சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவான் சென்றார் நான்சி பெலோசி..!

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார். தைவானில் தரையிறங்கும் போது விமானப்படை ஜெட் விமானங்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்தன. பல்வேறு ஆசிய நாடுகளுக்கு சுற்றுபயணத்தை தொடங்கியிருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, சீனாவின் கடும் எதிப்பையும் மீறி நேற்று இரவு தைவான் சென்றடைந்தார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா உயர்மட்ட தலைவர் ஒருவர் தைவான் செல்வது இதுவே முதல்முறையாகும். தைவானை சீனா தங்களது நாட்டின் ஒரு பகுதியாக … Read more

தாய்லாந்தின் புதிய கஞ்சா கொள்கையால் நாட்டில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

Cannabis in Thailand: தாய்லாந்தில் மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்கியதன் விளைவாக அந்த நாட்டின் சுற்றுலாவில் மிகப் பெரிய அளவில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைக் கொண்டாடும் பல நிகழ்வுகள் தாய்லாந்தில் களைகட்டியுள்ளன. உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் களிப்புடன் தாய்லாந்திற்கு வருகை தருகின்றனர். 2018 ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியாவில் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு தாய்லாந்து ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக மரிஜூவானாவை மருத்துவ பயன்பாட்டிற்காக சட்டபூர்வம் ஆக்கிய தாய்லாந்து, இந்த ஆண்டு, … Read more

பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தி அய்மான் அல் ஜவாஹிரி கொலை..!

அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியை கொலை செய்ய பாகிஸ்தான் வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்தியதாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் உள்பட பல்வேறு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட 71 வயதான அய்மான் அல் ஜவாஹிரி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மையப்பகுதியில் பதுங்கியிருந்தபோது, டிரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இந்த ட்ரோன் பாகிஸ்தான் வான்வெளி வழியாக சென்றதாகவும், தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அனுமதி … Read more

கோத்தபயவுக்கு சிறப்பு சலுகையில்லை: சிங்கப்பூர் அரசு திட்டவட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர் : ‘இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு சிறப்பு சலுகைகள் கூடுதல் பாதுகாப்பு அரசு முறையிலான விருந்தோம்பல் ஆகிய எதுவும் வழங்கப்படவில்லை’ என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மக்களின் போராட்டத்திற்கு பயந்து கடந்த மாதம் மாலத்தீவிற்கு தப்பியோடினார்.பின் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று தன் ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்பினார். இந்நிலையில் சிங்கப்பூர் பார்லி.யில் வெளியுறவு துறை அமைச்சர் … Read more

Cartwheel Galaxy: சுழலும் வண்ண வளையத்தை வெளிப்படுத்தும் கார்ட்வீல் கேலக்ஸியின் புதிய படம்

James Webb Space Telescope: ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் கிடைத்த புகைப்படங்கள் கார்ட்வீல் கேலக்ஸியின் வண்ண வளையத்தை இதுவரை இல்லாத அளவு தெளிவாக வெளிப்படுத்துகிறது என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) செவ்வாயன்று தெரிவித்தன. இந்த படத்தில், ஹப்பிள் தொலைநோக்கியுடன் ஒப்பிடுகையில், வெப் தொலைநோக்கியானது, அரிய வளைய விண்மீனின் படங்களை இதற்கு முன்பு எடுக்கப்பட்டதை விட மிக அதிகமான தெளிவுடன் எடுத்துள்ளது. இதில், பெரிய அளவிலான தூசிகளை … Read more

‘‘அமெரிக்கா தகுந்த விலையை தர வேண்டியிருக்கும்’’ – நான்சி பெலோசி தைவான் பயணத்துக்கு சீனா எச்சரிக்கை

தைபே: சீனாவின் எச்சரிக்கையை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று தைவான் சென்றார். சீன உள்நாட்டுப் போரின்போது பிரிந்து சென்ற தைவானை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரும், ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதிநிதியுமான நான்சி பெலோசி தைவானுக்கு செல்ல திட்டமிட்டார். இதற்கு சீன அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. சில நாட்களுக்கு முன்பு சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் தொலைபேசியில் பகிரங்கமாக … Read more

விநாயகருடன் தங்கக்கட்டி: பிரிட்டன் அரசு வெளியீடு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன் : பிரிட்டனைச் சேர்ந்த ‘ராயல் மின்ட்’ நிறுவனம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை தயாரித்துள்ளது. ஐரோப்பாவில் பிரிட்டன் அரண்மனையைச் சேர்ந்த ராயல் மின்ட் நிறுவனம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு மகாலட்சுமி உருவத்துடன் தங்கக் கட்டியை வெளியிட்டது.அதுபோல ஆக 31ம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை தயாரித்துள்ளது.24 காரட் சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்ட இந்த தங்க கட்டியின் எடை … Read more

மாலத் தீவுக்கு ரூ.786 கோடி கடன் உதவி – பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

புதுடெல்லி: மாலத் தீவுக்கு கூடுதலாக ரூ.786 கோடி கடன் உதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தியாவின் லட்சத் தீவுகளுக்கு தெற்கே மாலத் தீவு நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டின் அதிபர் இப்ராகிம் முகமது சோலி 4 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். டெல்லியில் நேற்று அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது மாலத் தீவின் தலைநகர் மாலியுடன் 3 தீவுகளை இணைக்கும் புதிய பாலத்தின் … Read more

நான்சி பெலோசியின் தைவான் வருகை | உலகமே உற்றுநோக்கிய விமானம் – திக்.. திக்.. 'தைபே' நொடிகள்

தைபே: சீனாவின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி தைவான் மண்ணை தொட்டுள்ளார். நான்சி கடந்த ஏப்ரல் மாதமே தைவானுக்கு பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தைவான் வந்தடைந்த அவருக்கு அந்நாட்டு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். முன்னதாக, நான்சி தைவான் செல்வார் எனச் சொல்லப்பட்டபோதே சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்ப்புகளை மீறி, தைவான் … Read more

'ஒசாமா பின்லேடனுக்கு போடப்பட்ட அதே பிளான்' – அல்-காய்தா தலைவர் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்ட பின்னணி

காபூல் / வாஷிங்டன்: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்-காய்தாவின் தலைமைப்பொறுப்பை ஏற்ற அய்மான் அல்-ஜவாஹிரி (71), கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து அல்-காய்தாவின் புதிய தலைவராக அய்மான் அல்-ஜவாஹிரி பொறுப்பேற்றார். கடந்த 2001 செப். 11-ல் அமெரிக்காவில் அல்-காய்தா நடத்திய தாக்குதலில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர். இந்த … Read more