லைவ் அப்டேட்ஸ்: அமெரிக்க அதிபரை சந்திக்கும் நேட்டோ அமைப்பின் தலைவர்

02.06.2022 10.26: ரஷிய, உக்ரைன் போர் 100-வது நாளை எட்டியுள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆயுதம், நிதியுதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த போரில் ரஷியாவிற்கு எதிரான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் இன்று சந்திக்கவுள்ளார். 04.50: ரஷியாவிற்கு எதிராக போரிட ராணுவ ஆயுத உதவி அளிக்கும் அமெரிக்காவிற்கு உக்ரைன் வரவேற்பு தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் … Read more

முன்னாள் மனைவிக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கு: நடிகர் ஜானி டெப் வெற்றி…!

வாஷிங்டன், பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்கள் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானவர் நடிகர் ஜானி டெப். இவர் லோரி அனி அலிசன் என்ற பெண் ஒப்பனை கலைஞரை 1983-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2 ஆண்டுகள் கழித்து 1985-ம் ஆண்டு இந்த தம்பதி பிரிந்து விவகாரத்து பெற்றனர். இதனை தொடர்ந்து ஜானி டெப் திருமணம் செய்துகொள்ளாமல் பல நடிகைகளுடன் திருமணம் அற்ற உறவில் நீடித்து வந்தார். இதையடுத்து, 2015-ம் … Read more

மெக்சிகோவை தாக்கிய “அஹதா” சூறாவளி.. 11 பேர் பலி – 33 பேர் மாயம்..!

மெக்சிகோவின் தெற்கு பகுதியில் உள்ள அஹ்சகா மாகாணத்தில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மணிக்கு 169 கி.மீ வேகத்தில் வீசிய சுறாவளிக் காற்றில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து குடியிருப்புகள் சேதமடைந்தன. கடுமையான சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், பல்வேறு மாகாணங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன 33 பேரை தேடும் பணிகள் … Read more

கடுமையான பஞ்சத்தை நோக்கி செல்லும் இலங்கை…

கொழும்பு : இலங்கையில் வரலாறு காணாத வகையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிடைக்கும் பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதால் வாங்கி பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை அரசுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களும் கடனுதவி வழங்கி வருகின்றன. ஆனாலும் நாட்டின் இன்னல்களுக்கு விடை தெரியவில்லை. மக்களின் துயரங்களும் … Read more

அமெரிக்கா: மருத்துவமனையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

ஓக்லஹோமா, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனா். உவால்டே நகரில் ரோப் என்ற தொடக்கப்பள்ளியில் நடந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா். இந்த நிலையில், துல்சா நகரில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மா்ம நபா் ஒருவா் அங்கிருந்தவா் மீது சரமாாியாக துப்பாக்கிச் சூடு நடத்தினாா். … Read more

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தொடங்கி நூறு நாட்கள் நிறைவு.!

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தொடங்கி நூறு நாட்களை எட்டியுள்ளது. இந்தப் போரால் இந்தியாவில் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை கடந்த 9 மாதங்களில் திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் இந்தியப் பங்குச் சந்தையில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. யுத்தத்தால் கச்சா எண்ணெய் முதல் கோதுமை வரை அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து பணவீக்கம் உலகளவில் அதிகரித்து வருவதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டதால் டாலருக்கு எதிரான … Read more

உக்ரைன் படையெடுப்பை நிறுத்துங்கள்: புதினுக்கு வேண்டுகோள் விடுத்த கால்பந்து ஜாம்பவான்

பிரேசிலியா: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100வது நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த படையெடுப்பில் ஆயிரக்கணக்கான வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் பல நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்த போரினால் உலக அளவில் பொருளாதாரமும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த போர் மூலம் உக்ரைன் மற்றும் ரஷியாவில் இருந்து ஏற்றுமதி செய்யாமல் இருக்கும் உணவு தானியங்கள் மூலம் உலகின் பல நாடுகளில் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைன் மீதான … Read more

100-வது நாளை எட்டிய உக்ரைன் போர் : ஜோ பைடனை இன்று சந்திக்கிறார் நேட்டோ அமைப்பின் தலைவர்

வாஷிங்டன், நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள தற்போது 100-வது நாளை எட்டியுள்ளது. உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி வழங்கி வருகின்றன. குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு அதி நவீன நீண்டதூர இலக்குகளை தாக்கி அழிக்கும் ராக்கெட் அமைப்புகளை அமெரிக்கா வழங்கவுள்ளதாக நேற்று தெரிவித்தார். இந்த நிலையில் அதிபர் ஜோ பைடனை … Read more

இந்த நாட்டு இஸ்லாமியர்கள் 2022ல் Hajj யாத்திரைக்கு செல்ல மாட்டார்கள்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதிலிருந்து விடுபட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அங்கு மஹிந்த ராஜபக்சவுக்குப் பதிலாக பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து பல பெரிய முடிவுகளை எடுத்து வருகிறார். அரசின் முடிவுகளுக்கு இலங்கை மக்களும் ஒத்துழைக்கிறார்கள். அதன் முதல்கட்டமாக, இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செல்ல மாட்டார்கள். நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதிலிருந்து விடுபட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.  இலங்கையின் குடிமக்களும் இந்த மோசமான கட்டத்தில் இருந்து வெளியேற அனைத்து … Read more

ரஷ்ய ராணுவத்தின் Ka-52 வகை ஹெலிகாப்டர் சாகச முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து.!

ரஷ்ய ராணுவத்தின் Ka-52 வகை ஹெலிகாப்டர் சாகச முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாக இருந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. உக்ரைன் லுகான்ஸ்க் பகுதியில் வேவு பணியில் ஈடுபட்ட இரு Ka-52 வகை ஹெலிகாபடர்களின் பைலட்டுகள், சுற்றியிருந்த பொது மக்களிடையே ஹெலிகாப்டர்களின் அம்சங்களை எடுத்துக் காட்ட சாகச முயற்சியில் ஈடுபட்டனர். பக்கவாட்டில் சாயந்து பறந்த ஒரு ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ இருந்தது. விமானியின் துரித நடவடிக்கையால் விபத்தில் இருந்து ஹெலிகாபடர் … Read more