சீனா அச்சுறுத்தல் குறையவில்லை – தைவான் தகவல்

தைபே: தைவான் அதிபர் ட்சாய் யிங்-வென் வியாழக்கிழமை கூறியதாவது: மோதல் மற்றும் சர்ச்சையை தூண்டும் வகையில் தைவான் எவ்வித நடவடிக்கையையும் மேற் கொள்ளவில்லை. எனினும், சீனாவிடமிருந்து வரும் ராணுவ அச்சுறுத்தல்கள் தற்போது வரை நின்றபாடில்லை. நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பில் நாங்கள் உறுதியுடன் செயல்படுவோம். ஒவ்வொருவரும் ஜனநாயகம், சுதந்திரத்தின் எல்லையை மதிக்க வேண்டும். இவ்வாறு ட்சாய் கூறினார். தைவான் நீரிணைப் பகுதிகளில் ராணுவ பயிற்சிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், வழக்கமான ரோந்துப் பணி மட்டும் நடைபெறும் என்றும் சீனா … Read more

“அவளின் கதைகள் என்னை ஊக்குவித்தன” – பாகிஸ்தான் தோழி பற்றி இந்தியப் பெண் நெகிழ்ச்சி பதிவு

வாஷிங்டன்: பாகிஸ்தான் தோழி பற்றி இந்தியப் பெண் ஒருவரின் நெகிழ்ச்சியான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பதிவை ‘இயர்லி ஸ்டெப்ஸ் அகாடமி’யின் தலைமை நிர்வாக அதிகாரி சினேகா விஸ்வாஸ் ‘லிங்கிடு இன்’ சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் தனது பதிவில் பாகிஸ்தானில் இருந்து வந்து ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் தன்னுடன் படித்த தனது வகுப்புத் தோழி பற்றி பேசியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் அப்பெண்ணுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் சினேகா பகிர்ந்து கொண்டுள்ளார். இப்பதிவில் இரு நாடுகளுக்கு … Read more

தொடர்ந்து ஓடும் ராஜபக்ச! சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் தஞ்சமடைந்தார்

இலங்கையில் இருந்து தப்பி சிங்கப்பூரில் அடைக்கல்ம் புகுந்த முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு சிக்கல்கள் அதிகரித்துள்ளன. கோட்டாபய ராஜபக்ச, வியாழன் அன்று (2022 ஆகஸ்ட் 11) வெகுஜன எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாய்லாந்திற்கு சென்றுள்ளார். கடந்த மாதம் தனது தீவு தேசத்தை விட்டு வெளியேறிய பின்னர் முதலில் சிங்கப்பூரில் இருந்த அவர், இரண்டாவதாக தென்கிழக்கு ஆசிய நாட்டில் தற்காலிகமாக தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து வெளியேறியதாக நகர-மாநில குடிவரவு அலுவலகம் … Read more

தாய்லாந்து சென்றார் இலங்கை மாஜி அதிபர் கோத்தபய ராஜபக்சே| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர் : இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஆசிய நாடான சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு சென்றார். நம் அண்டை நாடான இலங்கையில், மக்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டில் இருந்து தப்பினார். ஆசிய நாடான மாலத் தீவுகளுக்கு, ஜூலை 13ம் தேதி சென்றார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்ற அவர், அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அவருக்கு, அந்நாட்டில் வழங்கப்பட்டிருந்த குறுகிய கால ‘விசா’ … Read more

வறட்சியால் மலைப்பகுதிகளில் வசிக்கும் கால்நடைகளுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் குடிநீர் எடுத்துவரும் பணிகள் தீவிரம்

சுவிட்சர்லாந்தில் நிலவும் வறட்சியால் மலைப்பகுதிகளில் வசிக்கும் கால்நடைகளுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டது. பருவமழை பொய்த்ததால் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் உள்ள நீர்தேக்கங்கள் வறண்டும், புல்வெளிகள் காய்ந்தும் காணப்படுகின்றன. அங்கு வளர்க்கப்படும் கால்நடைகளை மேய்ச்சலுக்காக பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அழைத்து வந்தால் அடுத்து குளிர் காலத்தில் தீவனத்தட்டுப்பாடுக்கு வழிவக்கும் என்பதால் விவசாயிகள் ராணுவத்தின் உதவியை நாடினர். இதையடுத்து 3 ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் எடுத்து வரப்பட்டு நீர்தேக்கங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.   Source … Read more

