வெனிசுலா மீது தாக்குதல்: டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம், போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக கூறி வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் திடீரென குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபரை கைது செய்தது. இதனைத்தொடர்ந்து அந்த நாட்டை கைப்பற்றி விட்டதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தியது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து … Read more

வங்காளதேசம்: தொடர் கும்பல் தாக்குதலில் 3-வது இந்து மரணம்

டாக்கா, இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மாணவர் போராட்டம் வெடித்தது. இதில், ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். இதன் பின்னர், நோபல் பரிசு பெற்ற, பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்காளதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நாட்டின் தலைமை ஆலோசகராக யூனுஸ் செயல்பட்டு … Read more

கைதான அதிபரின் புகைப்படம் வெளியீடு: வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் – டிரம்ப்

வாஷிங்டன், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதனால் அமெரிக்க இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சூழல் ஏற்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வந்தார். மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாக டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே, வெனிசுலா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறி பல்வேறு கப்பல்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. … Read more

2025இல் டிரம்ப் தாக்குதல் நடத்திய நாடுகள் எத்தனை தெரியுமா? இதுல நோபல் பரிசும் வேணுமாம்!

Donald Trump: 2025ஆம் ஆண்டில் மொத்தம் எத்தனை நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடத்தினார் என்பது இங்கு விரிவாக காணலாம். 

7-வது சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி சீனா பயணம்

இஸ்லாமாபாத், சீனாவின் தலைநகர் பீஜிங்கில் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய 2 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் 7-வது சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கும்படி, பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரியான இஷாக் தாருக்கு சீன வெளியுறவு துறை மந்திரி வாங் யி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பின் பேரில், வெளியுறவு மந்திரிகளின் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இஷாக் தார் இன்று சீனாவுக்கு புறப்பட்டு சென்றார். இதுபற்றி பாகிஸ்தான் … Read more

வெனிசுலா அதிபருக்கு எதிராக போதை பொருள் பயங்கரவாத சதி திட்ட வழக்கு பதிவு செய்த அமெரிக்கா

வாஷிங்டன் டி.சி., வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அமெரிக்காவுக்குள் வெனிசுலா அபாயகர போதை பொருட்களை கடத்துகிறது என்றும், நிக்கோலஸ் ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் டிரம்ப் கூறினார். அவர்கள் குற்றவாளிகளையும், சிறை கைதிகளையும், அவர்களுடைய போதை பொருள் கடத்தல் கும்பல்காரர்களையும் எங்களுடைய நாட்டுக்குள் அத்துமீறி நுழைய செய்கின்றனர் என டிரம்ப் குற்றச்சாட்டாக கூறினார். வேறு எந்த நாட்டையும் விட வெனிசுலாவில் இருந்தே … Read more

அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் – ஈரான் எச்சரிக்கையால் போர் பதற்றம்

டெஹ்ரான், ஈரான் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதியதாகவும், கற்களை வீசியதாகவும், வாகனங்களை எரித்ததாகவும் உள்ளூர் ஊடங்களில் செய்தி வெளியாகி வருகிறது. சிலர் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், பல்வேறு நபர்களிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அமைதியான போராட்டங்களுக்கு எதிராக ஈரான் அரசு … Read more

திருமணம் அமெரிக்கரை செய்தாலும் கிரீன் கார்டு கிடைக்காது; டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடு

வாஷிங்டன், அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பலர் படிப்பு, வேலை, தொழில் ஆகியவற்றுக்காக பல்வேறு விசாக்களில் செல்கிறார்கள். இவர்களில் ஏராளமானோர் அமெரிக்க குடியுரிமை பெற கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள். இந்த கிரீன் கார்டு ஒரு வெளிநாட்டவர் அமெரிக்காவில் நிரந்தரமாக வாழவும், வேலை செய்யவும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குகிறது.இதில் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எளிதாக கிரீன் கார்டு கிடைக்கும். அவர்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படும். ஆனால் முறைகேடாக கிரீன் கார்டு பெற … Read more

ஆப்கானிஸ்தானில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 பேர் பலி

காபூல், ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக, பனிப்பொழிவுக்கு இடையே கனமழை பெய்து வருகிறது. இதன்படி அங்குள்ள கபிசா, பர்வான், டாய்கண்டி, உருஸ்கான், கந்தஹார், ஹெல்மண்ட், பாட்கிஸ், பர்யாப், படக் ஷான், ஹெராத் உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அங்குள்ள ஆறுகள், நீர்நிலையில் நிரம்பியதால் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நாசமாகின. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக 1,800-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. எனவே வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட … Read more

யூ-ட்யூபர்கள் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை… பாகிஸ்தானில் நடப்பது என்ன?

பாகிஸ்தானில் யூ-ட்யூபர்கள், பத்திரிகையாளர்கள் என மொத்தம் 7 பேருக்கு ஆயுள் தண்டன வழங்கி அந்நாட்டின் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.