகள் மட்டும் 46 பேர்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் தங்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகள் கையாளப்படுவகாக கூறி, அதற்கு எகிராக பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் அப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி நாடு ஒருபுறம் போராட்ட களமாக இருக்க, மறுபுறம் மசூதிகள், தூதரகங்கள், பஸ் நிலையங்கள் என பொது இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்வதும் இங்கு சர்வசாதாரண நிகழ்வாகி வருகிறது. தலைநகர் காபூலில் உள்ள பிரபல கல்வி மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் … Read more