கிரீஸ் கடலில் கிடந்த 23.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
சர்வதேச கடல் பாதுகாப்பு அமைப்பு மூலம் கிரீஸ் கடலில் கொட்டிக் கிடந்த வலை, பிளாஸ்டிக் கேன்கள் உள்ளிட்ட 23 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. உலக பெருங்கடல் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு, கடல் மாசு தவிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மீனவர்களின் ஒத்துழைப்புடன் கடலினுள் கிடந்த 23 புள்ளி 5 டன் வலை, மைக்ரோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. Source link