'ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்துபோனால்..' – எலான் மஸ்க் ட்வீட்டால் சர்ச்சை

“ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்துபோனால்… இதை அறிந்துகொண்டதும் நல்லதே” என்று எலான் மஸ்க் பதிவிட்டுள்ள ட்வீட் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைவரும் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முக்கியமானவருமான எலான் மஸ்க் அண்மையில் ட்வீட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளார். எலான் மஸ்க்கின் ட்வீட்கள் மீது எப்போதுமே தனிக்கவனம் இருக்கும். அந்த வகையில், இன்று காலை அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்துபோனால்… … Read more

90 பேர் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது ரஷ்ய படைகள் குண்டுவீசித் தாக்கியதில் 60 பேர் உயிரிழப்பு – உக்ரைன் அதிபர்

உக்ரைனின் லுஹான்ஸ்க் நகரம் அருகே சுமார் 90 பேர் தஞ்சமடைந்திருந்த பள்ளி வளாகத்தின் மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய வான் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்பட்ட நிலையில், அதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிபடுத்தியுள்ளார். இதுகுறித்து ஜி-7 நாடுகளின் தலைவர்கள் உடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசிய அவர், பிலோஹோரிவ்கா கிராமத்தில் ரஷ்யப் படையினர் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் தஞ்சமடைந்த கட்டடம் தீப்பிடித்து இடிந்து விழுந்ததாக கூறினார். இந்த சம்பவத்தில், சுமார் 60 அப்பாவி பொதுமக்கள் … Read more

போர் குற்றங்களுக்கு புதின் தான் பொறுப்பு: கனடா பிரதமர்

கீவ்: ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷிய படைகள் உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்களில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.  இந்நிலையில் நேற்று உக்ரைன் சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் மற்றும் ரஷியப் படைகளுக்கு இடையிலான கடுமையான சண்டையால் அழிக்கப்பட்ட நகரமான இர்பினை நேற்று பார்வையிட்டார். இதன்பின் உக்ரைன் தலைவருடனான செய்தியாளர் சந்திப்பில் ட்ரூடோ கூறியதாவது:- உக்ரைனில் அழிக்கப்பட்ட இர்வின் நகரை பார்வையிட்டேன். ரஷியாவின் சட்டவிரோதப் போரின் கொடூரத்தை நான் … Read more

ஜெர்மனியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்| Dinamalar

ஹானோவர் : ஜெர்மனியின் ஹானோவரில் இந்திய, இலங்கை தமிழர்கள் கட்டியுள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபாபிஷேகம் நேற்று நடந்தது. தினமலர் ஆன்மிக மலர் ‘கேளுங்க சொல்கிறோம்’ பகுதியில் பதிலளிக்கும் மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் ஜெர்மன் ஸ்ரீகுமார் குருக்கள், இந்திய, இலங்கை சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். விழாவில் மேயர் தோமஸ் ஹிரைன், பக்தர்கள் பங்கேற்றனர். ஹானோவர் : ஜெர்மனியின் ஹானோவரில் இந்திய, இலங்கை தமிழர்கள் கட்டியுள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபாபிஷேகம் நேற்று நடந்தது. தினமலர் ஆன்மிக மலர் … Read more

முதல் முறையாக நடந்த மியாமி பார்முலா-1.. பெராரி வீரர் சார்லசை பின்னுக்குத் தள்ளி மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார்..!

மியாமி பார்முலா ஒன் கார் பந்தயத்தில் பெல்ஜியம் வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார். பார்முலா ஒன் தொடரில் முதல் முறையாக நடைபெற்ற மியாமி கிராண்ட் ப்ரி பந்தயத்தில் பல்வேறு கிளப்புகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் முதலிடம் பிடித்தார். முந்தைய சுற்றுகளில் மகுடம் சூடிய பெராரி வீரர் சார்லஸ் லெக்ரெக் லேப் சுற்றில் பின் தங்கி 2-வது இடத்துக்கு இறங்கினார். தொடர் சறுக்கல்களை சந்தித்து … Read more

ஒற்றை வேட்பாளர் போட்டியிட்ட தேர்தலில் ஹாங்காங்கின் புதிய தலைவராக ஜான் லீ தேர்வு

ஹாங்காங் : ஹாங்காங்கின் புதிய தலைவராக ஜான் லீ தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் போட்டியிட்ட ஒற்றை நபர் அவர்தான். ஹாங்காங், இங்கிலாந்தின் காலனியாக இயங்கி வந்தது. ஆனால் 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஹாங்காங்கை இங்கிலாந்து ஒப்படைத்தது. அது முதற்கொண்டு ஹாங்காங், சீனாவின் இரு சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது. மற்றொன்று மக்காவ். ஹாங்காங்கை சீனாவிடம் இங்கிலாந்து ஒப்படைத்தபோது விதிக்கப்பட்ட முக்கிய நிபந்தனை, அங்கு சுந்திரம் இருக்க வேண்டும், பேச்சு சுதந்திரம் போன்ற உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க … Read more

இலங்கை பிரதமர் பதவியை ஏற்க சஜித் பிரேமதாச மறுப்பு

கொழும்பு : வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதிபருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா 2 நம்பிக்கை இல்லா தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளது. அவற்றை விரைவில் விவாதத்துக்கு கொண்டு வருமாறு சபாநாயகரிடம் அக்கட்சி வற்புறுத்தி வருகிறது. கடந்த 6-ந் தேதி நடந்த இலங்கை மந்திரிசபை கூட்டத்தை தொடர்ந்து, … Read more

சீனாவில் கூடுது கொரோனா| Dinamalar

பீஜிங் : சீனாவில் சில மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 345 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் ஷாங்காய் நகரத்தில் மட்டும் 253 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 2020 ஆம் ஆண்டைப் போல கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் … Read more

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த ஜி 7 நாடுகள் உறுதி.!

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை முழுவதுமாக நிறுத்துவதற்கு ஜி 7 நாடுகளின் தலைவர்கள் உறுதி கொண்டுள்ளனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடிய ஜி 7 நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளனர். தூண்டுதல் இல்லாமல் போரைத் தொடங்கிய ரஷ்யா ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக கடும் வன்முறையை ஏற்படுத்தி வருவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய … Read more