அதிகரிக்கும் காய்ச்சல் நோயாளிகள்: ‘இது கோவிட் 19 காய்ச்சல் அல்ல’ என அடம் பிடிக்கும் வட கொரியா

சீனாவுடனான வட கொரியாவின் எல்லைப் பகுதியில் சமீபத்தில் பலருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் கொரோனா தொற்றின் காய்ச்சலாக இருக்குமோ என முதலில் ஒரு அச்சம் இருந்தது. ஆனால், அது கொரோனா காய்ச்சல் அல்ல, இன்ஃப்ளூயன்ஸா என்று சோதிக்கப்பட்டதாக வட கொரியா வெள்ளிக்கிழமை கூறியது. நால்வருக்கு கோவிட்-19 -க்கான காய்ச்சல் இருக்கக்கூடும் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரியாங்காங் பகுதியில் குறிப்பிடப்படாத பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாக வட கொரியா தெரிவித்தது. இந்த செய்திக்கு ஒரு … Read more

இந்தியாவுக்கே திரும்பிப் போங்க..இந்தியப் பெண்கள் மீது இனவெறி தாக்குதல்

டல்லாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியப் பெண்கள் நால்வரை மெக்சிகோ அமெரிக்கன் பெண் ஒருவர் இன ரீதியாக வசைபாடியதுடன் அவர்களைத் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் இந்தியப் பெண்களை தொடர்ந்து தரக்குறைவாகப் பேசுவதோடு “நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கே திரும்பிப் போங்கள்” என்று ஆவேசமாகப் பேசுகிறார். நடந்தது என்ன? டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது டல்லாஸ் நகரம். இங்கு இந்தியப் பெண்கள் நால்வர் ஓர் உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு கார் பார்க்கிங் லாட்டில் நிற்கின்றனர். … Read more

மியான்மரில் 5 ஆண்டுக்கு முன் நடந்த இனப்படுகொலை நாள் – ரோஹிங்கியாக்கள் அனுசரிப்பு

டாக்கா: வங்கதேசத்தில் அகதி முகாம்களில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்று இனப்படுகொலை நினைவு நாள் அனுசரித்தனர். மியான்மரின் சிறுபான்மையின மக்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள், மேற்கில் உள்ள ராக்கைன் மாநிலத்தில் அதிகளவில் வசித்து வந்தனர். இவர்களில் சிலர் கடந்த 2012 முதல், பவுத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மர் நாட்டின் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ராக்கைன் போலீஸ் நிலையங்கள் மீது நடந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். அதனால் கடும் கோபம் கொண்ட மியான்மர் … Read more

இந்திய மாணவர்களுக்கு கனடா விசா கிடைப்பதில் காலதாமதம் – விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்க இந்திய தூதரகம் வலியுறுத்தல்

புதுடெல்லி: கனடாவில் அடுத்த மாதம் கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் இந்திய மாணவர்களுக்கு விசா கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்க வேண்டும் என இந்திய தூதரம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஒட்டாவா நகரில் உள்ள கனடாவுக்கான இந்திய தூதரகம் கூறியிருப்பதாவது: கனடாவில் அடுத்த மாதம் கல்வியாண்டு தொடங்குகிறது. கனடா கல்லூரிகளில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் விசா கோரி விண்ணப்பித்துள்ளனர். ஆனால் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் பெறப்பட் டுள்ளன. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் … Read more

தேர்தலின் போது மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி10,000 டாலர் கல்வி கடன் தள்ளுபடி – ஜோ பைடன் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலின் போது மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, அவர்கள் வாங்கிய கல்விக் கடனில் 10,000 டாலரை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை அதிபர் ஜோ பைடன் வெளியிட்டார். அமெரிக்காவில் படிக்கும் லட்சக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கல்விக் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாமல் தவித்துவருகின்றனர். கரோனா பெருந்தொற்று காரணமாக அவர்களால் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில், மாணவர்களுக்கு கல்விக் கடனில் சலுகை வழங்குவேன் … Read more

முன்னாள் பிரதமர் அபே சுட்டுக்கொலை – ஜப்பான் காவல் துறை தலைவர் ராஜினாமா

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டதால், பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்று காவல் துறை தலைவர் இடாரு நாகமுரா பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஜூலை 8-ம் தேதி ஜப்பானின் நாரா நகரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஜப்பான் காவல் துறை தலைவர் இடாரு நாகமுரா நேற்று பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: … Read more

உக்ரைன் விவகாரம் | ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக முதல்முறை இந்தியா வாக்களிப்பு

வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா முதன் முறையாக வாக்களித்தது. உக்ரைனில் ரஷ்ய ராணுவம் கடந்த பிப்ரவரியில் தாக்குதலை தொடங்கியது. இதுவரை உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான தீர்மான விவகாரங்களில் இந்தியா ஒதுங்கியே இருந்தது. இந்த நிலையில், தற்போது உக்ரைன் பிரச்னையில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா முதல்முறையாக தனது வாக்கை பதிவு செய்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதுவரையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் … Read more

உக்ரைனில் உள்ள ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை வீசித் தாக்குதல் – 22 பேர் பலி; 50 பேர் காயம்!

உக்ரைனில் உள்ள ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை வீசி நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியானதாகவும், 50 பேர் காயமடைந்ததாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அவர், சாப்லினோ ரயில் நிலையத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்தார். சோவியத் யூனியனிலிருந்து பிரிந்ததை சுதந்திர தினமாக உக்ரைன் நேற்று கொண்டாடியது. இதையொட்டி பேசிய ஜெலன்ஸ்கி, ரஷ்யா தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி சக்திவாய்ந்ததாக இருக்கும் … Read more

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 300 பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்தது இலங்கை..!

அந்நிய செலாவணி பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 300 பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடை விதித்துள்ளது. சாக்லெட்கள், வாசனை திரவியங்கள், கைக்கடிகாரங்கள், பிரஷர் குக்கர், குளிரூட்டிகள், இசைக்கருவிகள், மது உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. Source link

டெக்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் பதிலடி தர தாமதம்: அமெரிக்க போலீஸ் அதிகாரி அதிரடி பணிநீக்கம்

வாஷிங்டன், அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உவால்டே நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளியில் கடந்த மே மாதம் 24-ந் தேதி நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டது அந்த நாட்டையே உலுக்கியது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது போலீசார் வந்து பதிலடி கொடுப்பதில் ஏற்பட்ட தாமதம்தான், இந்தளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது போலீசார் வந்து நடவடிக்கை எடுப்பதில் 77 நிமிடம் தாமதம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது. … Read more