கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு தமிழக வம்சாவளி பெண் அஞ்சலி அப்பாதுரை போட்டி

விக்டோரியா: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு தமிழக வம்சாவளியை சேர்ந்த அஞ்சலி அப்பாதுரை போட்டியிடுகிறார். வடஅமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள கனடாவில் 10 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித்தனியாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிரிட்டிஷ் கொலம்பியா புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த மாகாண முதல்வராக ஜான் ஹோர்கன் (62) பதவி வகிக்கிறார். புற்றுநோய் பாதிப்பு … Read more

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

சனா, ஏமனில் அந்ந நாட்டு அரசுக்கும், ஈரான் ஆதரவு பெற்று ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதோடு, லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த சூழலில் நீண்டகால பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. ஆனாலும் சண்டை நிறுத்தத்தை மீறி அவ்வப்போது சிறிய அளவிலான மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. … Read more

சீன கம்யூனிஸ்ட் மாநாட்டையொட்டி பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா ஊரடங்கு தீவிரம்

பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டையொட்டி முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங்நகரத்தில் கரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நேற்று மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டனர். சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் மிக தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். அந்த வகையில், 40 லட்சம் பேர் வசிக்கும் பெய்ஜிங்கை சுற்றியுள்ள ஹைபேயி மாகாணத்தில் இந்த வார இறுதி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியேற … Read more

சீனாவில் புதிதாக 1,829 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,696 பேருக்கு … Read more

அமெரிக்காவில் கொலை வழக்கில் இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி விடுதலை

ஹூஸ்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரவிந்தர் சிங். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் போர்ட் வொர்த் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே பெண் ஒருவர் மயங்கி கிடப்பதாக வந்த தகவலின் பேரில் அதுபற்றி விசாரிப்பதற்காக ரவிந்தர் சிங் அங்கு சென்றார். புல் தரையில் கிடந்த அந்த பெண் நலமாக இருக்கிராறா என்பதை சோதிக்க ரவிந்தர் சிங் அந்த பெண்ணின் அருகில் … Read more

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து 13 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றிச் சென்ற படகு, சிந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். செஹ்வான் நகரில் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் இருந்து 25க்கும் மேற்பட்டோரை நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்ற போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 8 பேர் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர் கனமழையால் பாகிஸ்தானின் சிந்து, பலூசிஸ்தான் மாகாணங்களில் பல பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில், லட்சக் கணக்கான … Read more

பாகிஸ்தானில் மீட்புப் படகு கவிழ்ந்து விபத்து : 13 பேர் பலியான பரிதாபம்

இஸ்லமாபாத், பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகளால் அமலான ஊரடங்கால், சரிவடைந்த பொருளாதார சூழலில் இருந்து அந்நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வராமல் தவித்து வரும் சூழலில், 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து, மக்களை மீள முடியாத நிலைக்கு கொண்டு சென்று விட்டுள்ளது. அந்நாட்டில், தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும் தேசிய அவசர … Read more

சோவியத் யூனியன் கடைசி தலைவர் மிக்கைல் கோர்பசேவ் காலமானார்| Dinamalar

மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி தலைவரும், சீர்திருத்தவாதியுமான மிக்கைல் கோர்பசேவ், 91 உடல்நலக்குறைவால் காலமானார்.சிதறுண்ட சோவியன் யூனியனின் முதுபெரும் அரசியல் தலைவரான இவர் சோவியத் யூனியனின் தலைவராக 1985 முதல் 1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் கலைக்கப்படும் வரை தலைவராக இருந்தார். அப்போது மிகப்பெரிய சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். இவரது சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் குடியரசாயின. 1990ம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில் வயது … Read more

வெள்ளக்காடான பாகிஸ்தான்: நிவாரண பொருட்களுடன் சென்ற ஹெலிகாப்டர்கள் தரையிறங்க இடமில்லை – மந்திரி தகவல்!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி … Read more

உண்ணா நோன்பிருந்து 9 கிலோ எடை குறைத்தேன்: எலான் மஸ்க் பகிர்ந்த ட்வீட்

உண்ணா நோன்பிருந்து (Fasting) 9 கிலோ உடல் எடையை குறைத்ததாக உலகின் முதல் பணக்காரர் ஆன எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனை ட்விட்டர் பயனர் ஒருவருக்கு ரெஸ்பாண்ட் செய்த போது அவர் தெரிவித்துள்ளார். ஸ்பேஸ்X நிறுவனரும், டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியுமான மஸ்க், ட்விட்டர் சமூக வலைதளத்தில் படு ஆக்டிவாக செயல்படுபவர். தன்னை குறித்து ட்வீட் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவரே முன்வந்து பதில் சொல்வார். அப்படி ஒரு சம்பவம் அண்மையில் நடந்துள்ளது. “நல்ல நண்பர் ஒருவரது … Read more