எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கையில் மாணவர்கள் அவதி; தேர்வு எழுத பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பு..!

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பல்வேறு இடங்களிலும் போக்குவரத்தை தேடி மாணவர்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர் ஒருவர் தெரிவிக்கையில், 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை முதல் க்யூவில் நின்று பெட்ரோல் வாங்கி வைத்திருந்ததால் தனது குழந்தையை தேர்வு எழுத பள்ளிக்கு அழைத்துவர முடிந்ததாக தெரிவித்தார். Source link

பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம் – பரபரப்பு வீடியோ

கிங்க்ஸ்டன்: கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பரமாரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கூண்டுக்குள் உள்ள சிங்கத்தை, பராமரிப்பாளர் தொட முயன்றார். சிங்கம் அவரைப்பார்த்து உருமியப்படி இருந்தது.  இருப்பினும் அவர் தொடர்ந்து சிங்கத்தை தொட்டு விளையாடியபடி இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கம் அவரது விரலை கடித்து  குதறியது. 15 பேர் இந்த சம்பவத்தை நின்று வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பவத்தால் பராமரிப்பாளரின் விரல் முழுவதும்  துண்டிக்கப்பட்டதாக … Read more

மூத்த ராணுவ அதிகாரி மரணம்..! சவப்பெட்டியைச் சுமந்து சென்ற கிம் ஜாங் உன்

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. கடந்த 2 ஆண்டுகளாக தங்களது நாட்டில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மறுத்து வந்த வடகொரியா, கடந்த 12-ம் தேதி  நாட்டில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் உலக சுகாதார அமைப்பும், சீனாவும் வழங்கிய கொரோனா தடுப்பூசிகளை வடகொரியா … Read more

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி அல்பேனிஸ் பதவியேற்பு

ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசன், தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அதிக இடங்களை கைப்பற்றி அந்தோணி அல்பேனீஸ் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகத் தேர்வானார்.  கேன்பரா நகரில் உள்ள அரசு இல்லத்தில் இன்று காலை அந்தோணி அல்பேனீஸ் பதவியேற்றுக் கொண்டார். இவர் ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமர் ஆவார். அவருடன் 4 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். … Read more

பலரின் வலி சிலருக்கு லாபம்: 30 மணி நேரத்திற்கு ஒரு கோடீஸ்வரரை உருவாக்கிய கொரோனா

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகை உலுக்கத் தொடங்கிய கோவிட், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனாவால் ஏற்பட்ட இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு உலகப் பொருளாதார மன்றத்திம் கூடியது. அதில், ​​ஏழைகளுக்கு உதவ பணக்காரர்களுக்கு வரி விதிக்க வேண்டிய நேரம் இது என்று ஆக்ஸ்பாம் கோருகிறது. சமீபத்திய ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, “வலியிலிருந்து லாபம்” என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. கோவிட்-19 தொற்றுநோய் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு புதிய கோடீஸ்வரரை உருவாக்குகிறது என்ற செய்தி சந்தர்ப்பங்களின் பலன் சிலருக்கு … Read more

இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு செல்ல தடை – சவூதி அரேபியா உத்தரவு!

கொரோனா பரவல் காரணமாக, இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதித்து, சவூதி அரேபிய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்த தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது, பல்வேறு வகைகளில் உருமாற்றம் … Read more

பயணிகள் படகு தீப்பிடித்து எரிந்து விபத்து… 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.!

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள QUEZON மாகாணத்தில் பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். Source link

இலங்கையில் புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்று ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் இதுவரை 13 பேர் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்று மேலும் 8 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு, அதிபர் கோத்பய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  அதன்படி, விவசாயம் மற்றும் வனவிலங்குத்துறை அமைச்சராக மகிந்த அமரவீரவும்,  ஊடகம் போக்குவரத்துறை அமைச்சராக பந்துல குணவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடல் தொழில் அமைச்சராக டக்ளஸ் தேனாந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.  விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சராக  அநுருத்த ரணசிங்கேவும், … Read more

Monkeypox: உலகை அச்சுறுத்தும் குரங்கு காய்ச்சல்; அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும்

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், மங்கி பாக்ஸ் எனப்படும் ஒரு வகை குரங்கு காய்ச்சல் நோய் பரவத் தொடங்கி உள்ளது. இது அடுத்த பெருந்தொற்றாக உருவெடுக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அமெரிக்கா, போர்ச்சுகல், இஸ்ரேல் உள்ளிட்ட உலகின் சுமார் 12 நாடுகளில், 92 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் குரங்கு … Read more

ராணுவ உயர் அதிகாரி மறைவு: உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த அதிபர் கிம்.!

வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ உயர் அதிகாரியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை அதிபர் கிங் ஜாங் உன் சுமந்து செல்லும் காட்சி வெளியாகி உள்ளது. உயிரிழந்த ராணுவ அதிகாரி Hyon Chol Hae ன் இறுதி சடங்குகள் நேற்று நடைபெற்றது. அப்போது அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை சுமந்து சென்ற அதிபர் கிங் ஜாங் உன், பின்னர் தனது கைகளால் மணலை அள்ளி சவக்குழிக்குள் கொட்டினார். 2011-ம் ஆண்டு தனது தந்தை உயிரிழந்ததற்கு பிறகு கிங் ஜாங் … Read more