117 பேரின் எலும்புக்கூடுகள் இந்தோனேஷியாவில் தகனம்| Dinamalar

ஜகர்த்தா : இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள ஹிந்துக்கள் பாரம்பரிய வழக்கப்படி, இறந்த 100க்கும் மேற்பட்ட வர்களின் எலும்புக் கூடுகளை ஒரே சமயத்தில் தகனம் செய்தனர். தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்தோனேஷியாவில் உள்ளது பாலி தீவு. இங்கு உள்ள ஹிந்துக்கள், இறந்தவர்களின் உடல்களை முதலில் புதைத்து, சில காலத்திற்குப் பின், சவக்குழியில் இருந்து எலும்புகளை எடுத்து, மொத்தமாக தகனம் செய்கின்றனர். இந்த சடங்கு முடிந்த பின் தான், இறந்தவர்களின் ஆத்மா விடுதலை அடைந்து, புது வாழ்க்கையை … Read more

ரஷ்யாவிற்கு, அமெரிக்கா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது – அதிபர் புடின்

ரஷ்யாவிற்கு அமெரிக்கா மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக அதிபர் புடின் கூறியுள்ளார். ரஷ்ய கடற்படை தினத்தை முன்னிட்டு புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற போர்க்கப்பல்களின் அணிவகுப்பு மரியாதையை புடின் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பேசிய புடின், உலகில் உள்ள அனைத்து பெருங்கடல்களிலும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த நினைப்பதாக குற்றம்சாட்டினார். நேட்டோ படைகளின் கூட்டமைப்பில் ரஷ்ய எல்லையில் உள்ள நாடுகள் இணைவது நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதக் கூறிய புடின், ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஜிர்கான் ஹைபர்சானிக் … Read more

தாய் அன்பு… குழந்தைக்கு தெம்பு: உலக தாய்ப்பால் வாரம் ( ஆக. 1 – 7)

பத்து மாதங்கள் தாயின் கருவறையில் இருந்து வெளிவரும் குழந்தை, முதலில் சுவைப்பது அன்னையின் தாய்ப்பால். இது தான் குழந்தையின் முதல் உணவு. குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும், புரதமும் அடங்கியுள்ளது. அனைத்து விதமான சத்துகளும் சரியானவிகிதத்தில் இயற்கையாகவே அமைந்துள்ளது. தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை தாய்மார்களுக்கு உணர்த்தும் விதமாக உலக தாய்ப்பால் வாரம் (ஆக. 1 – 7) கடைபிடிக்கப்படுகிறது. ‘தாய்ப்பால்: வாழ்க்கை யின் அடித்தளம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. எத்தனை நாள் : குழந்தை பிறந்த … Read more

தங்கம் வென்றார் ஜெரிமி: காமன்வெல்த் பளுதூக்குதலில் அசத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்தியாவின் ஜெரிமி லால்ரின்னுங்கா (67 கிலோ) தங்கம் வென்றார். இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான பளுதுாக்குதல் 67 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் ஜெரிமி லால்ரின்னுங்கா பங்கேற்றார். ‘ஸ்னாட்ச்’ பிரிவில் அதிகபட்சமாக 140 கிலோ துாக்கிய இவர், ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் அதிகபட்சமாக 160 கிலோ துாக்கினார். ஒட்டுமொத்தமாக 300 கிலோ பளுதுாக்கிய இவர், காமன்வெல்த் … Read more

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர் – யார் இந்த ரிஷி சுனக்?

பிரிட்டன் பிரதமர் தேர்தல் ஒரு வழியாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து பிரதமர் தேர்தல் வழக்கத்தை விட இந்தியாவில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதற்குக் காரணம் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவரான ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச்  சேர்ந்தவர் என்பதே. ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் போரிஸ் ஜான்சன் தலைமை மீது அதிருப்தி எழுந்தநிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தாலும் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக தனது பதவியை ராஜினாமா செய்து அவரது அரசுக்கு முடிவுரையைத் தொடங்கி வைத்தவர் ரிஷி … Read more

நேற்று இலங்கை… இன்று ஈராக்… தொடரும் மக்கள் போராட்டம்!

ஈராக்கில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற தேர்தலில் அல்-சதரின் கட்சி 73 இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்பதுடன், அதிக வாக்குகளை பெற்ற கட்சி என்ற பெருமையையும் பெற்று திகழ்ந்தது. எனினும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் யார் ஆட்சிப் பொறுப்பு ஏற்பது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதனிடையே, முகமது அல்-சூடானி ஈராக்கின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஷியா பிரிவு தலைவரான அல்-சதருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். பிரதமராக … Read more

இலங்கையில் சீன கப்பல்: உறுதி செய்தது ராணுவம்| Dinamalar

கொழும்பு:இலங்கை அம்பந்தோட்டை துறைமுகத்தில், சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியான தகவலை, இலங்கை ராணுவம் உறுதி செய்தது. நம் அண்டை நாடான சீனாவின் உளவு கப்பல், இலங்கை துறைமுகத்துக்கு விரைவில் வரப் போவதாக, சமீபத்தில் செய்தி வெளியானது. நம் நாட்டின் கடலோர மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளாவை உளவு பார்ப்பதற்காக, இந்தக் கப்பல் அனுப்பப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உஷாராக இருக்கும்படி, இந்த மாநிலங்களை மத்திய அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில், சீன … Read more

பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 320 ஆக உயர்வு..!

கராச்சி, பாகிஸ்தானில் கடந்த 5 வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கினால் அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த மாகாணத்தில் மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. அந்நாடு முழுவதும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பலுசிஸ்தானில் சுமார் 13,000 வீடுகள் வெள்ளத்தில் முழுமையாக முழ்கியுள்ளன. கராச்சி மற்றும் சிந்து மாகாணத்தில் மழை வெள்ளத்திற்கு 70 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more

பலூசிஸ்தானில் கால்பந்து போட்டியில் எறிகுண்டு தாக்குதல்; 3 பேர் காயம்

குவெட்டா, பாகிஸ்தான் நாட்டின் கட்டுப்பாட்டில் பல ஆண்டுகளாக இருந்து வரும் பலூசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் விமான நிலைய சாலையில் அமைந்த துர்பத் ஸ்டேடியத்தில் கால்பந்து போட்டி ஒன்று நேற்று நடந்து கொண்டு இருந்தது. இதில், வீரர்களின் விளையாட்டை காண ரசிகர்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், திடீரென கால்பந்து போட்டி நடந்த ஸ்டேடியத்திற்கு அருகே வெடிசத்தம் கேட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். இதில், எறிகுண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டு உள்ளது என … Read more