இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: ரிஷி சுனக் – லிஸ் டிரஸ் இடையே தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அனல் பறந்த வாக்குவாதம்!

லண்டன், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் பழமைவாத கட்சி (கன்சர்வேடிவ்) நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் ஆரம்பம் முதலே அதிக வாக்குகளுடன் முன்னிலையில் உள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் – லிஸ் … Read more

UK PM Election : ரிஷி சுனக் – லிஸ் டிரஸ் இடையே அனல் பறந்த விவாதம்

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து,  புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  புதிய பிரதமர் பதவிக்கு வர 8 எம்.பி.க்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு சுற்றுகளாக எம்.பி.க்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த வாக்குகளைப் பெறுபவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனார். புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில், இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை … Read more

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து தலைவர் டேவிட் டிரிம்பிள் காலமானார்!

லண்டன், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டின் முதல்-மந்திரியாக இருந்த டேவிட் டிரிம்பிள் காலமானார். அவருக்கு வயது 77. அவர் மறைந்துவிட்ட செய்தியை அவரது குடும்பத்தினர் நேற்று உறுதிபடுத்தியுள்ளதாக டிரிம்பிளின் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி(யூயூபி) தெரிவித்துள்ளது. அவருடைய முயற்சியின் கீழ் 1998ம் ஆண்டு பெல்பாஸ்ட் ஒப்பந்தம் நிறைவேறியது. மேலும் அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என்று போற்றப்படுபவர் ஆவார். அப்பகுதிகளில் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த செக்டேரியன் வன்முறையில் சுமார் … Read more

விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததால் விமான ஊழியர் அதிர்ச்சி! விசாரணைக்கு உத்தரவு

அங்காரா, துருக்கியை சேர்ந்த விமான நிறுவனத்தின் விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் இறந்த பாம்பின் தலை இருந்ததாக விமான ஊழியர் புகார் அளித்தார். இதை அடுத்து விமான நிறுவனம் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து ஜெர்மனிக்கு கடந்த ஜூலை 21ஆம் தேதி புறப்பட்ட விமானத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அப்போது அந்த விமான ஊழியர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுடன் … Read more

இந்துக்களும், சீக்கியர்களும் ஆப்கன் திரும்பலாம்: தலிபான்கள் அழைப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் தற்போது பாதுகாப்பு நிலைமை சீராகிவிட்டது எனவே இந்துக்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினர் நம் நாட்டுக்கு திரும்பலாம் என தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தலிபான்கள் கடந்த சில நாட்களாக இந்து, சீக்கிய அமைப்புகளிடம் பாதுகாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பில், “பாதுகாப்பு பிரச்சினை காரணமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய இந்துக்களும், சீக்கியர்களும் நாடு திரும்பலாம். பாதுகாப்பு பிரச்சினைகள் சீராகிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு … Read more

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் – தலீபான்கள் வலியுறுத்தல்

காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள சீக்கிய வழிபாட்டு தளத்தில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதனை அடுத்து சீக்கிய குருத்வாரா மறுசீரமைப்பு செய்ய தலீபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு முடிவு எடுத்தது. இந்நிலையில் தலீபான்கள் சிறுபான்மையினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நிலைமை சீராகி விட்டதாகவும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் உட்பட மதச் சிறுபான்மையினர் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். சீக்கிய குருத்வாரா தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட குழு குருத்வாராவுக்கு … Read more

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன்…!ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கிறேன் – ஜோ பைடன்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெள்ளை மாளிகையில் உள்ள குடியிருப்பில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.தனிமைப்படுத்தலில் இருந்தபடியே தனது அனைத்து பணிகளையும் ஜோ பைடன் மேற்கொள்வார் எனவும் அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை தெரிவித்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன்,ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கிறேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.கணினி மைக்ரோசிப் தயாரிப்பு குறித்த கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்றபிறகு பேசிய அவர் … Read more

போப் பிரான்சிஸ்க்கு பழங்குடியின மக்கள் உற்சாக வரவேற்பு.. கத்தோலிக்க உறவிடப் பள்ளியில் உயிரிழந்த குழந்தைகளுக்காக பிரார்த்தனை..!

கனடா சென்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ், அல்பெர்டா மாகாணத்தில் உள்ள பழங்குடியின மக்களுடன் இணைந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். போப் பிரான்சிஸ்க்கு பழங்குடியின மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கத்தோலிக்க உறவிடப் பள்ளியில் உயிரிழந்த ஒன்றரை லட்சம் பழங்குடியின குழந்தைகளுக்காக போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். Source link

நீண்ட காலமாக உடலுறவு கொள்ளவில்லை: வதந்திகளுக்கு விளக்கமளிக்கும் எலோன் மஸ்க்

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், தனது தனிப்பட்ட வாழ்க்கைக்காக அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பெறுவார். அதேபோல அவரும் தனது சமூக ஊடகங்களில் பல விஷயங்களையும் வெளிப்படையாகப் பேசுவார். நீண்ட காலமாக உடலுறவு கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். வதந்திகளுக்கு விளக்கமளிக்கும் எலோன் மஸ்க்கின் இந்த விளக்கம் பலனளிக்குமா என்று நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர். கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவி நிக்கோல் ஷனஹானுடனான விவகாரம் குறித்த செய்திக்கு பதிலளித்த எலோன் மஸ்க் தனது பாலியல் வாழ்க்கை குறித்து தெரிவித்துள்ளார். தான் … Read more

சீன அதிபருடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறும்.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சூசக தகவல்..!

அமெரிக்கா மற்றும் சீன அதிபர்கள் இடையே இந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வாரம் சீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். அமெரிக்காவில் ஒரு போதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறிய பைடன் விரைவான வளர்ச்சியில் இருந்து நிலையான வளர்ச்சிக்கு செல்லும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.  Source link