உலகத்திற்கே நல்ல செய்தி… ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறப்பு – ஈரான் அறிவிப்பு

Strait of Hormuz: போர் நிறுத்தம் காலகட்டத்தில் ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து எண்ணெய் கப்பல்களும் அனுமதிக்கப்படும் என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டிரம்ப் கொடுத்த ஷாக்! ஈரானின் 'சுங்க' வேட்டை .. பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு? கவலையில் இந்தியா!

Iran US Conflict News In Tamil: பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்படும் என்ற டிரம்பின் எச்சரிக்கையால் கச்சா எண்ணெய் விலை $127 ஆக உயர்ந்தது. இதன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தை 1.6% சரிவைச் சந்தித்துள்ளது.

ரூ.930 கோடி + அழகான பெண்… அதிபர் மகனின் அடாவடி பேச்சு – துருக்கி vs உகாண்டா

Uganda vs Turkey: துருக்கி நாடு தங்களுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலரையும், நாட்டின் அழகான பெண்ணை தனக்கு மனைவியாக்குவதற்கும் தர வேண்டும் என உகாண்டா நாட்டின் பாதுகாப்புப் படைத் தளபதி முஹூசி கைனருகபா தெரிவித்திருப்பது அந்நாடுகள் இடையே பெரும் பதற்றத்தை உண்டாக்கி உள்ளது. இந்த சர்ச்சையின் பின்னணியை இங்கு அலசலாம். 

உளவுத்துறை தலைவரை போட்டுத்தள்ளிய அமெரிக்கா… ஈரானுக்கு செட்பேக் – யார் இந்த மஜித் காதேமி?

Majid Khademi Killed: அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில், ஈரானின் உளவுத்துறை தலைலவர் மஜித் காதேமி உயிரிழந்துவிட்டதாக, இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 6 வாரங்களாக நடைபெற்று வரும் இந்த போரில், ஈரானுக்கு மேலும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

'கொல்கத்தாவை தாக்குவோம்…' இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் – வீண் பேச்சுக்கு குறைச்சல் இல்லை!

India – Paksitan Conflict: இந்தியா தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நினைத்தாலோ, தாக்குதல் தொடுக்க முயற்சித்தாலோ, நாங்கள் கொல்கத்தாவை தாக்குவோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பேசி உள்ளார். இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகப்படுத்தி உள்ளது.

சட்டுனு ஏறிய பெட்ரோல், டீசல் விலை… உடனே குறைத்த பாக்., பிரதமர் – மக்கள் நிம்மதி

Pakistan Petrol, Diesel Price: இஸ்ரேல்  – அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக பாகிஸ்தானில் கடுமையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கும் சூழலில், பொதுமக்கள் கடும் போராட்டத்தில் இறங்கினர். இதனால், அந்நாட்டு அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது.

வெடித்து சிதறிய போர் விமானம்… ஈரானிடம் சிக்கிய அமெரிக்க விமானி – போரில் முக்கிய ட்விஸ்ட்

Iran War Latest News Updates: தென்மேற்கு ஈரானில், அமெரிக்க போர் விமானத்தில் இருந்து விமானி கீழே குதித்து வெளியேறினார் என ஈரானிய அரசு தொலைக்காட்சியை மேற்கொள் காட்டி AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், மற்றொரு அமெரிக்க போர் விமானத்தை ஈரான் வீழ்த்தியதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்க விமானியை ஈரானி் தற்போது பிடித்துவைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டிரம்ப் சொன்ன ஒரே வார்த்தை… தங்கம் விலை வீழ்ச்சி – அடுத்தது என்ன?

Donald Trump Latest Speech: ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கை வரும் இரண்டு மூன்று வாரங்களில் கடுமையாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியிருப்பதன் மூலம், சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

கன்னி வெடியில் கால் வைக்கும் டிரம்ப்… தரை வழி அட்டாக் – அமெரிக்காவின் அடுத்த அதிரடி என்ன?

Iran US Israel War Updates: ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் பிடியை தளர்த்தவும், ஈரானின் அதிமுக்கியமான கார்க் தீவை கைப்பற்றவும் அமெரிக்கா அரசு சிறப்பு நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் படை வீரர்களை களமிறக்கி தரை வழி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொருளாதார சிக்கல்.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக போர் கொடி!

US Economic Crisis 2026 Protest: அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது உலகவும் முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது.