‘வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் உலக அமைதிக்கு அச்சுறுத்தல்’ – தென் கொரியா அதிபர் கவலை

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுதத் திட்டங்கள் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலையை எட்டியுள்ளதாக தென்கொரியா அதிபர் யூன் சுக் யோல் தெரிவித்துள்ளார். வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய பிறகு இன்று காலை சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். Source link

நைஜீரியாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் பலி

ஓவோ, நைஜீரியா நாட்டின் வடமேற்குப் பகுதி ஒண்டோ மாநிலத்தில் உள்ள ஓவோவில் செயின்ட் பிரான்சிஸ் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று பெந்தகோஸ்தே ஞாயிறு பிரார்த்தனை நடைபெற்றது. அதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்று வழிபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தேவாலயத்துக்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடித்தும் தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள் குழந்தைகள் உள்பட 50 பலர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் … Read more

ஷாங்காயில் 2 மாத முடக்கத்திற்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்..!

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் இரண்டு மாத கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படுள்ளன. ஷாங்காய் நகரத்தல் கடந்த ஒன்றாம் தேதி பொதுமுடக்கம் நீக்கப்பட்ட நிலையில், இன்று முதல் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளனர். . Source link

'மக்கள்தொகை வீழ்ச்சி' நாகரிகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் – எலான் மஸ்க் பரபரப்பு கருத்து

வாஷிங்டன், உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது. பொருளாதார ரீதியில் ஒப்பிடும்போது முன்னேறிய நாடாக ஜப்பான் உள்ளது. எனினும் அந்த நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஜப்பானில் மக்கள் தொகையில் தற்போது பெரும்பாலானோர் முதியவர்களாக உள்ளனர். ஜப்பான் நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்காவிட்டால் அந்த நாடு விரைவில் காணாமல் போய்விடும் என டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்து … Read more

தலைநகர் கீவ் மீது 5 ஏவுகணைகளை வீசி ரஷ்ய படைகள் தாக்குதல்..!

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ரயில்வே பணிமனை மீது ரஷ்ய படைகள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. பல வாரங்களுக்கு பிறகு கீவ் நகர் மீது ரஷ்ய படைகள் நேற்று மீண்டும் தாக்குதலை தொடங்கின. மொத்தமாக 5 ஏவுகணைகள் வீசப்பட்டதில் ஒரு ஏவுகணை ரயில்பழுதுபார்க்கும் பணிமணை மீது விழுந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கிழக்கு ஐரோப்பிய கூட்டணி நாடுகள் உக்ரைன் படைகளுக்கு வழங்கிய டாங்குகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது. Source link

முகமது நபிக்கு எதிராக பாஜக தலைவர்கள் சர்ச்சை கருத்து: கத்தார், குவைத், ஈரானை தொடர்ந்து சவுதியும் கடும் எதிர்ப்பு!

தோஹா, முகமது நபிக்கு எதிராக பாஜக தலைவர்கள் நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன. சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இந்த மூன்று நாடுகளிலும், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலும் ஆட்சேபனைக்கு வழிவகுத்தன. இந்த சர்ச்சை … Read more

Nigeria Church Shooting: சர்ச்சில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு – 50 பேர் உயிரிழப்பு!

நைஜீரியா நாட்டில், தேவாலயம் ஒன்றில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள், திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 50 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென அங்கு நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் … Read more

இலங்கையில் அதிபரை விட நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம்? அதிபரின் அதிகாரங்களால் தான் பொருளாதார நெருக்கடி என புகார்..!

இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைத்து, நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 21வது சட்ட திருத்தம், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இலங்கையில் அதிபருக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதால் தான், நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதையடுத்து 19வது சட்ட திருத்தத்தை ரத்து செய்து, நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் விதமாக அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள அதிபர் கோத்தபய ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. Source … Read more

காபி இயந்திரத்தின் டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் – என்ன காரணம் தெரியுமா ?

வாஷிங்டன், இத்தாலி நாட்டின் துரின் பகுதியில் 1851ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி பிறந்தவர் ஏஞ்சலோ மோரியோண்டோ. இவர் தொழில்முனைவோர் குடும்பத்தைச் சேர்ந்தவர். 19ம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியில் காபி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது. அப்போது காபியை பெறுவதற்கு மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. இதனை உணர்ந்த மோரியோண்டோ மிகப்பெரிய பாய்லரை கொண்ட எஸ்பிரெசோ இயந்திரத்தை 1884ல் கண்டுபிடித்தார். இதனால் மக்கள் காபி வாங்குவதற்கு நீண்ட வரிசையில் … Read more

நைஜீரியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு; 50 பேர் பலி

நைஜீரியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். துப்பாக்கி ஏந்திய நபர்கள் தேவாலய கட்டடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் இருந்தவர்களை நோக்கி  கண்மூடித்தனமாக சுட்டதாக ஓண்டோ மாநில காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையின் போது துப்பாக்கி ஏந்திய நபர்  நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக நைஜீரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒண்டோ மாநிலத்தின் … Read more