அமெரிக்காவில் பயங்கரம் – தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர். இதுதொடர்பாக, உவால்டே மாநில கவர்னர் கூறுகையில், சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ஒரு பள்ளியில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர். அவன் 14 மாணவர்களையும் 1 ஆசிரியரையும் சுட்டுக் கொன்றார் எனவும், … Read more

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 15 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளிக்குள் புகுந்த இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே யுவால்டே கவுண்டி என்ற நகரில் சாண்டி ஹூக் என்ற உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு புகுந்த மர்ம நபர் கண்ணில்பட்டவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டான். இதில் 15 பேர் பலியானதாகவும் பலர் காயம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்.தகவலறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி … Read more

லைவ் அப்டேட்ஸ்: ரஷிய அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் – அதிபர் ஜெலன்ஸ்கி

25.5.2022 00.45: சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் இணைய வழியில் பங்கேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், போரை முடிவுக்கு கொண்டுவர ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார். உக்ரைன் மக்களை ரஷிய படைகள் படுகொலை செய்து வருகின்றன. ரஷியாவின் மற்ற பிரதிநிதிகளுடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படவில்லை என்பதால் அவர்களுடனான பேச்சுவார்த்தையை ஏற்கப் போவதில்லை என தெரிவித்தார்.

குவாட் தலைவர்களுக்கு சஞ்சி கலை, கோண்ட் கலை ஓவியம், கைவினைப் பெட்டியை பரிசாக வழங்கிய பிரதமர் மோடி

டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை தனித்தனியே சந்தித்தார். அப்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி சஞ்சி கலை ஓவிய தொகுப்பைப் பரிசாக வழங்கினார். சஞ்சி ஓவியம் என்பது கிருஷ்ணரின் வழிபாட்டு முறையிலிருந்து தோன்றி, உத்தர பிரதேசத்தில் செழித்து வளர்ந்த கலை … Read more

தைவான் மீது போர்… அமெரிக்காவின் எச்சரிக்கை மீறி சீனா மிரட்டல்!

தைவானை தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தென்சீன கடல் பகுதியில் அந்நாட்டு ராணுவம் அவ்வபோது போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு தைவானுக்கு அச்சுறுத்தல் அளி்த்துவரும் சீனா, தற்போது ஒருபடி மேலே சென்று, தேவைப்பட்டால் தைவான் மீது ராணுவ பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என்று அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது யூடியூப் சேனல்களில் கசிந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசும் ஆடியோ. … Read more

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 420 ரூபாய்; டீசல் 400 ரூபாய்!| Dinamalar

கொழும்பு : இலங்கையில், அந்நாட்டு ரூபாய் மதிப்பில், ஒரு லிட்டர் பெட்ரோல், 420 ரூபாய்; டீசல், 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இலங்கை அரசு இன்று (மே 24), பெட்ரோல், டீசல் விலையை முறையே, 24 சதவீதம் மற்றும் 38 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 82 ரூபாயும், டீசலுக்கு, 111 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்.,19க்குப் பின் இரண்டாவது முறையாக பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது வரலாறு காணாத விலை உயர்வாகும். இதன்படி இலங்கை … Read more

கரோனா தீவிரத்தை அதிகப்படுத்துகிறது காற்று மாசுபாடு: புதிய ஆய்வு முடிவு

கரோனா தொற்றின் தீவிரத்தை காற்று மாசுபாடு அதிகப்படுத்துகிறது என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆய்வு ஒன்றை கனடிய மருத்துவ சங்க இதழ் (Canadian Medical Association Journal) வெளியிட்டுள்ளது. 1,51,105 பேர் பங்கெடுத்த இந்த ஆய்வின் முடிவில், ‘நுண்ணிய துகள் பொருள், நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவை காற்றை பொதுவாக மாசுப்படுத்தும் காரணிகளாக உள்ளன. எங்களது ஆய்வில் காற்று மாசுள்ள இடங்களில் வசிப்பவர்கள் கரோனாவினால் பாதிக்கப்படும்போது காற்று மாசின் காரணமாக கரோனாவின் தொற்றுக்கு … Read more

ஜப்பானிற்கு மிக அருகில் சீனா, ரஷ்யாவின் போர் விமானங்கள் பறந்தன – ஜப்பான் அமைச்சர்

குவாட் அமைப்பின் உச்சிமாநாடு ஜப்பானில் நடைபெற்ற நிலையில், அந்நாட்டிற்கு மிக அருகே சீனா மற்றும் ரஷ்ய நாடுகளின் போர் விமானங்கள் பறந்ததாக ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் நோபுவோ கிஷி தெரிவித்துள்ளார். ஜப்பான் வான்வெளிக்குள் அந்த விமானங்கள் நுழையவில்லை என குறிப்பிட்ட நோபுவோ கிஷி, கடந்த நவம்பர் முதல் ரஷ்யா மற்றும் சீன விமானங்கள் நான்காவது முறையாக தங்கள் நாட்டிற்கு அருகே பறந்ததாக கூறினார். ரஷ்யா மற்றும் சீனாவுக்குச் சொந்தமான குண்டுவீச்சு விமானங்கள் ஜப்பான் கடலில் இருந்து கிழக்கு … Read more

குவாட் உச்சி மாநாடு | ஜப்பானுக்கு அருகே சீன, ரஷ்ய போர் விமானங்கள் பறந்ததால் சலசலப்பு

டோக்கியோ: குவாட் உச்சி மாநாடு நடந்து வரும் வேளையில், ஜப்பான் நாட்டின் வான்பரப்பு எல்லைக்கு மிக அருகே சீனா மற்றும் ரஷ்ய நாட்டு போர் விமானங்கள் பறந்து சென்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? – ஜப்பான் நாட்டில் நடைபெற்று வரும் குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் ஜப்பான் நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் … Read more