மாரத்தான் போட்டியில் பங்கேற்று பதக்கத்தை வென்ற வாத்து

அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட வாத்து ஒன்று பதக்கம் வெல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. long island ல் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் அழகான வெள்ளை நிற வாத்தும் மாரத்தான் போட்டியில் பங்கேற்றது. இறுதியில் அந்த வாத்து முதலிடம் வந்து பதக்கம் பெற்றது. போட்டி அமைப்பாளர்கள் அந்த வாத்துக்கு தாகம் தீர தண்ணீர் கொடுத்த து மட்டுமின்றி பதக்கத்தையும் அணிவித்து மகிழ்ந்தனர். Source … Read more

கருப்பின செய்தி தொடர்பாளர் வெள்ளை மாளிகையில் நியமனம்| Dinamalar

வாஷிங்டன்:வெள்ளை மாளிகையின் வரலாற்றில் முதல்முறையாக கருப்பினத்தை சேர்ந்த பெண், செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளராக ஜென் சாக்கி உள்ளார். இவரது பதவிக் காலம் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, புதிய செய்தி தொடர்பாளராக கேரைன் ழான்பியர், 44, என்ற கருப்பினத்தை சேர்ந்த பிரெஞ்ச் – அமெரிக்க பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.வெள்ளை மாளிகை வரலாற்றில் இந்த பதவியை வகிக்கும் முதல் கருப்பின பெண் என்ற பெருமையை கேரைன் பெற்றுள்ளார். இவர், ‘கே’ எனப்படும், … Read more

விளம்பர படத்தில் நடித்தவர் சுட்டுக்கொலை| Dinamalar

லாகூர்:பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ரெனலா குர்த் ஒகாரா நகரை சேர்ந்தவர்சிட்ரா21. இவர் உள்ளூர் ஜவுளிக்கடை விளம்பரத்தில் மாடலாக நடித்திருந்தார். மேலும் பைசலாபத் நகரில் தங்கியிருந்து தியேட்டரில் நடனம் ஆடி வந்தார். இது பாரம்பரியத்துக்கு எதிரானது என குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட சிட்ரா வீட்டுக்கு வந்துஇருந்தார். அப்போது குடும்பத்தினருடன் வாக்குவாதம் ஏற்படவே சிட்ராவை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதையடுத்து போலீசார் ஹம்சாவை கைது செய்தனர். லாகூர்:பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் … Read more

உக்ரைனுக்கு மேலும் 150 மில்லியன் டாலர் நிதி உதவி – அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தலைநகர் கீவை கைப்பற்றியாக வேண்டும் என போராடியது. ஆனால் உக்ரைன் படைகளின் பலத்த எதிர்ப்பால் அது கானல் நீரானது. இதையடுத்து, மரியுபோல் நகர் மீது ரஷியா பார்வையை பதித்தது. போர் தொடுத்த நாள் முதல் அங்கு முற்றுகையிட்டது. அந்த நகரின் மீது ஏவுகணை தாக்குதலும், குண்டுவீச்சும் நடத்தி பெரும்பாலான கட்டிடங்களை சேதப்படுத்தி உருக்குலைய வைத்தது. அந்நகரை கைப்பற்றி விட்டதாக அதிபர் புதின் அறிவித்தபோதும், கடைசி கோட்டை போல அந்த … Read more

இலங்கை பார்லிமென்ட் நள்ளிரவில் முற்றுகை| Dinamalar

கொழும்பு:நேற்று முன்தினம் நள்ளிரவில், இலங்கை பார்லிமென்ட் கட்டடத்திற்கு வெளியே ஏராளமானோர் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு, அத்தியாவசியப் பொருட்கள் சப்ளை பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்துள்ளது.இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் அலுவலகத்திற்கு வெளியே, போராட்டக்காரர்கள் ஒரு மாதமாக … Read more

பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் நடிகர் மீது முன்னாள் மனைவி புகார்| Dinamalar

