மத்திய அரசுக்கு கத்தார் கண்டனம்| Dinamalar

தோஹா : பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஒருவர் முஸ்லிம் மதத்தைப் பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்ததற்காக, கட்சியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மேற்காசியாவில் உள்ள முஸ்லிம் நாடான கத்தார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:இந்தியாவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர், முஸ்லிம் மதம் பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக, இந்திய துாதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தோஹா : பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஒருவர் முஸ்லிம் மதத்தைப் பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்ததற்காக, … Read more

144 தடை உத்தரவு; இஸ்லாமாபாதில் அமல்| Dinamalar

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக வதந்தி பரவியதை அடுத்து,இஸ்லாமாபாதில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பார்லிமென்டில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவி இழந்தார். புதிய பிரதமராக, பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார். இந்நிலையில், இம்ரான் கானை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் … Read more

இலங்கையின் 21வது சட்ட திருத்தம் அமைச்சரவை இன்று ஒப்புதல்?| Dinamalar

கொழும்பு, : இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைத்து, பார்லிமென்டுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 21வது சட்ட திருத்தம், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில் அதிபருக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதால் தான், நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்றபோது, பார்லிமென்டுக்கு அதிகாரம் அளிக்கும் 19வது சட்ட திருத்தத்தை ரத்து செய்து, அனைத்து அதிகாரங்களும் அதிபர் வசம் வரும் வகையில், … Read more

நபிகளுக்கு எதிரான கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: பாஜக பிரதிநிதிகள் முகமது நபிகளுக்கு எதிராக தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப். பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா மற்றும் நவீன் குமார் ஆகியோர் முகமது நபிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர். அது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நாடுகள் இதற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளன. அந்த வரிசையில் பாகிஸ்தான் இப்போது இணைந்துள்ளது. அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இது தொடர்பாக தனது … Read more

முகமது நபி குறித்து அவதூறான கருத்து | இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பிய ஈரான், கத்தார், குவைத்; முழு விவரம்

முகமது நபி குறித்து பாஜக பிரதிநிதிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், கத்தார் மற்றும் குவைத் நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன. அவதூறாக பேசிய பிரதிநிதிகள் மீது பாஜக சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கத்தாரை தொடர்ந்து ஈரான் மற்றும் குவைத் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சம்பந்தப்பட்ட நாடுகளில் இயங்கி வரும் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவதூறான கருத்தை தெரிவித்த பாஜக-வின் நுபுர் சர்மாவை இடைநீக்கம் செய்தும், நவீன் குமாரை கட்சியின் … Read more

இலங்கையில் 21வது சட்ட திருத்தம்: அமைச்சரவை ஒப்புதலுக்கு வருகிறது| Dinamalar

கொழும்பு:இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைத்து, பார்லிமென்டுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 21வது சட்ட திருத்தம், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில் அதிபருக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதால் தான், நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனால், பார்லிமென்டுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், அப்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவால் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்றபோது, பார்லிமென்டுக்கு அதிகாரம் … Read more

பிரெஞ்ச் ஓபன்: நடால் சாம்பியன்| Dinamalar

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஆதிக்கம் செலுத்தி வரும் நடால், 14 முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் 6-3, 6-3, 6-0 என நார்வேயின் காஸ்பர் ரூட்டை தோற்கடித்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்-5’ வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், 8வது இடத்தில் உள்ள நார்வேயின் காஸ்பர் ரூட் மோதினர். களிமண் கள பிரெஞ்ச் ஓபனில் மன்னனான நடால் … Read more

அதிபரின் ஓய்வு மாளிகை அருகே பறந்த விமானம் குறித்து வெள்ளை மாளிகை விளக்கம்.!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஓய்வெடுத்த கடற்கரை மாளிகை மீது தகவலின்றி விமானம் பறந்த நிலையில், அதிபர் மற்றும் அவரது மனைவியின் பாதுகாப்பிற்கு ஆபத்து இல்லை என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. டெலாவேர் அருகே உள்ள ரெகோபாத் கடற்கரை பகுதியில் பைடன், அவரது மனைவியுடன் தங்கியிருந்தார். அப்போது, அவரது மாளிகை மீது சிறிய ரக விமானம் ஒன்று தவறுதலாக நுழைந்தது. இதனையடுத்து, அந்த விமானம் இடைமறித்து திசை திருப்பிவிடப்பட்ட நிலையில், பைடன், மனைவி ஜில் பைடன் … Read more

அமெரிக்காவில் வார இறுதியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா நகரம் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு பிரசித்தி பெற்றது. நேற்று இரவு மக்கள் கூட்டம் அதிகமிருந்த பகுதியில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர். மக்கள் அதிகமாகக் கூடும் பகுதி என்பதால் போலீசார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலும் இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 2 … Read more

புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் -மேற்கு நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை

உக்ரைனுக்கு தொலை தூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கினால், புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என மேற்கு நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வழங்குமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் கோரியுள்ளது. இந்நிலையில், இது குறித்து பேசிய புதின், அந்த ரக ஏவுகணைகள் வழங்கப்பட்டால், தாங்கள் இதுவரை தாக்காத இலக்குகளை தாக்குவோம் என … Read more