பிரிட்டனில் அரசாட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் கைது
லண்டன்: பிரிட்டன் மன்னராக சார்லஸ் முடிசூட்டப்பட்டதற்கு எதிராகவும், அரசாட்சிக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தது பேசுபொருளாகியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் ராணியின் உடலுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் … Read more