சீனாவின் கிங்காய் பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

ஷாங்காய்: ஷாங்காய்: சீனாவின் கிங்காய் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பங்கினியில் இருந்து 687 கிலோமீட்டர் தொலைவிலும், 72 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து உடனடி தகவல்கல் ஏதும் வெளியாகவில்லை. இதையும் படியுங்கள்…பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம் – பரபரப்பு வீடியோ

ரஷ்ய ராணுவ வீரருக்குஉக்ரைனில் ஆயுள் சிறை| Dinamalar

கீவ்,-போர்க்குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷ்ய ராணுவ வீரருக்கு உக்ரைனில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்து கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்தப் போரில், ரஷ்ய ராணுவ வீரர் வாடிம் ஷிஷிமரின், 21, உக்ரைனை சேர்ந்த 62 வயது மூதாட்டியை சுட்டுக் கொன்றார். இதேபோல், உக்ரைன் நாட்டு பொதுமக்களில் ஒருவரையும் தலையில் சுட்டுக் கொலை செய்தார். இதையடுத்து, அவர் போர்க்குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நீதிபதிகள் குழு … Read more

மறைந்த ராணுவ அதிகாரி உடலை சுமந்து வந்த கிம் ஜோங் உன்

பையேயாங்க்: வட கொரியா ராணுவ உயரதிகாரி இறுதி சடங்கில் பங்கற்ற அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன், அவரது உடலை சுமந்து வந்தார். அதன் புகைபடங்கள், வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளது. வட கொரியாவில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்குமுன் ஒரே நாளில், 2.32 லட்சம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2.6 கோடி மக்கள் தொகை உடைய வட கொரியாவில், காய்ச்சலுக்கு … Read more

தண்டவாளங்களைதகர்க்க பாக்., சதி?| Dinamalar

புதுடில்லி,-நம் நாட்டில் தண்டவாளங்களை தகர்க்க, அண்டை நாடான பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. இம்மாநில எல்லைக்கு அருகில் உள்ள பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவது பரவலாக நடக்கிறது. நம் பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து அதை தடுத்து வருகின்றனர்.இந்நிலையில், பஞ்சாபில் தண்டவாளங்களை தகர்க்க, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு திட்டம் தீட்டியுள்ளதை நம் உளவு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. … Read more

தைவானை தாக்கினால் தலையிடுவோம்; சீனாவுக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை| Dinamalar

டோக்கியோ-”சீனா தைவானை ஆக்கிரமிக்க முயன்றால், அந்நாட்டிற்கு ராணுவ ரீதியில் உதவி செய்வோம்,” என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடங்கிய, ‘குவாட்’ அமைப்பின் கூட்டம், ஆசிய நாடான ஜப்பானில் நடக்கிறது. அத்துமீறல் இதில் பங்கேற்க டோக்கியோ வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளதாவது:கிழக்காசிய நாடான தைவானை ஆக்கிரமிக்க சீனா முயன்று வருகின்றது. தைவான் வான் எல்லைகளில், சீன விமானங்கள் அத்துமீறி நுழைகின்றன. மேலும், தீவு நாடான தைவானை, … Read more

இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள் – பிரதமர் மோடி பெருமிதம்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: நான் ஜப்பானுக்கு வரும் போதெல்லாம் உங்களிடம் இருந்து அதீத அன்பைப் பெறுகிறேன். உங்களில் சிலர் பல ஆண்டுகளாக ஜப்பானில் தங்கியிருந்தாலும் இந்திய கலாச்சாரம் மற்றும் மொழி மீதான அர்ப்பணிப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் முக்கியப் பங்காற்றி உள்ளது. வன்முறை, அராஜகம், பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் … Read more

சீனாவுக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை| Dinamalar

டோக்கியோ: ”சீனா தைவானை ஆக்கிரமிக்க முயன்றால், அந்நாட்டிற்கு ராணுவ ரீதியில் உதவி செய்வோம்,” என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடங்கிய, ‘குவாட்’ அமைப்பின் கூட்டம், ஆசிய நாடான ஜப்பானில் நடக்கிறது. இதில் பங்கேற்க டோக்கியோ வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளதாவது: கிழக்காசிய நாடான தைவானை ஆக்கிரமிக்க சீனா முயன்று வருகின்றது. தைவான் வான் எல்லைகளில், சீன விமானங்கள் அத்துமீறி நுழைகின்றன. மேலும், தீவு … Read more

படகு விபத்து- மியான்மர் கடற்கரையில் ஒதுங்கிய 14 உடல்கள் மீட்பு

யாங்கோன்: மியான்மர் கடற்கரையில் இன்று 14 உடல்கள் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. ரோகிங்கியா அகதிகள் மேற்கு மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்றபோது அவர்களின் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 14 பேரின் உடல்கள் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில், படகு உரிமையாளர்கள் உள்பட 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள புத்திடாங், மவுங்டாவ் மற்றும் சிட்வே ஆகிய நகரங்களில் இருந்து மக்களை ஏற்றிக்கொண்டு படகு சென்றதாக சமூக ஆர்வலர் … Read more

படகில் தீ; 7 பேர் பலி| Dinamalar

மணிலா: பிலிப்பைன்சில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏழு பேர் உயிரிழந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் பொலிலியோ தீவில் இருந்து, ரியல் துறைமுகம் நோக்கி இன்று(மே 23) ஒரு படகு சென்றது. அதில், 134 பயணியர் இருந்தனர். திடீரென படகின் இன்ஜினில் தீப்பற்றி, படகு முழுதும் பரவியது. தீயில் இருந்து தப்பிக்க, பயணியர் கடலில் குதித்தனர். ஆனால், தீயில் சிக்கிய ஏழு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். கடலில் குதித்தவர்களில் 120 பேர் மீட்கப்பட்டனர். … Read more

ஆஸ்திரேலிய பிரதமராக பதவி ஏற்றார் அந்தோனி ஆல்பேன்ஸ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கேன்பெரா : ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக, அந்தோனி ஆல்பேன்ஸ் பதவி ஏற்றார். ஆஸ்திரேலிய பார்லிமென்ட் தேர்தல், சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த, ‘கன்சர்வேட்டிவ்’ கூட்டணி அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து, பிரதமர் ஸ்காட் மோரீசன் பதவி விலகினார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சியை சேர்ந்த அந்தோனி ஆல்பேன்ஸ், புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜப்பானில் நாளை நடக்கவுள்ள ‘குவாட்’ பாதுகாப்பு மாநாட்டில், புதிய … Read more