அமெரிக்க பூங்காவில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி| Dinamalar

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் உள்ள பூங்காவில், மர்ம மனிதர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், பூங்கா ஒன்று உள்ளது. நேற்று முன்தினம், இப்பூங்கா அருகே கார் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது, பூங்காவில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. இதையடுத்து, மக்கள் அலறி அடித்து ஓடினர். இது குறித்து, லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் அதிகாரி கெல்லி முனிஸ் கூறியதாவது:பூங்காவில் உள்ள பேஸ்பால் விளையாட்டு திடலில் துப்பாக்கிச் … Read more

ஜப்பானிலும் பரவியது குரங்கம்மை நோய்.. 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது..!

ஜப்பானில் முதல் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. தலைநகர் டோக்கியோவில் வசிக்கும் 30 வயதான இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 75-ற்கும் மேற்பட்ட நாடுகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலம் மற்றவர்களுக்கும் பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஹைதியில் 17 பேர் பலி| Dinamalar

பஹாமாஸ் : வட அமெரிக்காவில், கரீபிய தீவு நாடான ஹைதியிலிருந்து மியாமிக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் படகு, கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில், 17 பேர் உயிரிழந்தனர். ஹைதியில் பொருளாதாரம் சீர்குலைந்ததால், அடிப்படை தேவையான நீர், உணவு உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அருகில் உள்ள நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். இந்நிலையில், ஹைதியிலிருந்து பஹாமாஸ் வழியாக, 60க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, அமெரிக்காவின் மியாமி கடற்கரை நோக்கி, நேற்று முன்தினம் … Read more

நண்பரின் மனைவியுடன் தொழிலதிபருக்கு காதல்?| Dinamalar

நியூயார்க் :’கூகுள்’ துணை நிறுவனர் செர்ஜி பிரின்னின் மனைவியுடன், பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க்குக்கு ரகசிய உறவு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.ஆனால், இதை எலன் மஸ்க் மறுத்துள்ளார்.அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க், பல்வேறு புதிய முயற்சிகளுக்கு சொந்தக்காரர். அதுபோலவே, பல சர்ச்சைகளும் இவரைச் சுற்றி நிகழ்ந்துள்ளன.பிரபல பாடகி கிரிம்ஸ் உடன் இணைந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், தன்னுடைய ‘நியூராலிங்க்’ நிறுவனத்தில் பணியாற்றும் ஷிவோன் … Read more

தான் பிரதமரானால் சீனாவிடம் கண்டிப்புடன் நடந்துகொள்வேன் – ரிசி சுனக்

தான் பிரதமரானால் பிரிட்டனுக்கு நெடுங்காலமாகப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சீனாவிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ளப்போவதாக ரிசி சுனக் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ள ரிசி சுனக், சீன, ரஷ்ய நாடுகளுடனான உறவில் பலவீனமானவர் என அவரது நெருங்கிய போட்டியாளரான லிஸ் டிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் டெய்லி மெயில் நாளிதழுக்கு ரிசி சுனக் அளித்துள்ள பேட்டியில், தான் பிரதமர் ஆனால் பிரிட்டனில் சீன மொழி மற்றும் பண்பாட்டைப் பயிற்றுவிக்கும் 30 கன்பூசியஸ் … Read more

காமன்வெல்த் போட்டியில் மனரீதியிலான துன்புறுத்தல் நடப்பதாக இந்திய வீராங்கனை புகார்

லண்டன் காமன்வெல்த் போட்டியில் மனரீதியாக துன்புறுத்தல் என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்க்கோஹைன் குற்றம் சாட்டி உள்ளார். காமன்வெல்த் கிராமத்தில் இருந்து தன்னுடைய பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டு விட்டதாக லவ்லினா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டதால் போட்டி தொடங்கும் 8 நாட்களுக்கு முன்பே பயிற்சி நின்று விட்டது என்றும், மற்றொரு பயிற்சியாளர் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லவ்லினா டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. Source link

மியான்மர் | முன்னாள் எம்.பி, சமூக செயற்பாட்டாளர் உட்பட 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

நய்பிடாவ்: மியான்மரில் சமூக செயற்பாட்டாளர், முன்னாள் எம்.பி உள்ளிட்ட நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவத்தினர் ஆட்சியில் உள்ளனர். இந்த நிலையில், மியான்மரில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை, ராணுவத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனை நிறைவேற்றியவர்களில் சமூக செயற்பாட்டாளர் கோ ஜிம்மி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபியோ ஜெயா தாவ் ஆகிய இருவரும் அடங்குவர். இந்த மரணத் தண்டனையை ஆங் … Read more

நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டிருந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து – 30 பேர் உயிரிழப்பு..!

மத்திய கென்யாவில்  40 மீட்டர் உயரமுடைய பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மேரு கவுண்டியில் இருந்து நைரோபி நோக்கி நெடுஞ்சாலை வழியாக அதிவேகமாக சென்றுகொண்டிருந்த பேருந்து நித்தி ஆற்றின் மீது செல்லும் பாலம் வழியாக சென்றுகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு மீது மோதிச்சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. Source link

குரங்கு அம்மைக்கு பெரியம்மை தடுப்பூசி – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மைத் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர், தெலங்கானாவில் ஒருவர் என 5 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குரங்கு அம்மையை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதனிடையே, பெரியம்மைக்கான தடுப்பூசியை குரங்கு அம்மைக்கு பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து … Read more

“நான் பிரிட்டன் பிரதமரானால்…” – சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த ரிஷி சுனக்

லண்டன்: “பிரிட்டனின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, சர்வதேச பாதுகாப்புக்கே சீனா நம்பர் 1 அச்சுறுத்தல்” என்று ரிஷி சுனக் ஆவேசமாகப் பேசினார். பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். சொந்த கட்சிக்குள்ளயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான … Read more