ஜி- 7 மாநாடை புறக்கணிக்க கோரி பேரணியாக சென்ற மக்கள்.. பாதுகாப்பு முன்னேற்பாடாக 18,000 போலீசார் குவிப்பு..!

ஜெர்மனியின் முனிச் நகரில், ஜி 7 மாநாட்டினை புறக்கணிக்க வேண்டும் எனக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று பேரணியாக சென்றனர். ஜி 7 கூட்டணியை எதிர்க்க வேண்டும் என்றும், காலநிலை மாற்றத்தை பாதுகாக்க வேண்டும் எனக்கோரியும் பதாகைகளை ஏந்தி பலர் பேரணியாக சென்றனர். பாதுகாப்பு முன்னேற்பாடாக மாநாடு நடைபெறும் இடம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். Source link

அதிபரை கொல்ல சதித்திட்டம்: 8 பெண்கள் அதிரடி கைது!

துனிசியாவில் அதிபர் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்ட நிலையில், பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய 8 பெண்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். துனிசியாவில் அதிபர் கெய்ஸ் சையது மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு அமைப்புக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு பிரிவினர் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில், அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், துனிஸ் நகருக்கு வடக்கே கிராம் என்ற நகரில் 2 பெண்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு … Read more

அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பொழுதுபோக்கு கண்காட்சி.. பார்வையாளர்களை கவர்ந்து வரும் பன்றிகளுக்கான ஓட்டப்பந்தயம்..!

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பொழுதுபோக்கு கண்காட்சியில் பன்றிகளுக்கான ஓட்டப்பந்தயம் பார்வையாளர்களை கவர்ந்தது. பொழுதுபோக்கு கண்காட்சியானது கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நிலையில் ஜூலை மாதம் முதலாவது வாரம் வரை நடைபெற உள்ளது. பல்வேறு விளையாட்டுக்கள் மற்றும் பொருட்கள் விற்பனைக் கடைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. Source link

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கோவிட்| Dinamalar

லண்டன்: கோவிட் காரணமாக கடந்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இப்போட்டி பர்மிங்காமில் ஜூலை 1ல் நடக்கிறது. இதற்கு முன்னதாக இங்கிலாந்தின் லீசெஸ்டயர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ தரப்பில் தெரிவிக்கையில், … Read more

Monkeypox: வேகமாக பிறழும் குரங்கு அம்மை வைரஸ்; WHO கூறுவது என்ன…

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை நோய், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குறைந்த அளவில் பரவி வருகிறது. இந்த குரங்கு அம்மை வைரஸ் தைவான் மற்றும் கொலம்பியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. இந்தியாவில், சில சந்தேகத்திற்கிடமான சில தொற்று பாதிப்புகள் இருப்பதாக அறிக்கைகள் இருந்தாலும், அது இன்னும் கண்டறியப்படவில்லை. அவர்கள் அனைவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை போர்ச்சுகலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து கூறுகையில், இந்த வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவுவதால் … Read more

இம்ரான் கான் அறையில் உளவுக் கருவியைப் பொருத்த முயற்சி.. பாதுகாப்பு நிறுவன ஊழியர் கைது..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அறையில் உளவு பார்ப்பதற்கான கருவியைப் பொருத்த முயன்ற ஊழியர் ஒருவர் சிக்கியுள்ளார். பானி காலா என்ற பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த அவருக்கு பணம் கொடுத்து இந்தப் பணி தரப்பட்டது. ஆனால் சக ஊழியர் ஒருவர் ரகசிய தகவல் கொடுத்ததால் அந்த சதி முறியடிக்கப்பட்டது. உளவுக் கருவியைப் பொருத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். தம்மை கொல்ல சதி நடப்பதாக இம்ரான் கான் கூறி வந்த நிலையில் அவரை … Read more

ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு| Dinamalar

முனிச்: ஜி7 மாநாடு மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனியில் ஜூ7 நாடுகளின் மாநாடு துவங்குகிறது. அதில், அந்நாட்டு அதிபரின் அழைப்பின் பேரில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றடைந்தார். விமான நிலையத்தில் இசைக்கலைஞர் வாத்தியங்களை இசைத்து மோடிக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கு குவிந்த இந்திய வம்சாவளியினர் தேசியக்கொடியை காண்பித்தும் உற்சாகமாக வரவேற்றனர். அவர்கள் அருகில் சென்று கையை உயர்த்தி … Read more

திருநங்கைகளுக்கான சர்வதேச அழகிப் போட்டி.. பிலிப்பைன்ஸ் அழகி வெற்றி..!

தாய்லாந்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சர்வதேச அழகிப் போட்டியில் பிலிப்பைன்சை சேர்ந்த பிலிப்பினா ரவேனா பட்டம் வென்றார். கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டனர். இறுதிச் சுற்றில் 22 அழகிகள் கலந்து கொண்ட நிலையில் பிலிப்பைன்சை சேர்ந்த தொழில்முனைவோர் பிலிப்பினா ரவேனா, சர்வதேச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு முடி சூடப்பட்டார். கொலம்பியா மற்றும் பிரான்ஸ் அழகிகள் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை தட்டிச் சென்றனர். Source link

திறந்து வைத்தார் பிரதமர் ஹசீனா| Dinamalar

தாகா: வங்கதேசத்தின் மிக நீண்ட பாலமான ‘பத்மா’ பாலத்தை அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று திறந்து வைத்தார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் தென்மேற்கே உள்ள பகுதிகளை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் பத்மா நதியின் குறுக்கே மிகப் பெரிய பாலம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 6.15 கி.மீ. நீளமுள்ள இந்தப் பாலம் வங்கதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய உள்கட்டமைப்பு வசதியாக பார்க்கப்படுகிறது.இரண்டு அடுக்குகளை உடைய இந்த பாலத்தின் … Read more

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இருந்து சீனா விலகல்..!

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இருந்து விலகுவதாக சீனா அறிவித்துள்ளது. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்குகிறது. தொடரில் பங்கேற்க இதுவரை 187 நாடுகள் முன்பதிவு செய்துள்ளன. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் இருந்து விலகுவதாக சீனா அறிவித்துள்ளது. ஏற்கனவே ரஷ்யா தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சீனா தொடரில் இருந்து விலகி உள்ளது. Source link