ஒரு பாலின திருமணங்களை சட்டபூர்வமாக்கியது இந்த கம்யூனிஸ்ட் நாடு

கியூபாவில் ஒரு பாலின திருமணங்கள் செய்துக் கொள்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் புதிய குடும்பக் குறியீட்டை அங்கீகரித்த கியூபா, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் ஒரே பாலினத்தை சேர்ந்தவரக்ள் திருமணம் செய்துக் கொள்வதை சட்டப்பூர்வமாக்குகியுள்ளது. 1979 ஆம் ஆண்டு கியூபாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்ட போதிலும், பல ஓரினச்சேர்க்கையாளர்களும், பெண்களும் வெளிப்படையாகவே பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம் சாட்டி வந்தனர். அதனை அடுத்து, கியூபா இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருமண சட்டத்தை அங்கீகரித்துள்ளது. சிறுபான்மையினரின் உரிமைகளை உயர்த்தும் புதிய குடும்பச் … Read more

ரஷ்ய பள்ளியில் துப்பாக்கிச் சூடு | மாணவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு – சுட்டுக் கொன்ற மர்ம நபர் தற்கொலை

மாஸ்கோ: ரஷ்யாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் 7 மாணவர்கள் உட்பட 13 பேரை சுட்டுக் கொன்ற மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஆயிரம் கி.மீ. தொலைவில் இஸவ்ஸ்க் நகரம் உள்ளது. உட்முர்ஷியா மாகாணத்தின் தலைநகரான இதில் சுமார் 6.3 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த நகரில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் நேற்று புகுந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை தன்னிடமிருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதையடுத்து, மாணவர்கள் மற்றும் … Read more

ஷின்சோ அபே நினைவு சடங்கில் பங்கேற்க ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபேவுக்கு அரசு சார்பில் இன்று நடை பெறவுள்ள நினைவு சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவுக்கு புறப்பட்டுச் சென்றார். ஜப்பானின் நரா நகரில் கடந்த ஜூலை 8-ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பங்கேற்று பேசினார். அப்போது, அவர் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கு ஜூலை 12-ம் தேதி குடும்பத்தினர் சார்பில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்நிலையில், … Read more

உலகில் 20,000 லட்சம் கோடி எறும்புகள்ஆராய்ச்சியாளர்களின் புதிய கணிப்பு| Dinamalar

மெல்போர்ன்,உலகெங்கும், 20 ஆயிரம் லட்சம் கோடி எறும்புகள் உள்ளதாகவும், அவற்றின் மொத்த எடை 1,200 கோடி கிலோ என்றும் ஆராய்ச்சியாளர்களின் புதிய கணிப்பில் தெரியவந்துள்ளது.இந்த உலகத்தில் இயற்கையாக நடக்கும் நிகழ்வுகள் ஒரு சங்கிலித் தொடர் போன்றவை. இதில், ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு முக்கிய பங்கு உள்ளது. சிறிய எறும்பாக இருந்தாலும், மிகப் பெரிய யானை, திமிங்கலமாக இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் சில முக்கியத்துவம் உள்ளது.நம் மண்ணை வளமுள்ளதாக்குவதில் இருந்து, பறவைகளுக்கு தேவையான உணவுகள் கிடைப்பதை உறுதி செய்வது வரை, … Read more

ஐ.நா. சபை கூட்டத்தில் கைலாசாவின் பெண் பிரதிநிதி…. கலக்கும் நித்தி!

தமக்கென கைலாசா எனும் நாட்டை உருவாக்கி அங்கு தனி ராஜ்ஜியம் நடத்திவரும் நித்தியானந்தா சமீபகாலமாக உடல்நிலை குன்றி காணப்படுவதாகவும், மருத்துவ சிகிச்சைக்கா அவர் இலங்கையில் தஞ்சம் கேட்டதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின. நித்தியானந்தாவின் கோரிக்கைக்கு இலங்கை அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வந்ததாக தெரியவில்லை.. இந்த நிலையில், கைசாலாவைச் சேர்ந்த பெண் பிரதிநிதி ஒருவர் மூலம் இந்நாடு சர்வதேச அளவில் தற்போது கவனம் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின 77 ஆவது பொதுச்சபை கூட்டம் … Read more

அமெரிக்காவை அலற வைத்த எட்வர்டு ஸ்னோடெனுக்கு ரஷ்யா குடியுரிமை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: 2013ம் ஆண்டில் அமெரிக்க உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்திய கணினி பொறியாளர் எட்வர்டு ஸ்னோடென்னுக்கு ரஷ்ய நிரந்தர குடியுரிமை வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ.,வின் முன்னாள் கணினி நிபுணர், எட்வர்டு ஸ்னோடென் 40. 2013-ல் அமெரிக்க புலனாய்வு ரகசியங்கள் பலவற்றை அம்பலப்படுத்தினார். அமெரிக்க அரசால் கைது செய்யப்படும் அபாயம் உள்ளதால், ஹாங்காங்கில் தஞ்சமைடைந்தார். அவரை, தங்களிடம் ஒப்படைக்கும் படி, அமெரிக்கா வற்புறுத்தியது. … Read more

வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளாரா சீன அதிபர்? – அதிகாரபூர்வ விளக்கம் அளிக்காததால் தொடரும் சர்ச்சை

பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வரும் நிலையில், அது குறித்து சீன அரசு விளக்கம் அளிக்காததால் சந்தேகம் வலுப்பெற்று வருகிறது. சமீபத்தில் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து பெய்ஜிங் திரும்பிய ஜி ஜின்பிங், வீட்டுச் சிறையில் … Read more

வங்கதேச படகு விபத்து: பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

டாக்கா: வங்கதேசத்தில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள், நவராத்திரி காலத்தில் போதேஷ்வரி கோயிலுக்குச் செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. அந்த வகையில், சிறிய படகு ஒன்றில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் போதேஷ்வரி கோயிலுக்குப் புறப்பட்டுள்ளனர். 30 பேர் பயணிக்கக் கூடிய அந்தப் படகில், சுமார் 90 பேர் ஏறியுள்ளனர். இவ்வளவு பேர் ஏறக்கூடாது என்றும், சிலர் இறங்குமாறும் படகு ஓட்டுநர் கூறியதாகவும், ஆனால் யாரும் கேட்கவில்லை … Read more

செவ்வாயில் குப்பை; விஞ்ஞானிகள் எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : செவ்வாய் கோள் ஏற்கனவே விண்வெளி குப்பையாகி விட்டது என அமெரிக்க ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.சூரிய குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் பணி 1960ல் துவங்கியது.இதுவரை 50 விண்கலம் செவ்வாய்க்கு (தோல்வியில் முடிந்தவை உட்பட) அனுப்பப்பட்டுள்ளன. முதலில் சோவியத் யூனியன் ‘1எம்.நம்பர்1’ என்ற விண்கலத்தை ஏவியது. இது தோல்வியில் முடிந்தது. பின் 1964ல் அமெரிக்கா ‘மரினர்’ விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய்க்கு அனுப்பியது. இதுவரைஅமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி … Read more