உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54.41 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 44 லட்சத்து 21 ஆயிரத்து 319 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே … Read more

இலங்கைக்கு உதவக் கூடாது லோக் ஜனசக்தி வலியுறுத்தல்| Dinamalar

கோவை: ”இலங்கைக்கு மத்திய, மாநில அரசுகள் உத வக்கூடாது,” என, ராஷ்டிரிய லோக்ஜனசக்தி கட்சி தேசிய பொதுச்செயலாளர் மணிமாறன் கூறினார். லோக்ஜனசக்தி கட்சி தேசிய பொதுச்செயலாளர் மணிமாறன் கோவையில் நிருபர்களிடம் கூறுகையில்,”ஆன்லைன்’ ரம்மியால் இளைஞர்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்வது அதிரித்துள்ளது. பணத்துக்கு ஆசைப்பட்டு ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் தமிழக நடிகர்கள் நடிப்பதை நிறுத்த வேண்டும். இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட, 18 மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை தொடர்ந்து துன்புறுத்தும் … Read more

ஒப்பந்தங்களை மீறி ரஷியா தாக்குதல் – உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

கீவ், உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 150-வது நாளை எட்டியுள்ளது. இருதரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தின. கடந்த சில வாரங்களாக கிழக்கு உக்ரைன் மீது தீவிரமான தாக்குதல்களை நடத்தி வரும் ரஷிய படைகள் நேற்று உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கிரோவோஹ்ராட்ஸ்கா பிராந்தியத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை தொடுத்தன. அங்குள்ள விமானப்படை தளம் மற்றும் ரெயில்வே கட்டமைப்பை குறிவைத்து சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. இதனிடையே தெற்கு உக்ரைனில் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை குறிவைத்து … Read more

இஸ்ரேலில் நீச்சல் குளத்தில் ஏற்பட்ட திடீர் குழியில் சிக்கி வாலிபர் பலி

ஜெருசலேம், இஸ்ரேலின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கர்மி யோசப் நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. விருந்தில் கலந்து கொண்ட சிலர் அங்கிருந்த நீச்சல் குளத்தில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது நீச்சல் குளத்தின் அடியில் திடீரென துளை ஏற்பட்டு, பெரிய குழி உருவானது. நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த 32 வயது வாலிபர் உள்பட 2 பேர் அந்த குழிக்குள் விழுந்தனர். அவர்களில் ஒருவர் எப்படியோ போராடி மேலே வந்துவிட்டார். ஆனால் குழிக்குள் … Read more

அரசு ஊழியர்களை விமர்சித்தால் தண்டனை: தலிபான் அதிரடி உத்தரவு!

ஆப்கனை கைபற்றியுள்ள தலிபான்கள், அங்கு புதிய அரசை அமைத்துள்ளனர். ஆனால், அவர்களது செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் அந்நாடுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டுள்ளன. மேலும், ஆட்சி அமைத்த பின்னர் தலிபான்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பெண்களுக்கான உரிமைகள் மறுப்பு, ஆண்கள் முகச்சவரம் செய்யக் கூடாது என்பன போன்ற பல்வேறு விஷயங்களுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஆட்சி அமைப்பதற்கு முன்னர் தலிபான்கள் பேசியதற்கும், … Read more

எல்லை பகுதி கிராமங்களில் சீனர்கள் குடியேற்றம்; அகண்ட சீனாவை அமைக்க அதிபர் ஜிங்பிங் சூழ்ச்சி

புதுடில்லி : இந்தியா – பூடான் எல்லையோரம் புதிய கிராமங்களை அமைத்து மக்களை குடியேற்றுவதில், சீனா அடாவடியாக செயல்பட்டு வருகிறது. அத்துடன் தைவானை மீட்டு, திபெத்தை முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அகண்ட சீனாவை உருவாக்க அதிபர் ஷீ ஜிங்பிங் சூழ்ச்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நம் அண்டை நாடான பூடானின் டோக்லாம் பள்ளத்தாக்கு அருகே மும்முனை சந்திப்பு தொடர்பான எல்லை பிரச்னையில் இன்னும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில் அங்குள்ள அமு சூ … Read more

Saturn vs Planets: வியாழனுக்கு ஏன் வளையங்கள் இல்லை? புதிரை விடுவித்த ஆய்வு

Planet and their Rings: நமது சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களில் இருந்து சனியை வேறுபடுத்துவது அந்த கிரகத்தில் உள்ள கம்பீரமான வளையங்கள் ஆகும். சனி கிரகத்தின் வளையங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, சனியின் வளையங்களை அமெச்சூர் தொலைநோக்கிகளிலிருந்தும் பார்க்கலாம். அரசர்களுக்கு கிரீடம் போல, சனி கிரகத்திற்கு அதன் வளையங்கள் கம்பீரமான தோற்றத்தை தருகிறது. ஆனால் பிற கிரகங்கள் அனைத்திற்கும் சனியைப் போன்ற வளையஙக்ள் இல்லை? இப்படி பல விஞ்ஞான ரீதியிலான கேள்விகள் எழுகின்றன. சனி … Read more

300 உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு| Dinamalar

கீவ்: கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா ஐந்து மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதிகளை கைப்பற்ற, ரஷ்யா ஏவுகணைகளை சரமாரியாக வீசுகிறது. டொனட்ஸ்க் மாகாணம் கிராமடோர்ஸ்கியில் உள்ள பள்ளி மீது ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில், அங்கு தங்கியிருந்த உக்ரைன் ராணுவ வீரர்கள் 300 பேர் உயிரிழந்தனர்.ஆனால், பள்ளி மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்திய உக்ரைன், ராணுவ வீரர்கள் உயிரிழப்பு குறித்து எதுவும் கூறவில்லை. ரஷ்யாவின் தீவிரமான … Read more

ஈட்டி எறிதல் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்; இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நீரஜ்| Dinamalar

யூஜின்: உலக தடகள ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ்சோப்ரா வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் , உலக தடகள சாம்பியன்ஷிப் 18வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 23 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் இன்று இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, ரோகித் யாதவ் பங்கேற்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்தவர் நீரஜ் சோப்ரா.19 ஆண்டுக்குப்பின் சாதனை இன்றைய இறுதிச்சுற்றில் 88.13 … Read more

தானிய ஒப்பந்தத்தை கேள்விக்குறியாக்கும் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்

ரஷ்யா-உக்ரைன் போர்: உக்ரைனுடான போருக்கு மத்தியில், தானிய ஒப்பந்தம் மேற்கொண்ட சில மணிநேரங்களிலேயே ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது தானிய ஒப்பந்தம் தொடர்பான ரஷ்யாவின் அலட்சியப்போக்கை காட்டுவதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள ஒடேசா துறைமுகத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இரு நாடுகளும் தானிய ஏற்றுமதி பற்றிய புரிதலை எட்ட முடிந்த நிலையில், அதை தொடர்வதே உலகத்திற்கு நல்லது என்று கவலை கலந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒப்பந்தம் தொடர்பான நிம்மதியை உலகம் அனுபவிப்பதைக்கூட ரஷ்யா … Read more