ஹவாய்த் தீவுகளையொட்டிய கடற்பகுதியில் குவிந்துள்ள 44 டன் கழிவுகள் அகற்றம்..
ஹவாய்த் தீவுகளையொட்டிய கடற்பகுதியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 44 டன் கழிவுப் பொருட்களைச் சேகரித்து அப்புறப்படுத்தியுள்ளனர். ஹவாய்த் தீவுகளையொட்டிய கடற்பகுதியில் மீனவர்கள் கைவிடும் நைலான் வலைகள் உள்ளிட்ட கழிவுகள் சீல், ஆமை, சுறா உள்ளிட்ட அரிய உயிரினங்களுக்கு அழிவை ஏற்படுத்துவனவாக உள்ளன. இந்நிலையில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கடலில் மூழ்கி அடியில் கிடந்த வலைகள் உள்ளிட்ட கழிவுகளை வெளியே எடுத்துக் கொண்டுவந்தனர். Source link