Asteroid Bennu: சிறுகோள் பென்னுவின் ஆச்சரியமான மர்மங்களை அவிழ்க்கும் நாசா

சிறுகோள் பென்னு மர்மம்: மர்மங்கள் நிறைந்த சிறுகோள் பென்னுவின் பகல்-இரவு சுழற்சி 4.3 மணி நேரத்தில் முடிகிறது, காலையில் 127 டிகிரி வெப்பத்தால் நெருப்பாய் தகிக்கும் என்றால், இரவில் -23 டிகிரி வெப்பநிலையில் கல்லாய் உறையும் என்று நாசா வெளியிட்டுள்ள தகவல் ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. சில காலத்திற்கு முன்பு, நாசா பென்னு என்ற சிறுகோளின் மேற்பரப்பில் OSIRIS-REx வாகனத்தை செலுத்தியது. இந்த வாகனம் அங்கிருந்து அனுப்பும் தகவல்கள் விஞ்ஞானிகளுக்கும் ஆச்சரியங்களை அள்ளித் தருகிறது. இன்னும் சில நாட்கள் விஞ்ஞானிகள் இந்த சிறுகோளை ஆய்வு செய்வார்கள். … Read more

திரவுபதி முர்முவுக்கு சீன, இலங்கை அதிபர்கள் வாழ்த்து

புதுடெல்லி: இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக நேற்று பதவியேற்ற திரவுபதி முர்முவுக்கு ரஷ்ய, சீன, இலங்கை அதிபர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று முக்கியமான அண்டை நாடுகள். திரவுபதி முர்முவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்கவும் விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் உயரிய பதவியான … Read more

சீனாவில் வரலாறு காணாத வெப்பத்தால் மக்கள் அவதி.. வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டும் அபாயம்..!

சீனாவில் கொளுத்தும் வெப்பம் காரணமாக அங்குள்ள 70 நகரங்களுக்கு ‘அதீத வெப்ப எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் அங்கு 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியிருப்பதால் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. 393 சீன நகரங்களில் 35 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெப்பநிலை இருக்கும் எனவும், கடும் வெப்பம் காரணமாக காட்டுத் தீ ஏற்படக்கூடும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.  Source link

Apologised Pope Francis: இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பு கோரும் போப் பிரான்சிஸ்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வாடிகன் நகரத்தின் இறையாண்மையுமான போப் பிரான்சிஸ், கனடாவின் பழங்குடியின மக்களுக்கு எதிராக பல கிறிஸ்தவர்கள் செய்த கலாச்சார அழிவுகள் மற்றும் கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்டார். நவீன உலகில் மதகுருக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் போப் பிரான்சிஸ். கடந்த பல நூற்றாண்டுகளாக மதங்களின் பெயரால் உலகெங்கும் நிகழ்ந்த அட்டூழியங்களை அடையாளப்படுத்தி, அவற்றை ஏற்றுக் கொண்டு வரலாற்றின் அங்கமாக அங்கீகரிப்பதன் அவசியத்தை போப் பிரான்சிஸ் உணர்ந்திருக்கிறார்.  Dear … Read more

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து திருடிச்சென்ற பொருட்களை விற்க முயன்ற 3 நபர்கள் கைது..!

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து திருடிச்செல்லப்பட்ட 40 பொன்முலாம் பூசப்பட்ட பித்தளைப்பிடிகளை விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியபோது, மக்களுடன் உள்ளே நுழைந்த அந்த நபர்கள் சுவற்றில் திரைசீலைகளை தொங்க விடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த 40 பித்தளைப்பிடிகளை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. இவற்றை அவர்கள் விற்க முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். Source link

மியான்மரில் 4 பேருக்கு துாக்கு| Dinamalar

பாங்காக் : மியான்மர் ராணுவ அரசு, ஐ.நா., உள்ளிட்ட அமைப்புகளின் வேண்டுகோளை நிராகரித்து, முன்னாள் எம்.பி., உட்பட நான்கு பேருக்கு, துாக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. நம் அண்டை நாடான மியான்மரில், ராணுவம் புரட்சி நடத்தி, ஆங் சன் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி தலைமையிலான அரசை, 2021ல் கைப்பற்றியது. அப்போது, ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள், இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து, குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டி, தேசிய லீக் கட்சியின் … Read more

குகையிலிருந்து பறந்து சென்ற நூற்றுக்கணக்கான வெளவால்கள்.. கருப்பு ஆறு போல் வானில் பறந்து ஜாலம் – வீடியோ இணையத்தில் வைரல்..!

மெக்சிகோவில் உள்ள வெளவால்களின் குகை என்றழைக்கப்படும் குகையிலிருந்து, நூற்றுக்கணக்கான வெளவால்கள் பறந்து சென்ற காட்சியை காரில் பயணித்த நபர் ஒருவர் பதிவு செய்தார். அளவில் சிறியதாக இருக்கும் இந்த வெளவால்கள், தென் மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் பொலிவியா, பிரேசிலில் மட்டும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைட்டானிக் பட நடிகர் புற்றுநோயக்கு பலி| Dinamalar

லண்டன்: டைட்டானிக் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், பிரபல பிரிட்டன் நடிகருமான டேவிட் வார்னர்,82 உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். 70-களில் வெளியான ஓமன், டாரன் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். 1997-ல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் படத்திலும் நடத்தியுள்ளார். பிரிட்டனின் மான்செஸ்டரில் பிறந்த டேவிட் வார்னர், கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன்றி கடந்த ஞாயிறன்று காலமானார். லண்டன்: டைட்டானிக் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், பிரபல பிரிட்டன் … Read more

இலங்கைக்கு வழங்கும் பொருளாதார உதவியை நிறுத்தி கொள்ளுமாறு ஜப்பானிடம் வலியுறுத்திய ரணில் விக்கிரமசிங்கே

ரணில் விக்கிரமசிங்கே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இலங்கைக்கு வழங்கும் பொருளாதார உதவியை நிறுத்தி கொள்ளுமாறு ஜப்பானிடம் வலியுறுத்திய உரையாடலை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. 2007ம் ஆண்டு நடந்த இந்த உரையாடலில் தலைவர்களின் செயல்பாடுகளால் மக்கள் தண்டனை பெறக் கூடாது என ஜப்பான் அரசு பதிலளித்துள்ளது.   Source link

நண்பரின் மனைவியுடன்தொழிலதிபருக்கு காதல்?| Dinamalar

நியூயார்க் : ‘கூகுள்’ துணை நிறுவனர் செர்ஜி பிரின்னின் மனைவியுடன், பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க்குக்கு ரகசிய உறவு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இதை எலன் மஸ்க் மறுத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க், பல்வேறு புதிய முயற்சிகளுக்கு சொந்தக்காரர். அதுபோலவே, பல சர்ச்சைகளும் இவரைச் சுற்றி நிகழ்ந்துள்ளன.பிரபல பாடகி கிரிம்ஸ் உடன் இணைந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், தன்னுடைய ‘நியூராலிங்க்’ … Read more