வெனிசுலா நிலச்சரிவுபலி 34 ஆக உயர்வு| Dinamalar

லாஸ் டெஜீரியாஸ் : மத்திய வெனிசுலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. 60க்கும் மேற்பட்டோரை காணவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை, ஜூலியா சூறாவளி தாக்கியது. இதில் 11 மாகாணங்கள் பாதிப்பை சந்தித்தன. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததை அடுத்து லாஸ் டெஜீரியாஸ் நகரில் கடந்த 8ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. மழை வெள்ளத்துடன் மண்ணும் கல்லும் அடித்துக் கொண்டு வந்ததில், குடியிருப்பு பகுதிகள் காணாமல் போயின. இதில், … Read more

60 லட்சம் கொசு வலைகள் வாங்க பாகிஸ்தான் முடிவு| Dinamalar

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நான்கு மாதங்களாக பெய்த இடைவிடாத கனமழை காரணமாக, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இதையடுத்து, நாட்டு மக்களுக்கு வழங்க, 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கொசுவலைகளை நம் நாட்டில் இருந்து வாங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் இருந்து கடந்த மாதம் வரை கனமழை கொட்டித் தீர்த்தது. அந்நாட்டின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. ஏராளமான வீடுகள் இடிந்து, மூன்று கோடிக்கும் … Read more

சுவிஸ் வங்கியில் கருப்பு பண முதலீடு: 4-வது கட்ட பட்டியலை பெற்றது இந்தியா

புதுடெல்லி / பெர்ன்: சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்கள் அடங்கிய 4-வது கட்ட பட்டியலை இந்தியா பெற்றுள்ளது. ஆண்டுதோறும் சுவிஸ் வங்கி தகவல்களை தாமாக முன்வந்து பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த தகவல்இந்தியாவுக்கு வழங்கப்பட்டுஉள்ளது. மொத்தம் 101 நாடுகளைச் சேர்ந்த 34 லட்சம் நிதி கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து 4-வது கட்ட பட்டியலில் பகிர்ந்துகொண்டுள்ளது. இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் வரி செலுத்துவதில் இருந்துதப்பித்து சுவிஸ் வங்கிகளில் சட்டவிரோதமாக … Read more

நேட்டோ நாடுகளின் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – ரஷ்யாவுக்கு எச்சரிக்கை..

நேட்டோ கூட்டு நாடுகளின் மீது தாக்குதல் தொடுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ரஷ்யா வான்தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கு நேட்டோ அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா போரில் தோல்வியைத் தழுவும் அச்சத்தால் அணு ஆயுத இலக்குகளைக் குறி வைத்து தாக்குதல்களைத் தொடுத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பு, தங்கள் கூட்டு நாடுகளின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் … Read more

சர்வதேச அணுசக்தி முகமையில் சீன தீர்மானத்தை முறியடித்த இந்தியா – மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

புதுடெல்லி: சர்வதேச அணுசக்தி முகமையில் சீனாவின் வரைவு தீர்மானத்தை இந்தியா முறியடித்தது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் கூட்டணியை அமைத்துள்ளன. ஆஸ்திரேலியாவின் கடல் பகுதியில் சீன கடற்படை ஏராளமான ஆளில்லா நீர்மூழ்கிகளை உலவ விட்டிருக்கிறது. சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும் இந்திய, பசிபிக் பிராந்திய கடல் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமெரிக்கா, இங்கிலாந்து, … Read more

கமலா ஹாரிசிடம் இருந்த அணு ஆயுதங்களுக்கான அதிகாரம்| Dinamalar

வாஷிங்டன் அமெரிக்காவின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம், இந்தியாவை பூர்வீகமாக உடைய துணை அதிபர் கமலா ஹாரிசிடம், 85 நிமிடங்கள் இருந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் தொடர்பான தகவல்கள், அதைப் பயன்படுத்த உத்தரவிடக் கூடிய அதிகாரம், நாட்டின் அதிபரிடம் இருக்கும். ‘நியூக்ளியர் புட்பால்’ என்று அழைக்கப்படும், கால்பந்து அளவிலான இந்த சாதனம், அமெரிக்க அதிபருடன் எப்போதும் இருக்கும். அவருடன் இருக்கும் உயர் ராணுவ அதிகாரி இதை எப்போதும் சுமந்து … Read more

2023 மே மாதம் சார்லஸ் முடிசூட்டு விழா ?| Dinamalar

ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத், 96, வயது மூப்பால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, ஸ்காட்லாந்து பால்மோல் கோட்டையில் செப்டம்பர் 9-ம் தேதி காலமானதாக பகிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. இதையடுத்து எலிசபெத் மகனான சார்லஸ், மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் சார்லஸ் முடிசூட்டு விழா எப்போது என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், வரும் 2023-ம் ஆண்டு மே 6-ம் தேதி முடிசூட்டு விழா நடத்த முடிவு செய்துள்ளதாக அரண்மணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் … Read more

உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு இந்தியா எதிர்ப்பு| Dinamalar

நியூயார்க் : ரஷ்யா – உக்ரைன் போர் பிப்ரவரி முதல் நடந்து வருகிறது. சமீபத்தில் போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யா இணைத்துக்கொண்டது. இந்த இணைப்பை கண்டிக்கும் தீர்மானத்தின் மீது ஐ.நா., சபையில் ஓட்டெடுப்பு நடந்தது. இதற்கு ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என ரஷ்யா கோரியது. ஆனால் வெளிப்படையாக நடக்க வேண்டும் என இந்தியா உட்பட 107 நாடுகள் ஓட்டளித்தன. இதையடுத்து ரஷ்யாவின் ரகசிய ஓட்டெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ரஷ்யாவுக்கு ஆதரவாக 13 நாடுகள் … Read more

இந்தியா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியின் நிறைவு விழாவில் பாகிஸ்தான் பங்கேற்க இருப்பதாக தகவல்!

இந்தியா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியின் நிறைவு விழாவில் பாகிஸ்தான் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நடைபெற்றுவரும் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப் பயிற்சியை இந்தியாவின் தேசிய பாதுகாப்புப் படை நடத்துகிறது. இதில் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்றுள்ளன. 2-ம் கட்டமாக கடந்த 8-ம் தேதி தொடங்கிய இப்பயிற்சி நாளை மறுநாள் நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழாவில் கலந்துகொள்ள பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி … Read more

சீக்கிய குடும்பம் கொலைகுற்றவாளி மீது வழக்கு பதிவு| Dinamalar

சான்பிரான்சிஸ்கோ:அமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொன்றவர் மீது, நான்கு கொலை வழக்குகள் தனித்தனியாக தொடரப்பட்டுள்ளன. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்புரைச் சேர்ந்த ஒரு சீக்கிய குடும்பம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மெர்செட் பகுதியில் வசித்து வந்தனர். சமீபத்தில் இந்த குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடத்தி செல்லப்பட்டனர். ஜஸ்தீப் சிங், 36, அவருடைய மனைவி ஜஸ்லீன் கவுர், 27, எட்டு மாதக் குழந்தை ஆரூஹி தெரி மற்றும் … Read more