இலங்கை அமைச்சரவை விரிவாக்கம்| Dinamalar

கொழும்பு:இலங்கை அமைச்சரவையில் புதிதாக 37 பேர் இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். நம் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால், மக்கள் போராட்டம் வெடித்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய அமைச்சரவை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார். கடந்த மாதம் அவர் இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.இந்நிலையில், இலங்கை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.புதிதாக … Read more

பிரிட்டன் மன்னர் சார்லஸ் உரை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: என் வாழ்நாள் முழுதும் மக்களுக்காக சேவை ஆற்றுவேன் என பிரிட்டன் மன்னராக பொறுப்பேற்க உள்ள சார்லஸ் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமாதையடுத்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டன் மன்னராக நாளை அதிகாரபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இதையடுத்து மகாராணி ராணி எலிசபெத்தின் மூத்த மகனும், நீண்ட கால அரச குடும்ப வாரிசான 73 வயது … Read more

இங்கிலாந்து மன்னராக சார்லஸ் நாளை முறைப்படி அறிவிப்பு – 2 நடைமுறைகள் என்னென்ன?

லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத் மறைவை அடுத்து, அந்நாட்டு மன்னராக சார்லஸ் நாளை முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறார். இங்கிலாந்து ராணியாக கடந்த 1952-ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி முடிசூடிக்கொண்ட இரண்டாம் எலிசபெத், கடந்த 70 ஆண்டுகளாக ராணியாக இருந்தவர். உலகில் அதிக ஆண்டுகள் ராணியாக இருந்தவர் என்ற பெருமையை பெற்ற அவர், ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் நேற்று காலமானார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை அடுத்து, அவரது மகனான சார்லஸ், இங்கிலாந்தின் மன்னராகிறார். இந்நிலையில், … Read more

பாலின சமத்துவம் ஏற்பட இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்: ஐ.நா ரிப்போர்ட் அதிர்வுகள்

ஜெனீவா: தற்போதைய நிலை அப்படியே நீடிக்கும் பட்சத்தில், உலக அளவில் பாலின சமத்துவம் முழுமையாக ஏற்பட இன்னும் 300 ஆண்டுகள் ஆகும் என ஐ.நா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான பாகுபாடு, வன்முறை, பெண்களை நசுக்கும் பழக்க வழக்கங்கள், பொதுவாழ்வில் பெண்களின் பங்களிப்பை குறைக்கும் அம்சங்கள் என அனைத்து வகையான பாலின சமத்துவமின்மைக்கும் வரும் 2030-க்குள் முற்றுப்புள்ளி வைப்பதற்கான நிலையான வளர்ச்சி இலக்குகளை ஐ.நா ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா பெண்கள், ஐ.நாவுக்கான … Read more

துக்க நிகழ்வுக்கு தயாராகிறது பிரிட்டன்: எவை எல்லாம் செயல்படும்?

லண்டன்: ராணி எலிசபெத்தின் மறைவைத் தொடர்ந்து அவருடைய இறுதி நிகழ்வுக்கான பணியில் பிரிட்டன் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமைதான் இங்கிலாந்தின் 56-வது பிரதமராக லிஸ் ட்ரஸ்ஸை முறைப்படி நியமித்தார் ராணி எலிசபெத். தன் வாழ்நாளில் அவர் நியமித்த 15-வது பிரதமர் லிஸ் ட்ரஸ். வழக்கமாக பிரதமர் நியமான நிகழ்வு பக்கிங்காம் அரண்மனையில்தான் நடைபெறும். ஆனால் ராணிக்கு நடப்பதில் சிரமம் இருந்ததால், இந்த முறை ஸ்காட்லாந்தில் நடந்தது. லிஸ் ட்ரஸுடன் கை, கால்கள் நடுங்கியபடி கைத்தடியுடன் மிகவும் … Read more

சூரியனின் மேற்பரப்பா இது? வியக்க வைக்கும் புகைப்படங்களை எடுத்த சோலார் டெலஸ்கோப்

சூரியனின் மேற்பரப்பின் நேர்த்தியான விவரங்களைக் காட்டும் வியப்பூட்டும் புகைப்படங்களை தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) வெளியிட்டுள்ளது, இது ஹவாயில் உள்ள டேனியல் கே. இன்யூயே சோலார் டெலஸ்கோப் (DKIST) மூலம் எடுக்கப்பட்டது. படம் சூரியனின் குரோமோஸ்பியரைக் காட்டுகிறது, இது, அதன் மேற்பரப்புக்கு சற்று மேலே அதன் வளிமண்டலத்தின் அடுக்கு ஆகும். ஜூன் 3, 2022 அன்று பூர்வீக ஹவாய் மக்களுக்கு ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிலத்தில் அமைந்துள்ள உலகின் மிக சக்திவாய்ந்த சூரிய தொலைநோக்கி … Read more

எலிசபெத் II – விமர்சனங்களைக் கடந்து கம்பீர ராணியாக வலம் வந்த கதை!

”நாம் மீண்டும் சந்திப்போம்”- இவை பிரிட்டன் மக்களின் மறக்க முடியாத வார்த்தைகளாகியுள்ளன. மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத் தனது ஒவ்வொரு பொது பேச்சுரையின்போதும் இந்த வார்தைகளை தவறாமல் குறிப்பிட்டு வந்திருந்தார். ”ராணி பால்மோரலில் அமைதியாக இறந்தார். ராஜாவும் (சார்லஸ்) அவரது மனைவி (கமிலா) லண்டன் திரும்புவார்கள்” என்று பிரிட்டன் அரசக் குடும்பம் நேற்று பொதுமக்களிடம் அறிவித்தது. பிரிட்டனின் அரச பதவியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக அலங்கரித்த ராணி எலிசபெத் தனது 96-வது வயதில் மரணமடைந்திருக்கிறார். ராணியின் … Read more

நாய்கள் மீது அதிக பாசம் வைத்தவர் ராணி எலிசபெத்; ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ் என்றால் என்ன ?

லண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்தால் அடுத்த நடக்க வேண்டிய திட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உள்ளன. இதனை ‘ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்’ என்று குறிப்பிடுகின்றனர். 1960கள் முதலே இந்தத் திட்டம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. எலிசபெத் மகாராணி உயிரிழக்கும் போது, அங்கு 12 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். எலிசபத் மகாராணி உயிரிழக்கும் போது, அது முதலில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும். அதன் பின் அவரது தனிப்பட்ட செயலாளருக்குத் தெரிவிக்கப்படும். அவர் … Read more

உலக பத்திரிகை அட்டை படங்களில் அஞ்சலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: உலகம் முழுவதும் ஆங்கில பத்திரிகைகளில் எலிசபெத் ராணியின் பல்வேறு காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்(96), வயது மூப்பால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, ஸ்காட்லாந்து பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று இரவு 11:05 மணிக்கு ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக பகிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. … Read more

இங்கிலாந்து ராணியின் மகுடத்தை அலங்கரித்த கோஹினூர் வைர கிரீடம் யாருக்கு செல்கிறது?

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் காலமானார். அவருக்கு வயது 96. அவரது உடல் இன்று மாலை லண்டனுக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராணி எலிசபெத் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து, அவரது மூத்த மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக முடிசூடிக் கொண்டுள்ளார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more