ஐ.நா.,வில் இந்தியா அளித்த முன்மொழிவை நிறுத்தி வைத்தது சீனா| Dinamalar

நியூயார்க்:பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அஸாரின் சகோதரரும், அந்த அமைப்பின் துணை தலைவருமான அப்துல் ரவுப் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா – அமெரிக்கா அளித்த கூட்டு முன்மொழிவை சீனா நிறுத்தி வைத்துள்ளது. சர்வதேச பயங்கரவாதி கடந்த 2008 நவம்பரில், மஹாராஷ்டிராவின் மும்பை நகரில், பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.உலகையே அதிர்ச்சி … Read more

அடங்காத சீனா அனுப்பியது கப்பலைஇலங்கையை நெருங்கியது| Dinamalar

இலங்கை:இந்தியா மறுத்தும் கேட்காமல் சீன உளவு கப்பல் ‘யுவான் வாங் 5’ இலங்கை அம்பன்தோட்டா துறைமுகம் நோக்கி வந்துள்ளது. ஆனால் அந்த கப்பல் அம்பன்தோட்டாதுறைமுகத்துக்கு வராது என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நம் அண்டை நாடான சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பலை, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் ஆக., 11 – 17 வரை நிறுத்திவைக்க சீனா திட்டமிட்டது. விண்வெளி மற்றும் செயற்கைக்கோளை கண்காணிக்கும் இந்த உளவு கப்பலை இலங்கையில் நிறுத்துவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு … Read more

தாய்லாந்து சென்றார் இலங்கை முன்னாள் அதிபர்| Dinamalar

சிங்கப்பூர்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆசிய நாடான சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு சென்றார். நம் அண்டை நாடான இலங்கையில் மக்களின் போராட்டங்களைத் தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டில் இருந்து தப்பினார். ஆசிய நாடான மாலத் தீவுகளுக்கு ஜூலை 13ம் தேதி சென்றார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்ற அவர் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அவருக்கு அந்நாட்டில் வழங்கப்பட்டிருந்த குறுகிய கால ‘விசா’ நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து கோத்தபய சிங்கப்பூரில் இருந்து … Read more

ரஷியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடு என பகிரங்கமாக அறிவித்த லாட்வியா!

பெர்லின். லாட்வியா நாட்டின் நாடாளுமன்றம் ரஷியாவை பயங்கரவாதத்திற்கு உறுதுணையாக ஆதரவளிக்கும் நாடாக பகிரங்கமாக அறிவித்துள்ளது. உக்கரைனில் அப்பாவி பொதுமக்கள் மீது ரஷியா கொடூர தாக்குதல் நடத்துவதாகவும், உலக பிற நாடுகளும் ரஷியாவை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்க வேண்டும் என லாட்வியா அழைத்துள்ளது. ரஷியா உக்ரைன் மக்களை துன்பத்திற்கு ஆளாக்கியும், அவர்களை தாக்கி அவர்கள் சிரமப்படுவதை கருவியாக பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் உக்ரைனை நிலைகுலையச் செய்ய ரஷியா முயற்சித்து வருகிறது. மேலும் ஒட்டுமொத்த உக்ரைனையும் நிலைகுலையச் … Read more

வங்கி ஊழியர்களை பணையக்கைதிகளாக சிறைவைத்த நபர்.. வங்கி கணக்கில் முடக்கப்பட்டுள்ள பணத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தல்..!

லெபனான் நாட்டில், துப்பாக்கியுடன் வங்கிக்குள் புகுந்த நபர் தனது வங்கி கணக்கில் முடக்கப்பட்டுள்ள 2 லட்சம் அமெரிக்க டாலர்களை விடுவிக்க கோரி ஊழியர்களை பணையக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளார். லெபனான் அரசு கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளதால் வங்கியில் இருந்து பணத்தை எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தந்தையின் மருத்துவச்செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் பெய்ரூட்டில் உள்ள பெடரல் வங்கிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த நபர், தனது பணத்தை கேட்டு 7 வங்கி ஊழியர்களை பணயக்கைதிகளாக சிறைபிடித்துள்ளார். அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு … Read more