இலங்கைக்கு கடனுதவி வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல்: இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

கொழும்பு, வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இலங்கை சர்வதேச நிதியத்திடம் அவசர கடனுதவியாக 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.39,733 கோடி) கோரியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்து அந்த நாட்டு அரசு அதிகரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த மாதம் 24-ந்தேதி முடிவடைந்த நிலையில், சமீபத்தில் 2-ம் கட்டபேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால் பேச்சுவார்த்தை மேலும் … Read more

ஜப்பானை மிரட்டும் 257 கி.மீ., வேக சூறாவளி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒகினாவா-ஜப்பானில் ‘ஹின்னம்னார்’ என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி மணிக்கு, 257 கி.மீ., வேகத்தில் வீசும் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், கன மழை, புயலுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கிழக்கு சீன கடலில் உருவாகியுள்ள இந்த சூறாவளி, ஜப்பான் தீவுகளை கடுமையாக தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு … Read more

சீனாவில் புதிதாக 1,818 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,829 பேருக்கு … Read more

விண்வெளியில் அரிசியை விளைவித்து சீன விஞ்ஞானிகள் சாதனை

பீஜிங், விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்துடன் சீனா பணியாற்றி வருகிறது. இந்நிலையில், கட்டுமான பணி நிறைவடையாத சீன விண்வெளி நிலையத்தில், பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட வென்சியான் என்ற ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இதற்கான பணிகள் கடந்த ஜூலையில் தொடங்கின. இதற்காக இரு வகை செடிகளின் விதைகளை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர். தாலே கிரஸ் மற்றும் அரிசி வகை செடியை … Read more

இந்தியாவிலிருந்து உணவு பொருள் இறக்குமதி செய்ய பாக்., திட்டம்| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அவற்றை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய, பாக்., அரசு திட்டமிட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த ஒரு மாதமாக பலத்த மழை பெய்து வருகிறது. நாட்டில் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. விளைநிலங்கள் முற்றிலும் நாசமடைந்து விட்டன. இதனால் வெங்காயம், தக்காளி, அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்து உள்ளது. … Read more

சினூக் ஹெலிகாப்டர்கள் பறக்க அமெரிக்கா தற்காலிக தடை

வாஷிங்டன், போயிங் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சினூக் ஹெலிகாப்டர் அமெரிக்க ராணுவ வீரர்களை பல்வேறு அழைத்துச் செல்லவும், சரக்குகளை ஏற்றிச் செல்லவும் 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அடிக்கடி எஞ்சின் தீப்பிடித்து விபத்துக்குள்ளாவதை அடுத்து அமெரிக்க பாதுகாப்புப் படையில் பயன்பாட்டில் உள்ள 400 சினூக் ஹெலிகாப்டர்களையும் பயன்பாட்டிலிருந்து நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.ஆனால், இந்திய விமானப் படையில் 15 சினூக் ஹெலிகாப்டர்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்து சினூக் ஹெலிகாப்டர்களையும் அமெரிக்க ராணுவம் நிறுத்துவதற்கான முழு … Read more

பிரிட்டன் பிரதமர் தேர்தல் இந்திய வம்சாவளி நம்பிக்கை| Dinamalar

லண்டன்:பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் பழமைவாத கட்சித் தலைவர் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் வெற்றி கிடைக்கும் என, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக உள்ளவரே, பிரதமர் பதவியை வகிக்க முடியும். இதன்படி, கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடந்து வந்தது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியான … Read more

சோவியத் யூனியனின் கடைசி தலைவர் கார்பசேவ் மரணம்| Dinamalar

மாஸ்கோ: முன்னாள் சோவியத் யூனியனின் கடைசி தலைவராக ஏழு ஆண்டுகள் இருந்த மைக்கேல் கார்பசேவ், 91, வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பாதிப்பால் உயிரிழந்தார். சோவியத் யூனியனின் கடைசி தலைவராக, 1985 மார்ச்சில் பதவியேற்றார், மைக்கேல் கார்பசேவ். அப்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்தது, ஆட்சியில் கட்சியின் தலையீட்டை குறைத்தது என, பல சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டார். இதோடு உலக நாடுகளுடனான பனிப்போரையும் முடிவுக்கு கொண்டு வந்தார். கடும் விமர்சனங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அவர் வகுத்த … Read more

அமெரிக்காவில் மீண்டும் ஆபத்தான ஆயுதங்களுக்குத் தடை கொண்டு வருவோம் – ஜோ பைடன்

அமெரிக்காவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க ஆபத்தான ஆயுதங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று அதிபர் ஜோபைடன் உறுதியுடன் தெரிவித்துள்ளார். முன்பும் இதனைத் தடை செய்தோம். மீண்டும் தடை செய்வோம் என்று அவர் பெனின்சுலேவியாவில் ஆற்றிய தமது உரையில் குறிப்பிட்டார்.1994 ஆம் ஆண்டு செனட்டில் தாம் இருந்த போது 10 ஆண்டுகளுக்குத் தடை கொண்டு வரப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பை கருதி காவல்துறைக்காக அதிக நிதி ஒதுக்கப்படும் என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். … Read more

சவுதி பெண்ணுக்கு 45 ஆண்டு சிறை| Dinamalar

துபாய்:சமூக வலைதளம் வாயிலாக, நாட்டின் சமூக ஒற்றுமையை சீர்குலைத்ததாக குற்றஞ்சாட்டி, சவுதி அரேபிய பெண் ஒருவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 45 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்த நவுரா பின்த் சயீத் அல்- – கஹ்தானி என்ற பெண், சமூக வலைதளங்களில், பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், இவர் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதாக குற்றஞ்சாட்டிய நீதிமன்றம், அவருக்கு 45 ஆண்டு சிறை தண்டனை … Read more