வாஷிங்டன்:’ஹாலிவுட்’ நடிகர் ஜானி டெப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், உடைந்த மது பாட்டிலால் என் முகத்தை கிழித்து விடுவேன் என மிரட்டியதாகவும், அவரின் முன்னாள் மனைவியும், நடிகையுமான ஆம்பர் ஹேர்ட், நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.‘ஹாலிவுட்’ நடிகர் ஜானி டெப், 58, ‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படம் வாயிலாக பிரபலம் அடைந்தார். இவர், நடிகை ஆம்பர் ஹேர்ட், 36, என்பவரை காதலித்து 2015ல் திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017ல் விவாகரத்து பெற்றனர்.இந்நிலையில், … Read more

கியூபா ஓட்டலில் வெடிவிபத்து – 8 பேர் பரிதாப பலி

ஹவானா: வட அமெரிக்க நாடான கியூபாவின் தலைநகர் ஹவானாவில் சரடோகா என்ற ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.  இந்த ஹோட்டல் நேற்று காலை வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஹோட்டலில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில் ஹோட்டலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தகவலறிந்து மீட்புக்குழு அங்கு விரைந்து சென்றது. இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த பலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 30 பேர் … Read more

விமான அவசரகால கதவை திறந்து வெளியே குதித்த பயணி கைது| Dinamalar

நியூயார்க்:அமெரிக்காவில், ஓடுபாதையில் தரையிறங்கிய, ‘யுனைடெட் ஏர்லைன்ஸ்’ விமானத்தின் அவசரகால கதவு வழியாக வெளியேறி, இறக்கை மீது சறுக்கிச் சென்று குதித்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவில், சான்டியாகோ நகரில் இருந்து, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணியர் விமானம் ஒன்று, நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 மணிக்கு, சிகாகோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கியது.அந்த விமானம், நிறுத்தும் இடத்தை நோக்கி மெதுவாக சென்றபோது, ராண்டி பிரான்க் டேவிலா, 57, என்ற அமெரிக்கர், அவசரகால கதவை திறந்து … Read more

கஞ்சன்ஜங்கா உச்சியில் இந்திய மலையேற்ற வீரர் உயிரிழப்பு

காத்மாண்டு: இந்திய மலையேற்ற வீரர் நாராயணன் ஐயர் (52) உலகின் மூன்றாவது உயரமான சிகரமான கஞ்சன்ஜங்காவில் ஏறும்போது உயிரிழந்தார். உலகின் உயரமான 8 சிகரங்கள் நேபாளத்தில் உள்ளன. சூடான சீதோஷ்ணநிலையும், அமைதியான காற்றும் வீசும் வசந்தகால மலையேற்றத்திற்காக நூற்றுகணக்கான மலையேறும் வீரர்கள் இமயமலைக்கு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய மலையேற்ற வீரர் நாராயணன் ஐயர், நேபாளத்தில் இருக்கும் உலகின் மூன்றாவது உயரமான சிகரமான கஞ்சன்ஜங்காவில் வசந்தகால மலையேற்றத்தில் ஈடுப்பட்டிருந்தார். வியாழக்கிழமை சிகரத்தின் உச்சியை அடையும் நேரத்தில் 8,200 … Read more

கொலையாளிகளை பிடிப்பதில் இஸ்ரேல் தீவிரம்| Dinamalar

ஜெருசலம்:இஸ்ரேலின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. டெல் அவிவ் அருகே உள்ள இலாத் நகரின் மையத்தில் ஏராளமானோர் கூடி கலை நிகழ்ச்சிகளை ரசித்தனர். அப்போது கூட்டத்திற்குள் புகுந்த இருவர் திடீரென எதிரே இருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பியோடினர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர்; நான்கு பேர் காயமடைந்தனர்.இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், ” கத்திக் குத்து சம்பவத்துக்கு பயங்கரவாதிகள் உரிய விலை கொடுக்க நேரும்,” என, எச்சரித்துள்ளார். … Read more