அணு ஆயுத பொருட்களை ஏற்றிச்சென்ற அமெரிக்க ராணுவ விமானம் விபத்து – 4 வீரர்கள் பலி.!

அணு ஆயுத பொருட்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். Bell Boeing V-22 Osprey வகை போர் விமானம் அணு ஆயுத பொருட்களை ஏற்றி வந்த போது கலிபோர்னியா அருகே விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. விமானத்தில் பயணித்த 4 வீரர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், 5-வது வீரரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். Source link

ட்விட்டரை எலான் மஸ்கிற்கு விற்பது குறித்து வாக்கெடுப்பு.. ஆகஸ்ட் தொடக்கத்தில் பங்குதாரர்களிடம் வாக்கெடுப்பு நடத்த திட்டம்..!

ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் தொகைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கிடம் விற்பது குறித்து ஆகஸ்ட் தொடக்கத்தில் பங்குதாரர்களிடம் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்த தரவுகளை தராததை அடுத்து ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட உள்ளதாக எலான் மஸ்க் எச்சரித்தார். இதையடுத்து எலான் மஸ்கிடம் தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து கொள்வதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது Source link

Video: பாலம் ஒன்று திறப்பு விழாவிலேயே சரிந்த அதிர்ச்சி சம்பவம்

மெக்ஸிகோவில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், மரப்பாலம் ஒன்றின் திறப்பு விழாவின் போது, புத்தம் புதிய பாலம் சரிந்து, அதிலிருந்த பலர் கீழே விழுந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மெக்சிகோவின் குர்னவாகா நகரத்தில் புதிதாக கட்டப்பட்ட தரைப்பாலம் திறக்கப்பட்டது. சம்பவத்தின் போது, ​​மேயர் மற்றும் பலர் உடனிருந்தனர். இயற்கை எழில் கொஞ்சும் ஓடையின் மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் மரப் பலகைகளால் ஆனது. பாலத்தின் உலோக சங்கிலிகள் சமீபத்தில் மறுவடிவமைக்கப்பட்டன.  இந்நிலையில், மெக்சிகோவின் இந்த தரைப்பாலம் திறக்கப்பட்ட … Read more

பாகிஸ்தானில் 1,572 மீ. பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து.. 22 பேர் உடல் நசுங்கி பலி..!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்தனர். பலுசிஸ்தானின் லோராலியாவில் இருந்து சோப் நகருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று புறப்பட்டு சென்றது. அக்தர்சாய் மலைப்பகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், ஆயிரத்து 572 மீ. உயர மலைச்சாலையில் இருந்து பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த 22 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.  Source … Read more

தாய்லாந்தில் வெட்டுக்காயங்களுடன் கரை ஒதுங்கிய கடல்பசு.. டிராங் மாகாணத்தில் 170 கடல் பசுக்கள் இருப்பதாக கணிப்பு..!

தெற்கு தாய்லாந்தின் டிராங் மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வெட்டுக்காயங்களுடன் கரைஒதுங்கிய கடல் பசு மீண்டும் கடலுக்குள் செல்ல பொதுமக்கள் உதவினர். கடல்பசுவின் உடலில் காணப்பட்ட ஆழமான வெட்டுக்காயங்களில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்த நிலையில் கரையில் நின்றிருந்த சிலர் காயங்களின் எரிச்சலை குறைக்கும் வகையில் அதன்மீது கடல் நீரை ஊற்றினர். பின்னர் தார்ப்பாய் மீது வைத்து அது மீண்டும் அந்தமான் கடலுக்குள் செல்ல அவர்கள் உதவிபுரிந்தனர். சிலர் கடல் பசுவுடன் சிறிது தூரம் வரை உள்ளே … Read more

Monkeypox: காற்று மூலம் பரவும் குரங்கு அம்மை? – WHO திடீர் விளக்கம்!

காற்றின் மூலமாக குரங்கு அம்மை பரவுகிறதா என்பது குறித்து விரிவான ஆய்வு தேவை என, உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது. இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, சீனா, பிரிட்டன் உட்பட உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று ஆட்டிப் படைத்தது. இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டன. தற்போது பொது மக்கள் கொரோனா தொற்றுடன் வாழ பழகிக் கொண்டனர் என்று தான் சொல்ல வேண்டும். கொரோனா வைரஸ் … Read more

தண்டவாளம் அருகே நின்ற இயந்திரம் மோதி ரயில் விபத்து.. ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 22 பயணிகள் பலி..!

தெற்கு ஈரான் நோக்கி சென்ற பயணிகள் ரயில் தண்டவாளம் அருகே இருந்த மணல் அள்ளும் இயந்திரத்தின் மீது மோதி தடம்புரண்ட விபத்தில் 22 பயணிகள் உயிரிழந்தனர். டாபாஸ் நகரில் இருந்து யாஸ்த் நகர் நோக்கி 350 பயணிகளுடன் சென்ற ரயில் தண்டவாளம் அருகே இருந்த மணல் அள்ளும் ராட்சத இயந்திரம் மீது மோதியது. கட்டுப்பாட்டை இழந்து ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. பெட்டிகள் குலுங்கியதில் அதிலிருந்த பயணிகள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு … Read more

வேன் கவிழ்ந்து பாகிஸ்தானில் 22 பேர் பலி| Dinamalar

கராச்சி:பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லோராலியாவில் இருந்து, சோப் நகருக்கு, ஒரு வேன்சென்று கொண்டிருந்தது. அக்தர் சாய் மலைப்பகுதியில், ஒரு வளைவில் திரும்பும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில், பயணம் செய்த ஐந்து குழந்தைகள், ஐந்து பெண்கள் உட்பட, 22 பேர் இறந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒரேயொரு குழந்தை மட்டும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. விபத்து பற்றி போலீசார் கூறுகையில், ‘அக்தர் சாய் மலை உச்சியில் இருந்து, வேன் மிகவும் ஆழமான பள்ளத்தில் விழுந்து … Read more

கொரோனா கருவி ஊழல் வியட்நாம் அமைச்சர் கைது| Dinamalar

ஹனோய்:கொரோனா பரிசோதனை கருவிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், வியட்நாம் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கைது செய்யப்பட்டார்.தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில், ‘வியட் ஏ டெக்னாலஜி கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனம், கொரோனா பரிசோதனை கருவிகளை நாடு முழுதும் விற்பனை செய்தது. இதன் உண்மை விலையை உயர்த்தி அதிக விலைக்கு விற்பனை செய்ய சுகாதாரத்துறைக்கு லஞ்சம் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் குயன் தான் லாங் … Read more

இந்தியா மட்டுமே உதவுகிறது இலங்கை பிரதமர் உருக்கம்| Dinamalar

கொழும்பு:”கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து நம்மை காப்பாற்றுவதற்கு இந்தியா மட்டுமே உதவி செய்து வருகிறது” என இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அந்த நாட்டின் பார்லிமென்டில் தெரிவித்தார்.நம் அண்டை நாடான இலங்கை இதுவரை காணாத கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மக்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலக நேரிட்டது. இதையடுத்து புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார். நாட்டின் நிதி அமைச்சராகவும் அவர் உள்ளார்.நிதி சிக்கலில் இருந்து மீள ஐ.எம்.எப். எனப்படும் … Read more