இலங்கை அதிபர் அதிகாரம் குறைப்பு?அமைச்சரவை இன்று பரிசீலனை!| Dinamalar

கொழும்பு-இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா குறித்து, இன்று அமைச்சரவை பரிசீலிக்க உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில் அரசியல் சாசனத்தின், 19வது சட்ட திருத்தம், அதிபரை விட சர்வ வல்லமை உள்ள அமைப்பாக பார்லி.,க்கு அதிகாரம் வழங்கி இருந்தது. சட்ட திருத்தம்இந்நிலையில், 2019ல் இலங்கை அதிபராககோத்தபய ராஜபக்சே பொறுப்பேற்ற பின், 19வது சட்ட திருத்தத்தை நீக்கினார்.பார்லி.,யை விட அனைத்து அதிகாரங்களையும் அதிபருக்கு வழங்கும் அரசியல் சாசனத்தின் 20வது … Read more

புதுமண தம்பதிக்கு வினோத கட்டுப்பாடு| Dinamalar

ஜகார்த்தா-இந்தோனேஷியாவில் புதுமணத் தம்பதியர், திருமண நாளில் இருந்து மூன்று நாட்களுக்கு கழிப்பறை பயன்படுத்த தடை விதிக்கும் வினோத பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் திடாங் என்ற பழங்குடியின சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இந்த சமூகத்தில் பல வினோத பழக்கங்கள் உள்ளன; அதில் ஒன்று கழிப்பறை பயன்படுத்த தடை விதிப்பது. அதாவது, புதுமணத் தம்பதி திருமணம் நடந்த நாளில் இருந்து மூன்று நாட்களுக்கு கழிப்பறைக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாட்டை … Read more

இந்தியாவின் நிவாரண பொருட்கள்இலங்கை அரசிடம் ஒப்படைப்பு| Dinamalar

கொழும்பு,-இந்தியா அனுப்பிய அரிசி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நேற்று இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு, பல தவணைகளில், 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.இது தவிர பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு அரிசி, மருந்துகள் உள்ளிட்டவை மானியமாக வழங்கப்படுகின்றன.இந்நிலையில் தமிழக அரசின், 90 லட்சம் கிலோ அரிசி, 20 ஆயிரம் கிலோ பால் பவுடர், 25 ஆயிரம் கிலோ மருந்துகள் மற்றும் … Read more

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: இந்தியாவுக்கு இம்ரான் பாராட்டு| Dinamalar

இஸ்லாமாபாத்,-”இந்தியா, தன் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையால் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது. ஆனால் பாக்., அன்னிய சக்திகளின் எடுப்பார் கைப்பிள்ளையாக உள்ளது,” என, அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். மத்திய அரசு நேற்று முன்தினம் லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.இது குறித்து சமூக ஊடகங்களில் இம்ரான் கானிடம் கருத்து கேட்கப்பட்டது.அதற்கு அவர் அளித்த பதில்: இந்தியா, தனக்கே உரித்தான சுதந்திரமான வெளியுறவு கொள்கையை பின்பற்றுகிறது. அதனால் தான் அமெரிக்காவுடன் … Read more

லைவ் அப்டேட்ஸ்: ரஷியா உடனான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது – அதிபர் ஜெலன்ஸ்கி

23.5.2022 00.30: உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அங்கு ஒரு டிவி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைன் போரில் ரத்தக்களறி ஏற்படுகிறது. தாக்குதல் தொடர்கிறது. போர் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையேயான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பேச்சுவார்த்தை மூலம்தான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். போர்க்களத்தில் உக்ரைன் வெற்றி பெற்றாலும், பேச்சுவார்த்தைக்குப் பின்னரே போர் செயல்பாடுகள் முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.

பாக்., வெளியுறவு அமைச்சர் சீன அமைச்சருடன் சந்திப்பு| Dinamalar

பீஜிங்-பாக்., வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரி, நேற்று சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்து பேசினார். நம் அண்டை நாடான பாக்.,ல் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் புதிய அரசு அமைந்த பின், வெளியுறவு துறை அமைச்சராக பிலாவல் புட்டோ சர்தாரி நியமிக்கப்பட்டார். இவர், முன்னாள் பிரதமர் மறைந்த பெனசிர் புட்டோவின் மகன். இந்நிலையில் பிலாவல் புட்டோ, நேற்று சீனா சென்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்து … Read more

புயல், மழை… இருளில் மூழ்கிய கனடா!

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும், புயல், மழை போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் அளவுக்கு என்னதான் விஞ்ஞானம் வளர்த்திருந்தாலும், இவற்றின் பாதிப்பை மனிதனால் இன்னமும் தடுத்து நிறுத்த முடியவில்லை. என்னதான் இருந்தாலும் கடைசியில் நான்தான் ஜெயிப்பேன் என்று இயற்கை அவ்வபோது உணர்த்தி உள்ளது. கனடாவில் ஏற்பட்டுள்ள புயல், மழை இன்னொரு முறை இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தி உள்ளது. கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக் உள்ளிட்ட கிழக்கு மாகாணங்களில் நேற்று கடுமையான புயல் தாக்கியது. அத்துடன் இடி, மின்னலுடன் … Read more

2 நாள் பயணமாக ஜப்பான் செல்லும் மோடி.. குவாட் மாநாட்டில் பங்கேற்கிறார்.!

குவாட் நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்ல உள்ள பிரதமர் நரேந்திர மோடி, பரஸ்பர நலன்கள் தொடர்பாக தலைவர்களுடன் விவாதிக்க அந்த மாநாடு ஒரு வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள குவாட் அமைப்பின் 3ஆவது மாநாடு வரும் 24ஆம் தேதி ஜப்பானில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தனி விமானத்தில் டோக்கியோ செல்கிறார். உக்ரைன் போர், காலநிலை மாற்றம் … Read more

அதிபரை அவமானப்படுத்தும் விதமாக ட்வீட் போட்ட எதிர்கட்சி பெண் தலைவருக்கு சிறை… கொதித்தெழுந்து மக்கள் பேரணி.!

துருக்கியில், எதிர்கட்சி பெண் தலைவர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து பிரமாண்ட பேரணி நடைபெற்றது. அதிபர் எர்டோகனை அவமானப்படுத்தும் விதமாக டுவிட்டரில் பதிவிட்ட கனான் கஃப்டான்சியோகுளு-விற்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டுகள் 11 மாதங்கள் 20 நாட்கள் சிறை தண்டனை விதித்தது. இதனை கண்டித்து இஸ்தான்புலில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். துருக்கி நாட்டு சட்டப்படி 5 ஆண்டுகளுக்கு குறைவாக விதிக்கப்படும் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என்பதால் கஃப்டான்சியோகுளு சிறை செல்ல வாய்ப்பில்லை என … Read more

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி கூறிய இலங்கை பிரதமர்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 137 வகையான மருந்து பொருட்கள் என 136 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.  இதற்காக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கைக்கு தமிழக அரசு நிவாரண பொருட்களை … Read more