தென் சீன கடலில் தொடர்ந்து அத்துமீறி வரும் சீனா.!

தென் சீன கடலில் சீனாவின் அத்துமீறல் அதிகரித்து வருவதால், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் தங்களது ராணுவ பட்ஜெட்டை அதிகரித்துள்ளன.  தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், தைவானுக்கு அருகிலுள்ள தீவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த ஜப்பானும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தைவானை விட சீனா பலம் மிகுந்தது என்றாலும், அமெரிக்கா தலையிடும் பட்சத்தில் அது மிகப்பெரிய பிரச்சனையாக வெடிக்கக்கூடும் என்று தாய்வான் மக்கள் கருதுகின்றனர்.  Source link

அடுத்த கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் மற்றும் இங்கிலாந்து பிரதமராக இவர் பதவி ஏற்கலாம்

லண்டன்: பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று (வியாழக்கிழமை) அறிவித்தார். அதே நேரத்தில் கன்சர்வேடிவ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் நீடிப்பார் எனத் தெரிகிறது. புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும். போரிஸ் ஜான்சன் பதவி விலகி உள்ளதால், கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவர் மற்றும் பிரதமர் யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு … Read more

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறாரா ரிஷி சுனாக்?

இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலகியுள்ள நிலையில், அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனாக் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனான ரிஷி சுனாக், போரிஸ் ஜான்சனை எதிர்த்து முதன்முதலில் பதவி விலகிய இரு அமைச்சர்களில் ஒருவராவார். போரிஸ் ஜான்சன் அக்டோபர் வரை இடைக்கால பிரதமராக நீடிக்கும் நிலையில், பழமைவாத கட்சி எம்.பி.க்கள் 8 பேர் ஆதரவுடன் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதில் போட்டி ஏற்பட்டால் ரகசிய … Read more

பயங்கரமாக தீப்பிடித்து எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம்.. ஜன்னல் வழியாக குதித்தவர்களை தாங்கிப்பிடித்து காப்பாற்றிய போலீசார்..!

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள மேடிசன் நகரில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் சிக்கிக்கொண்டவர்களை போலீசார் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பத்திரமாக மீட்டனர். படிகள் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அதன் வழியாக வெளியேற முடியாமல் மேல் தளத்தில் தவித்த குழந்தைகளும், அவர்களது குடும்பத்தினரும் ஜன்னல் வழியாக கீழே குதிக்க குதிக்க அவர்களை கீழே இருந்தவாறு பிடித்து போலீசார் மீட்டனர். இந்த காட்சிகள் அதிகாரி ஒருவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த பாடி கேமிராவில் பதிவாகி உள்ளன. தீவிபத்துக்கான … Read more

Hajj 2022: ஆண்களின் துணையின்றி ஹஜ்ஜுக்கு பெண்களை அனுமதிக்கும் செளதி அரேபியா: சமூக மாற்றம்

Hajj pilgrimage 2022: தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகள் கடுமையாக குறைக்கப்பட்ட எண்ணிக்கைக்குப் பிறகு, வெளிநாட்டிலிருந்து 850,000 பேர் உட்பட ஒரு மில்லியன் மக்களுக்கு இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.   ஹஜ் யாத்திரை 2022 கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதற்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் வழக்கம்போல பெருந்திரளான மக்கள் ஹஸ் யாத்திரைக்கு வந்துள்ளனர். ஹஜ் யாத்திரையின் முதல் நாளான புதன்கிழமை (ஜூலை 6) அன்று, செளதி அரேபியாவில் இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் புனித தளத்திற்கு … Read more

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா..!

அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்நாட்டில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது விதிகளை மீறி போரிஸ், தனது அமைச்சர்களுடன் பார்டியில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சொந்த கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவரப்பட்டது. அதில், போரிஸ் ஜான்சன் வெற்றிப்பெற்றார். சில நாட்களுக்கு முன் கன்சர்வேடிவ் கட்சியின் துணை கொறடா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த … Read more

டெஸ்லா அதிகாரியுடன் ரகசிய உறவு… 9 வது முறையாக தந்தை ஆனார் எலன் மஸ்க்!

டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் விவகாரத்தில் உலகமே திரும்பி பார்த்த எலன் மஸ்க்கின் பக்கம் அண்மை காலமாக ஊடகங்கள் தங்களது கழுகு பார்வையை செலுத்தி வருகிறது. சமீபத்தில் அவரது முதலாவது வாரிசான சேவியர் மஸ்க் தனது பெயரை மாற்றிக்கொண்டு, பாலினத்தையும் மாற்றிக்கொண்டார். பின்னர் அவரது தந்தையுடனான உறவைs முறித்துக்கொள்வதாக சேவியர் தெரிவித்தார். இதனால் சில காலம் அவரது பேச்சு இணையத்தில் சுற்றி வந்தது. பின்னர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் குழுவின் பெண் பணியாளரிடம் எலன் மஸ்க் தன் … Read more

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகல்: பின்புலம் என்ன?

லண்டன்: சொந்தக் கட்சியிலே எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய பிரதமரை கட்சித் தேர்ந்தெடுக்கும் என்றும், அதுவரை காபந்து பிரதமராக நீடிப்பதாகவும் அறிவித்தார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டை வழிநடத்துவார் என்று தங்களுக்கு நம்பிக்கையில்லை எனக் கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதார அமைச்சர் ஷாஜித் ஜாவேத் ஆகியோர் நேற்று பதவி விலகினர். இதனையடுத்து நாட்டின் புதிய நிதியமைச்சராக நதீம் ஜஹாவி நியமிக்கப்பட்டார். ஆனால், … Read more

வெள்ளத்தில் சிக்கி 45 நிமிடங்கள் காருக்குள் பரிதவித்த மூதாட்டியை பத்திரமாக மீட்ட போலீசார்.!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய காருக்குள் இருந்த 72 வயது மூதாட்டியை போலீசார் பத்திரமாக மீட்டனர். பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் காரை விட்டு வெளியேற முடியாமல் தவித்த அந்த மூதாட்டி அவசர சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். 45 நிமிடங்கள் காரில் பரிதவித்த அந்த மூதாட்டியை போலீசார் பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.       Source link

கடும் வறட்சியால் பஞ்சத்தில் மடியும் மக்கள்: துருக்கியிடம் உதவி கேட்கும் சோமாலியா

அங்காரா: சோமாலியாவில் கடுமையான வறட்சி நிலவுவதைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் ஹசன் ஷேக் முகமது, துருக்கியிடம் உதவ வேண்டி ஆதரவு கேட்டிருக்கிறார். சோமாலிய அதிபர் ஹசன் ஷேஷ் முகமது முதல் முறையாக துருக்கிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது: ”சோமாலியாவில் நிலவும் கடும் வறட்சி குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது. துருக்கிய சகோதரர்கள் எங்களுக்கு உறுதுணைபுரிய வேண்டும். அவர்கள் முன்பு செய்த உதவிகளை போல, அவர்களால் முயன்ற உதவியை செய்ய வேண்டும். உங்களது … Read more