ஆப்கன் நிலநடுக்க உயிரிழப்பு 1,411 ஆக அதிகரிப்பு; 3,124 பேர் காயம்
காபூல்: ஆப்கனிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாகவும், 3,124 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் குணார் மாகாணம் ஜலாலாபாத் அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கனின் கிராமங்கள், பல மாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. ஜலாலாபாத்துக்கு கிழக்கே 27 கி.மீ. தூரத்தில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு … Read more