மேற்குகரையில் இஸ்ரேல் அதிரடி சோதனை; அல்-அக்சா பிரிகேடிஸ் முக்கிய தளபதி சுட்டுக்கொலை

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேற்குகரை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. காசா முனையில் ஹமாஸ் மட்டுமின்றி மேலும் சில ஆயுதமேந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அந்த … Read more

எரிந்து சாம்பலான சீனாவின் பழமையான மரப்பாலம்..! – காரணம் யார் தெரியுமா..?

கிழக்கு சீனாவில் உள்ள புஜியான் மாகாணத்தில் உள்ள பழமையனா மரப் பாலம் எரிந்து சாம்பலாகி உள்ளது. இது 900 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. கலைநயமிக்க நீண்ட பாலம் என்று சீனர்களால் பெருமைபடுத்தப்பட்டுள்ளது இந்த பாலம். சீனாவின் கிழக்கே புஜியான் மாகாணத்தில் பிங்னன் கவுண்டி எனும் பகுதியில் சாங் வம்சத்தினர் ஆட்சி செய்த போது 960-1127 காலகட்டத்தில் மரத்தில் உருவான நீண்ட மரப்பாலம் இது. 98.3 மீட்டர்கள் நீளம் கொண்டது இந்த பாலம், வரலாற்று சிறப்புமிக்க இந்த … Read more

ஈரானின் கண்காணிப்பு செயற்கைகோள் விண்ணில் பாய்ந்தது.. விவசாயம், அறிவியல் கண்காணிப்புக்காக ஏவப்பட்டது..!

கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் ஏவுதளத்தில் இருந்து விவசாயம் மற்றும் அறிவியல் தொடர்பான பணிகளுக்காக ஈரானின் கண்காணிப்பு செயற்கைகோள் ரஷ்ய ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஈரான் மற்றும் ரஷ்யா நாடுகளின் நலனுக்காக ‘கயாம்’ என்ற  செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டதாக இருநாடுகளும் கூறியுள்ள நிலையில், இந்த செயற்கைகோள் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ராணுவ இலக்குகளை கண்காணிக்க உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.  Source link

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் சோதனை| Dinamalar

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் வீட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை அமெரிக்காவின் இருண்ட காலம் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது ரகசிய ஆவணங்களை பெட்டிகளில் வைத்து எடுத்துச் சென்றதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பாக நேற்று (ஆக.,8) அவரது இல்லத்தில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின்போது டிரம்ப் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. எப்.பி.ஐ அதிகாரிகளின் … Read more

போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது – தைவான் குற்றச்சாட்டு!

தைவான் மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருவதாக, அந்நாட்டு அரசு குற்றம் சாட்டி உள்ளது. தைவான் நாட்டை தங்களது நாட்டின் ஓர் அங்கம் என்று கூறி சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவான் நாட்டிற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அண்மையில் தைவானுக்குச் சென்றார். இதனால் கடும் கோபம் … Read more

தைவானை சுற்றி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள சீனா மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது – அதிபர் ஜோ பைடன்!

தைவானை சுற்றி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள சீனா மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது என தாம் நினைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.  அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை அடுத்து அந்த தீவை சுற்றி ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ள சீனாவின் நடவடிக்கை குறித்து முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஜோ பைடன், ஆத்திரமூட்டும் வகையில் செயல்படும் சீனாவுக்கு தொடக்கத்தில் இருந்து கண்டனம் தெரிவித்து வருவதாக கூறியுள்ளார். சீனாவின் ராணுவ ஒத்திகை கவலையளிக்கும் … Read more

முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் FBI சோதனை; வளரும் நாடுகளில் மட்டுமே இது நடக்கும் என டிரம்ப் விமர்சனம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மார்-ஏ-லாகோவில் உள்ள வீட்டில் FBI சோதனை நடத்தியது. இந்த தகவலை அளித்த டிரம்ப், ஏழை மற்றும் வளரும் நாடுகளில் மட்டுமே இதுபோன்ற “தாக்குதல்” நிகழ்கிறது என்று கூறினார். புளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக அமெரிக்க முன்னாள் அதிபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். “இது நம் நாட்டிற்கு மோசமான நேரம், ஏனென்றால் புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள மார்-ஏ-லாகோவில் உள்ள எனது அழகான வீடு FBI முகவர்களின் … Read more

படையெடுப்புக்குத் தயாராகிறது சீனா: தைவான் வெளியுறவு அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு

போர் ஒத்திகை மூலம் படையெடுப்புக்கு சீனா தயாராகி வருவதாக தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ குற்றஞ்சாட்டியுள்ளார். வான்வழி, கடற்பரப்பில் ஒத்திகைகள் நடத்துவதே போர் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்காகத் தான் என்றும அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றார். அவர் வருகைக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்துவந்த சீனா, அவர் வந்தபின்னர் எல்லையை ஒட்டி போர் ஒத்திகைகளை முடுக்கிவிட்டது. இந்நிலையில் தலைநகர் தைபேவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார் … Read more

பரிசாக வந்த கைக்கடிகாரங்களை விற்று கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக புகார்.. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு நோட்டீஸ்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தமக்கு பரிசாக வந்த விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை விற்று கோடிக்கணக்கில் பணம் பெற்ற புகாரில், வருகிற 18ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். வளைகுடா நாடுகளில் இருந்து வருகை தந்த பிரமுகர்கள் பரிசளித்த 3 கைக்கடிகாரங்களை விற்று 36 மில்லியன் பணத்தை பெற்றதாக இம்ரான்கான் மீது பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விருந்தினர்களிடம் இருந்து பெறப்பட்ட பெரும்பாலான பரிசுகளை இம்ரான்கான் இலவசமாக எடுத்துச் சென்றதாக … Read more

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இல்லத்தில் எப்பிஐ அதிகாரிகள் சோதனை..!

அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப்பின் இல்லத்தில் எப்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ள நிலையில், இந்த சோதனை அமெரிக்காவின் இருண்ட காலம் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார். 2021ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்போது ரகசிய ஆவணங்களை பெட்டிகளில் வைத்து எடுத்துச் சென்றதாக டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில், அதுதொடர்பாக புளோரிடாவின் Palm கடற்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். நீதிமன்றத்தின் அனுமதி பெற்று இந்த சோதனை நடைபெற்றதாக புலனாய்வு அதிகாரிகள் … Read more