லடாக் எல்லைப் பிரச்சனை.. இந்தியா- சீனா 17ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை..!

இந்தியா-சீனா இடையிலான ராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தை வரும் 17ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லடாக் எல்லையில் கடந்த 2020 மே மாதம் தொடங்கிய மோதலையடுத்து இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இருதரப்பு அதிகாரிகளும் இதுவரை 15 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இதன் பலனாக சில பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளைத் திரும்பப் பெற்றது. எனினும் ஹாட் ஸ்பிரிங்ஸ், டெம்சோக் மற்றும் தெப்சங் … Read more

இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி| Dinamalar

லார்ட்ஸ்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லார்ட்சில் நடக்கிறது. இந்திய வீரர்கள் மீண்டும் சாதிக்கும் பட்சத்தில் ஒருநாள் தொடரை வென்று சாதிக்கலாம். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஓவலில் நடந்த முதல் போட்டியில் 10 விக்கெட்டில் வென்ற இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று பாரம்பரியமிக்க லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது. … Read more

உலகளாவிய நிலவர பட்டியல்: பாலின இடைவெளியில் மிக மோசமான நாடாக ஆப்கானிஸ்தான்

இஸ்லாமாபாத், 146 நாடுகளில் பாலின இடைவெளி அதிகமில்லாத முதல் 5 நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, சுவீடன் ஆகியவை இடம் பிடித்துள்ளன.மிக மோசமான பாலின இடைவெளி உள்ள 5 நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் தலீபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தான் உள்ளது. பாகிஸ்தான் இரண்டாவது இடம் வகிக்கிறது. அடுத்த இடங்களை காங்கோ, ஈரான், சாத் பிடித்துள்ளன.தற்போது பாலின இடைவெளியின் அதிகபட்ச அளவு 68.1 சதவீதமாக உள்ளது.இந்த இடைவெளி நீங்கி ஆண், பெண் பாலின சம நிலை … Read more

Existance of Aliens: வேற்றுகிரகவாசிகள் இருப்பை உறுதி செய்கிறதா ஜேம்ஸ் வெப்

Existance of Aliens: ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மிகவும் முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்புகளை தொடங்கிவிட்டது. ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்டபுகைப் படங்களை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது நாசா.  மனிதகுலத்தால் கட்டமைக்கப்பட்ட மிகவும் மேம்பட்ட தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப், மனித கண்கள் அல்லது லென்ஸ்கள், இதுவரை சாத்தியப்படாத பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்க்கும் பணிகளை துவங்கிவிட்டது.  இதை உறுதிப்படுத்தும் விதத்தில், பூமியில் இருந்து தொலைதூரத்தில் இருக்கும் ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை ஜேம்ஸ் … Read more

மாலத்தீவில் வலுக்கும் எதிர்ப்பு: சிங்கப்பூருக்கு தப்பிச் செல்கிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

ராஜினாமா கடிதம் கூட கொடுக்காமல் நாட்டிலிருந்து தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவில் எதிர்ப்பு வலுப்பதால் அங்கிருந்து இன்று சிங்கப்பூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியால் நாடுமுழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அறிவித்தபடி கோத்தபய தனது ராஜினாமா கடிதத்தை நேற்று அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ராஜினாமா கடிதம் எதையும் வழங்காமல் ரகசியமாக நேற்று மாலத்தீவுக்கு தப்பியோடினார். அவர், மனைவி மற்றும் 2 பாதுகாவலர்களுடன் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலத்தீவு … Read more

கோத்தபய மாலத்தீவு தப்பி ஓட்டம்: இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம்

கொழும்பு, இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் 2 கோடியே 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. மக்கள் போராட்டம் அன்னியச்செலாவணி இல்லாமை, விஷம்போல நாளும் ஏறிவரும் விலைவாசி, எரிபொருட்கள் தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு என பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்க, இனியும் பொறுப்பதற்கு இல்லை என்ற நிலையில் இலங்கை மக்கள் வெகுண்டெழுந்தனர். அவர்கள் வீதிகளில் இறங்கி போராடத்தொடங்கினர். நாட்டை இப்படியொரு நெருக்கடியில் தள்ளிவிட்டதற்கு ராஜபக்சே குடும்பத்தார்தான் காரணம் என ஒருமித்த குரலில் … Read more

அமெரிக்காவில் பணவீக்கம் 9.1%அதிகரிப்பு: 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு

நியூயார்க்: அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும் சீனாவில் கரோனா தொற்று அதிகரிப்பு போன்ற காரணங்களால் உலக அளவில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து வட்டி விகிதத்தை பெடரல் வங்கி உயர்த்தி வருகிறது. இது இன்னமும் … Read more

இங்கிலாந்து பிரதமர்: முதல் சுற்று தேர்தலில் முதலிடம் பிடித்து ரிஷி சுனக் வெற்றி!

இங்கிலாந்து பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்றார். பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அவர், அடுத்தடுத்து எம்.பி.க்களின் ராஜினாமா என சொந்த கட்சிக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்தின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் … Read more

புதிய அரசு அமைப்பது குறித்து ரணில் விக்ரமசிங்கே அமைச்சர்களுடன் ஆலோசனை… பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்றி சூறையாடிய போராட்டக்காரர்கள்!

புதிய அரசு அமைப்பது பற்றி தமது அமைச்சர்களுடன் இலங்கையின் தற்காலிக அதிபராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே ஆலோசனை நடத்தியுள்ளார். நாட்டை விட்டு தப்பியோடிய அதிபர் கோத்தபயா ராஜபக்சே இடைக்கால அதிபராக ரணிலை நியமிக்கும்படி கடிதம் அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்று உள்ளதால், பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சியினரின் ஒப்புதல் பெற்ற நபரை நியமிக்கும்படி அவர் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே ரணில் விக்ரமசிங்கே அலுவலகத்தில் புகுந்த போராட்டக்காரர்கள் அங்குள்ள உடைமைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். ராணுவத்தினர் போராட்டக்காரர்களை … Read more

ஹைதி கலவரத்தில்50 பேர் உயிரிழப்பு| Dinamalar

போர்ட் – ஓ – பிரின்ஸ்:ஹைதி நாட்டில், இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்ததில், 50 பேர் கொல்லப்பட்டனர்.வட அமெரிக்காவின் கரீபிய தீவு நாடான ஹைதியின் தலைநகர் போர்ட் – ஓ – பிரின்ஸில், அந்நாட்டின் ஜனாதிபதி ஜோவெனல் மோஸின் மறைவுக்குப் பின், பல்வேறு பகுதிகளில் கலவரங்களும், வன்முறைகளும் நடந்து வருகின்றன.ஜனாதிபதி ஜோவெனல் படுகொலை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு நினைவு தினம், கடந்த 8ம் தேதி அனுசரிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளிலிருந்து, நாட்டின் பல்வேறு … Read more