“இலங்கை அதிபர் பொறுப்பை ஏற்கத் தயார்” – சரத் பொன்சேகா விருப்பம்
கொழும்பு: “பெரும்பான்மை எம்.பி.க்கள் என்னைத் தேர்ந்தெடுத்தால் அதிபராகப் பொறுப்பேற்கத் தயார்” என்று இலங்கை முன்னாள் ராணுவத் தளபதியும், இலங்கை எம்.பி.யுமான சரத் பொன்சேகா கூறியுள்ளார். இதுகுறித்து சரத் பொன்சேகா அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது, “இலங்கை பொதுஜன பெராமுனா கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் என்னை அதிபர் பதவிக்கு போட்டியிடுமாறு வலியுறுத்தியுள்ளனர். பெரும்பான்மையான நாடாளுமன்ற எம்.பி.க்களால் அதிபர் பதவிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அப்பதவியை நிச்சயம் ஏற்பேன்” என்றார். இதுபற்றி கட்சித் தலைவர் சஜித் பிரேமதேசாவிடம் கூறியுள்ளீர்களா என்ற கேள்விக்கு, … Read more