"மேலாடையின்றி இருந்தால் அருவெறுப்பாக இருக்கும்" மேற்கு நாடுகள் தலைவர்கள் குறித்து புதின் கிண்டல்

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷிய அதிபர் புதின் போர் தொடுத்து இருப்பதால், மேற்கு நாடுகளின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார். இந்நிலையில், ஜெர்மனியில் சில தினங்களுக்கு முன் நடந்த ஜி-7 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் டிருடேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மேல் சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் குதிரையில் செல்லும் வீடியோ காட்சியை பார்த்து, இந்த தலைவர்கள் கிண்டலடித்தனர். … Read more

சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம்.. ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழப்பு..!

வட ஆப்பரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக திரண்ட மக்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கார்தோமில் அதிபர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசீயும் தண்ணீர் பீய்ச்சியடித்தும் விரட்டியடிக்கப்பட்டனர். இதே போன்று ஓம்டுர்மன், பஹ்ரி ஆகிய நகரங்களில் சாலையில் டயர்களை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.   Source link

குடிபோதையில் கலாட்டா: பிரிட்டன் எம்.பி., ராஜினாமா| Dinamalar

லண்டன்-பிரிட்டனில் குடி போதையில்இருவரை அடித்து, உதைத்த சர்ச்சையில், பார்லிமென்ட் துணை கொறடா பதவியில் இருந்து ஆளுங்கட்சி எம்.பி., விலகியுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஆளும் பழமைவாத கட்சி எம்.பி.,யான கிறிஸ் பின்ச்சர், மதுபான விடுதியில் இருவரை அடித்து, உதைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதையடுத்து, அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இந்நிலையில் கிறிஸ் பின்ச்சர், பார்லி., துணை கொறடா பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், … Read more

மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் வானுயரம் எழும்பிய புழுதி.. 150 வீடுகள் சேதம்..!

பெரு நாட்டில் மலையின் ஒரு பகுதி சரிந்து குடியிருப்புகளின் மீது விழுந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. வியாழக்கிழமை மாலை குரூஸ் டி ஷல்லாபா மலையின் ஒரு பகுதி திடீரென சரிந்து மலையின் கீழ் இருந்த வீடுகளின் மீது விழுந்ததில் வானுயர புழுதி எழும்பியது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் குறித்து இந்த வார தொடக்கத்திலேயே அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் இந்த நிலச்சரிவால் 150 வீடுகள் சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  Source link

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் உக்ரைனில் 18 பேர் பலி| Dinamalar

கீவ்:ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், உக்ரைனில் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், இரண்டு சிறுவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.ரஷ்யா – உக்ரைன் போர் நான்கு மாதங்களை கடந்துள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தைக் கைப்பற்ற, ரஷ்யா தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் ஒடேசா அருகே செர்ஹிவிக்கா பகுதியில் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா நடத்தியது. இதில், அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்து, இரண்டு சிறுவர்கள் உட்பட 18 பேர் பலியாகினர்; 30 … Read more

ஜப்பானில் 40 டிகிரி செல்சியஸை தாண்டிய வெயில்.. குடும்பத்துடன் நீச்சல் குளத்தில் குவிந்த மக்கள்..!

ஜப்பானில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் குடும்பத்துடன் நீச்சல் குளத்தில் குவிந்தனர். தலைநகர் டோக்யோவில் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் சிறுவர்கள் ஆனந்த குளியலிட்டு வெப்பத்தை தணித்து கொண்டனர். ஜப்பானில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் வெயிலின் அளவு 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களை அரசுக் கேட்டுக் கொண்டுள்ளது. Source link

இலங்கை கிரிக்கெட் வீரர் மேத்யூஸ்க்கு கொரோனா தொற்று..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இலங்கை நட்சத்திர வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காலேவில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் இன்னிங்சில் விளையாடிய மேத்யூஸ் 39 ரன்கள் எடுத்தார். அவருக்கு கொரோனா உறுதியான நிலையில், 2வது இன்னிங்சில் விளையாடவில்லை. இதனிடையே இப்போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Source link

ஏர்பஸ்சிடம் 292 விமானங்கள் வாங்கும் சீன நிறுவனங்கள்..

சீனாவில் அரசுக்குச் சொந்தமான மூன்று பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 3700 கோடி டாலர் மதிப்பில் 292 விமானங்களை வாங்க உள்ளன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பின் மிகப்பெரிய கொள்முதல் ஆணை கிடைத்திருப்பது ஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனத்துக்கு பெருமளவில் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. ஏர் சீனா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் ஏ320 நியோ வகையைச் சேர்ந்த தலா 96 விமானங்களை வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளன. சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் … Read more

பட்டாசு லோடு ஏற்றிச் சென்ற லாரியில் திடீர் தீ விபத்து.. பட்டாசுகள் வெடித்ததில் வானில் நிகழ்ந்த வான வேடிக்கை..!

அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாகாணத்தில் பட்டாசுகளை ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பற்றியதில், அதிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 4 ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள பட்டாசுகளை ஏற்றிக் கொண்டு சோமர்செட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி சென்ற போது டயர் தீப்பற்றி எரிவதை கவனித்த ஓட்டுநர், லாரியை நிறுத்திவிட்டு உடனடியாக கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பற்றி அதிலிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதை, வாகன ஓட்டிகள் சிலர் … Read more

மவுசு காட்டும் கழிவுநீர் "பீர்"… சிக்கப்பூரில் இப்போ இதுதான் டிரெண்டு!

மதுபானங்கள் பல வகை… ஒவ்வொன்றும் ஒருவகை… எது எப்படி இருந்தாலும் மதுபிரியர்களுக்கு கிட்டத்தட்ட அனைத்து வகை மதுபானங்களையும் சுவைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் எப்போது இருக்கும் அல்லவா. ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ், ஸ்காட்லேண்டு என பல நாடுகளின் முக்கிய அடையாளங்களாகவே சில மது வகைகள் விளங்கி வருகின்றன. உலகின் முன்னணி பிராண்டுகளும் இந்த நாடுகளின் அடையாளங்களைபோல் செயல்படுகின்றன. நல்ல சிவப்பு ஒயின் என்றால் பிரான்ஸ் நாடும், சுறுக்கென்ற வோட்கா என்றால் ரஷ்யாவும் பெயர்போன நாடுகளாக பார்க்கப்படுகின்றன. அதே … Read more