மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து..!

அமெரிக்காவில் மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரத்தில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விடுமுறை கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். ஏறத்தாழ நான்கு கோடியே 79 லட்சம் பேர் விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில், கடந்த ஒரு நாளில் 280க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 2 ஆயிரத்து 751 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

எரிபொருள் தட்டுப்பாடு; போக்குவரத்து முடக்கம் | இலங்கையில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் இன்று (ஜூலை 4) பள்ளிகள் தொடங்கவிருந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மேலும் ஒரு வாரத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. எரிபொருள், உணவுப்பொருள் தட்டுப்பாடு, மின்சார, மருத்துவ சேவையில் சிரமம் என பலவகைகளிலும் அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கடந்த சில நாட்களாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இன்று (ஜூலை 4) பள்ளிகள் … Read more

பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து.!

2017ஆம் ஆண்டு பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியிடப்பட்டு வேகமாக பரவி வருகிறது. ஆஸ்திரேலிய கடல் எல்லையில் நடந்த பயிற்சியின் போது எம்.வி. 22 Osprey வகை நவீன ஹெலிகாப்டர், யு.எஸ்.எஸ் கிரீன் பே விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்க முயன்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கடலில் விழுந்து மூழ்கியது. 3 வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 3 வீரர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இந்நிலையில், … Read more

இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தை வாங்க மலேசியா திட்டம்.!

இந்தியாவிடம் இருந்து தேஜஸ் போர் விமானத்தை வாங்க மலேசியா திட்டமிட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தேஜஸ் என்ற இலகுரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. 83 தேஜஸ் போர் விமானங்களை தயாரித்து கொடுக்க அந்த நிறுவனத்துடன் இந்திய ராணுவ அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்தநிலையில், மலேசியாவும் தேஜஸ் போர் விமானங்களை வாங்க முன்வந்துள்ளது. விரைவில் மலேசிய குழு இந்தியாவுக்கு வந்து இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

ஈராக்கை செந்நிறப் போர்வையால் போர்த்தியது போல் வீசிய மணற்புயல்.!

ஈராக்கை செந்நிறப் போர்வையால் போர்த்தியது போல் வீசிய மணற்புயலால் தலைநகர் பாக்தாத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. எதிர் வரும் வாகனங்கள் புலப்படாத வகையில் மணற்புயல் வீசியது. 5 மாதங்களுக்கு மேலாக ஈராக்கில் மணற்புயல் வீசி வருவதால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுவாசக் கோளாறு, சறுமப் பிரச்சினைகளுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொளுத்தும் வெயிலுடன், மணற்புயலும் சேர்ந்து வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். Source link

ஒரு நாளுக்கு தேவையான எரிபொருள் மட்டுமே இலங்கையில் கையிருப்பு.!

இலங்கையில் ஒரு நாளுக்கு தேவையான எரிபொருள் மட்டும் கையிருப்பு உள்ளதால், அண்டை நாடுகளின் கடன் உதவியை இலங்கை அரசு எதிர்பார்த்துள்ளது. எரிபொருள் வாங்க எண்ணெய் நிறுவனங்களுக்கு 587 மில்லியன் டாலர் வழங்க வேண்டியுள்ள நிலையில், இலங்கை மத்திய வங்கியால் 125 மில்லியன் டாலர் பணம் மட்டுமே திரட்ட முடிந்ததாக எரிசக்தித் துறை அமைச்சர் காஞ்சனா விஜயசேகரா தெரிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறையால் அடுத்த 5 நாட்களுக்கு அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டமும் வாரத்தில் 3 நாட்கள் … Read more

இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 பேர் பலி.!

இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு இத்தாலியின் டோலமைட் மலைத்தொடரில் 3,300 மீ. உயரத்திலுள்ள மர்மலாடா மலையில் வீசிய கடுமையான பனிப்புயலால், பனிபாறைகள் சரிந்து விழத் தொடங்கின. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் சிலர் பனிச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்பமான வானிலை நிலவுவதே பனிச்சரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. Source link

பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா – முககவசம் அணிய மக்களுக்கு அறிவுறுத்தல்

பாரீஸ், ஐரோப்பா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த நாட்டு அரசு தரவுகளின்படி ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1,000 நோயாளிகள் கொரோனா தொற்றுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர். சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் சுற்றுலா மீண்டும் வளர்ந்து வரும் நிலையில் அங்கு தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியிருப்பது அந்த நாட்டு அரசை கவலையடைய செய்துள்ளது. எனினும் சுற்றுலா பயணிகளுக்கான … Read more

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 51 இலங்கை அகதிகள் கைது

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பட்டினியை நோக்கி அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே அவர்கள் இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்து வருகிறது. அந்தவகையில் இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் கடற்படையினர் நேற்று காலையில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மிகப்பெரிய மீன்பிடி படகு … Read more

இஸ்ரேலில் எரிவாயு கிணறு மீது தாக்குதல் நடத்த முயற்சி

ஜெருசலேம், இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான இயற்கை எரிவாயு கிணறு ஒன்று மத்திய தரைக்கடலில் அமைந்துள்ளது. ஆனால் இந்த எண்ணெய் கிணறு தங்களுக்கு சொந்தமானது என அண்டை நாடான லெபனான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நீடிக்கிறது. இந்த நிலையில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு நேற்று சர்ச்சைக்குரிய அந்த எரிவாயு கிணறு மீது தாக்குதல் நடத்தும் முயற்சியாக 3 ‘டிரோன்’ களை இஸ்ரேல் வான்பரப்புக்கு அனுப்பியது. எனினும் இதை உடனடியாக … Read more