ஜகர்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சோ ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது. … Read more