பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு கொரோனா
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு (வயது 67) கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அவரது மகனும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரியுமான பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். ஆசிப் அலி சர்தாரி கொரோனாவுக்கு எதிராக 2 ‘டோஸ்’ தடுப்பூசிகள் மட்டுமின்றி, பூஸ்டர் டோசும் செலுத்திக்கொண்டுள்ள நிலையில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ள அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுவதாகவும், சிகிச்சை பெற்றுவருவதாகவும் பிலாவல் பூட்டோ … Read more